ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தமிழ் நாட்டுக் கோவில்கள்


22-10-12 தேதிய பின் குறிப்பு: எல்லோரும் அறிவதற்காக முன்குறிப்பாக போட்டுள்ளேன். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஒரு மிக நல்ல லிங்க் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். தினமலர் தொகுத்த தமிழ்நாட்டுக் கோவில்களின் 360 கோணப் படங்கள். அருமையான செய்தி. எல்லோரும் உபயோகித்து பயன் பெற வேண்டுகிறேன். நண்பர் தனபாலனுக்கு மிக்க நன்றி.



பல நாட்களுக்கு முன் நண்பர் GMBalsubramanian அல்லது V.Gopalakrishnan அவர்கள் ஒரு இணையப் பக்கத்தின் லிங்க் அனுப்பியிருந்தார்கள். அந்த லிங்கில் போய்ப் பார்த்தால் மைசூர் மகாராஜா அரண்மனையின் முழு வியூவும் 360 டிகிரி கோணத்தில் தத்ரூபமாகப் பார்க்க முடிந்தது. என் கம்ப்யூட்டர் திருவிளையாடல்களில் அந்த லிங்கைத் தொலைத்து விட்டேன். யாருக்காவது அந்த லிங்க் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவர்களுக்கு நான் ஏழு தலைமுறைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். (எட்டாவது தலைமுறையில் நன்றி தெரிவிக்க மாட்டேன். ஏனென்றால் அப்போது நான் என்னவாகப் பிறவியெடுப்பேன் என்று தெரியாது.)

இந்த லிங்கை கூகுளில் தேடிக்கொண்டிருந்தபோது இன்னொரு லிங்க் கிடைத்தது. தமிழ்நாட்டிலுள்ள அநேகக் கோவில்களின் 360 டிகிரி வியூ அந்த தளத்தில் இருக்கிறது. இதோ அந்த லிங்க்:

http://view360.in/gallery.html

இந்த 360 டிகிரி தொழில் நுட்பம் ஒரு அருமையான போட்டோகிராபி டெக்னிக். இதனுடைய நுணுக்கங்களை நமது தொழில் நுட்பப் பதிவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். இந்த தொழில் நுட்பத்தில் அநேக இடங்களைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

நமது தமிழ் நாட்டிலுள்ள கோவில்களுக்குப் போக முடியாதவர்கள் அல்லது ஏற்கனவே பார்த்தவர்களும் இந்தப் போட்டோக்களைப் பார்த்தால் பரவசமடைவர். மற்ற மாநிலக் கோவில்களின் லிங்க்கும் இந்த தளத்தில் இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் சென்று பார்த்து பயனடைய வேண்டிக்கொள்கிறேன்.

21 கருத்துகள்:

  1. பயனுள்ள அருமையான பதிவு
    தாங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற
    உடன் பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஒரு புதிய பகிர்வுக்கு நன்றி! கோயில்கள் காட்சி! கண்கொள்ளா காட்சி!

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருந்தது! அருமை! ஒரு சில இடங்களைத் தவிர முக்கால் வாசி இடங்களுக்கு சென்றுள்ளேன்! அந்த நாள் ஞாபகம்!

    http://view360.in/gallery.html

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள் நீங்கள் தொலைத்த லிங்க் என்னிடம் இல்லை ஐயா......

    பதிலளிநீக்கு
  5. GMBalsubramanian ஐயா- அந்த லிங்கை எனக்கும் அனுப்பியிருந்தார் ..

    பதிலளிநீக்கு
  6. காசு செலவில்லாமல் பல இடங்களை சுற்றிப்பார்க்க வழி செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் லிங்க் பயனுள்ளது. பார்த்து மகிழ்கின்றேன். மிக்கநன்றி.

    சில வருடங்களுக்கு முன் எனது சகோதரர் கனடாவிலிருந்து குற்றாலம்,மதுரை மீனாட்சி, தஞ்சைக்கோயில் உட்பட பலவற்றை அனுப்பி இருந்தார்.அப்போது பார்த்து மகிழ்ந்தேன். இப்போது தொலைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. உங்களது லின்க் பயனுள்ளதாக இருக்கும். சேமித்து வைத்து விட்டேன்..

    மைசூர் அரண்மணைக்கான லின்க் கிடைத்தால் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஜெயதேவ் தாஸ் அனுப்பியிருக்கிறார். பாருங்கள் நாகராஜ்

      நீக்கு
  9. 360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி?

    ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.

    கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.
    கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

    நன்றி : தினமலர்...


    கீழே 50 கோவில்களின் இணைப்புகளை (லிங்க்) கொடுத்துள்ளேன். பிடிததவற்றை பார்க்கவும்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    01. மீனாட்சி கோயில் மதுரை

    02. நடராஜர் கோயில் சிதம்பரம்

    03. பார்த்தசாரதி கோயில் சென்னை

    04. ஏர்வாடி தர்கா ராமநாதபுரம்

    05. ஆரோக்கியமாதா தேவாலயம் வேளாங்கண்ணி

    06. நாகூர் தர்கா நாகப்பட்டினம்

    07. லூர்து அன்னை திருத்தலம் வில்லியனூர்

    08. ஹாஜிமார் பெரிய பள்ளிவாசல் மதுரை

    09. வியாகுல அன்னை பேராலயம் மதுரை

    10. ஜூம்மா பள்ளிவாசல் பனைக்குளம்

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    தாங்கள் கொடுத்த இணைப்பிற்கு மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. மிக நல்ல தகவல், தனபாலன். எல்லோருக்கும் (என்னையும் சேர்த்து)உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
  11. பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தினமலர் பக்கத்தில் அவ்வப்போது கவனித்திருக்கிறேன். திண்டுக்கல் தனபாலன் ஏகப்பட்ட லினக்ஸ் தந்து அசத்தி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு