சனி, 13 அக்டோபர், 2012

இன்றைய நாட்டு நடப்பு


இன்றைக்கு புரட்டாசி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். எப்படியாவது ஒரு நல்ல செய்தியுடன் ஒரு பதிவு போடலாம் என்று தினத்தந்தி செய்தித்தாளைப் படித்தேன. என்னுடைய அல்லது உங்களுடைய துரதிர்ஷ்டம் இந்த செய்திகள்தான் கிடைத்தன.

1.  கோபியில் ஈமு பண்ணை நடத்தி 8 கோடி மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேர் கைது.
 
2.  கடன் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

3.  திருமணம் செய்வதாகக் கூறி பத்தாவது படிக்கும் மாணவியை கர்ப்பிணியாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் தலைமறைவு.

4. சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் ஏமாற்றிய "அப்ரோ" நிறுவனர் ஏசுதாஸ் கைது.

5.  வணிக வளாக லிப்டில் ஓவர் லோடு ஆட்கள் ஏறினதில் லிப்ட் ஒரு மணி நேரம் நின்றது.

6.  குடி போதையில் 3 வயது குழந்தையைத் தவிக்கவிட்ட தந்தை.

7.  பைனான்ஸ் கம்பெனி ஏஜண்டின் கணவர் அவமானம் தாங்காமல் தற்கொலை.

8.  15000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.

9.  போர்ஜரி கடிதம் கொடுத்து அரசு மான்யத்தை சுருட்டிய மத்திய மந்திரி சல்மான் குர்ஷீத்.

நான் ரொம்ப நல்ல எண்ணத்துடன்தான் பேப்பரைப் படித்தேன். என் கண்ணில் பட்ட செய்திகள் இவை. வேறு நல்ல செய்தி ஏதாவது உங்கள் கண்களில் பட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

19 கருத்துகள்:

  1. நல்ல செய்தி ஏதாவது ஒன்னு கண்டு புடிச்சி சொல்லிடனும்னு பேப்பரைத் தேடினேன்.பேப்பர் கிடைக்கல சார்.

    பதிலளிநீக்கு
  2. மதுரை நகரில் ஒரு வாரமாக தினமும் 14 முதல் 16 மணிநேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. போன வருடம் 8 மணிநேர மின்வெட்டு ஆரம்பித்தபோது முதல்பக்கம் தலைப்புச்செய்தியில் அலறிய நாளிதழ்கள் இப்போது 8 மணிநேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது என்பதை ஏனோ கண்டுகொள்ளாமல் 'இருட்டடிப்பு' செய்வதால் இந்த நல்ல செய்தியை நீங்கள் எந்தப் பத்திரிகையிலும் படித்திருக்க முடியாது :-))

    (இந்த இடைப்பட்ட காலத்தில் அம்மா ஆட்சியின் 'ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனை' விளம்பரங்களை அரசு மாதக்கணக்கில் பத்திரிகைகளுக்கு அள்ளிக்கொடுத்து திக்குமுக்காடச் செய்துவிட்டதற்கு, பாவம் அந்தப் பத்திரிகைகளா பொறுப்பு?}

    சரவணன்

    பதிலளிநீக்கு
  3. இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் இப்படிப்பட்ட செய்திகள் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.
    சில வேளை உலகில் ஏமாறுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. இன்னைக்கு மட்டும்னு இல்ல எப்போ பேப்பரைத் திறந்தாலும் இதே மாதிரி திகிலூட்டும் செய்தியதான் போடறாங்க. நல்லாதா போட நாட்டில் செய்தியே இல்லை. முன்பெல்லாம் தினமலர் தினமும் படிப்பேன். இதே மாதிரி பார்த்து பார்த்து வெறுத்து போய் இப்போவெல்லாம் படிக்கிறதையே விட்டுட்டேன். ஏன்னா, அது மனசை ஆழமாபாதிச்சு விசனத்தை உண்டாக்கிடுது. முக்கியமா காவிரிப் பிரச்சினை, சுற்று சூழல் பாதிப்பு போன்ற செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எப்படி மனசை தேத்திக் கொள்வது என்று ஐயா யோசனை இருந்தால் சொல்லவும். [நீங்க போட்டதில் முதல் செய்தி நல்ல செய்திதானே!! ஆளுங்க சிக்கிட்டாங்க, சீக்கிரம் பணமும் சிக்கிடும், முதல் போட்டவங்களுக்கு கொஞ்சமாச்சும் பணம் திரும்ப வரும்!! என்னது, கடல் எப்ப வைத்தும் கருவாடு தின்னலாம்னு வெயிட் பண்ணப் படதா.......... அய்யய்யோ....... ]

    பதிலளிநீக்கு
  5. தினமலர் படிப்பதில்லையா? கருணாநிதி போன பிறகு நாடே சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிச்சம் இல்லாததினால சந்தோஷம் எது கஷ்டம் எதுன்னு வெளங்க மாட்டேங்குதுங்க.

      நீக்கு
  6. பத்திரிகைகள்,செய்திகளில் இவைதான் முன்னணி வகிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. அடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது). துணை முதல்வராக உங்கள் மனம் கவர்ந்த தலைவன் அன்புமணி நியமிக்கப்படுவார்.
    எந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார். (பெரும்பாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார் ஜெயாவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும்-மகளிர் விவகார அமைச்சர்)

    தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )

    பதிலளிநீக்கு
  8. இது மாதிரி நெகட்டிவ் செய்திகளால் மனம் வெறுத்துதானே 'எங்கள் ப்ளாக்'கில் சனிக் கிழமை தோறும் அந்தந்த வாரங்களில் படிக்கும் பாசிட்டிவ் செய்திகளைப் பகிர்கிறோம்? பார்ப்பதில்லையா சார்? இன்றைய செய்தித் தாளில் கூட மரம் நடும் போக்குவரத்துக் கழக ஊழியர் பற்றிய செய்தியையும் பார்த்து, பகிர்ந்துள்ளோம். சனிக்கிழமைகளில் அல்லது சனிக்கிழமைகளிலாவது (!) 'எங்கள்' பக்கம் வரவும்! :))

    பதிலளிநீக்கு
  9. திருடுவதும், ஏமாற்றுவதும்,துரோகம் செய்வதும் வியாபார தந்திரமாக உலகம் ஏற்றுக்கொள்ளபட்ட நிலையில், நல்ல செய்தி கெட்ட செய்தி என்பதற்கான அர்த்தம் மாறிபோனது. இனி நல்ல செய்தி என்பது திருமண பத்திரிக்கை செய்தி மட்டுமே. மற்ற அனைத்தும் சாமர்த்திய செய்திகள்தான். எதுவும் கெட்ட செய்தியல்ல. உலகத்தின் போக்கில் நாம்தான் மாற வேண்டும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. கருத்துகள் கூறிய அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. என்ன செய்ய முடியும்? இந்த சூழ்நிலையிலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நாளை காலம் மாறாதா என்ற ஏக்கத்துடன்தான் அனைவரும் வாழ்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  11. நிறைய பாசிடிவ் செய்திகள் இருந்தாலும் பத்திரிக்கைகள் விற்பனையை கூட்டுவதற்காக எதிர்மறையான செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. மக்களை எச்சரிக்கும் விதமாக பத்திரிக்கைகள் இச்செய்தியை வெளியிடுகின்றன என்று பாசிட்டிவாக நாம் எடுத்துக்கொள்ளவேன்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா ஒரு நல்ல செய்தி ::-நில மோசடிகளை அம்பலப்படுத்தியதற்காக கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டியும், அரியானா தலைமைச் செயலாளருக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் அசோக் கெம்கா. இவர் சமீபத்தில் மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரியானா மாநிலத்தில் பல நூறு கோடி மதிப்பிலான கிராமப்புற நிலங்கள், ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களுக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கொடுத்த தொகை என்னவோ மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மிகக்குறைவான தொகைக்கு இந்த நிலங்கள் கைமாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து தலைமைச் செயலாளர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

    மேலும், இது போன்ற ஊழல்களை வெளிக்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் அடிக்கடி இட மாற்றம் செய்யப்படுவது தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இது போன்ற பல நிலமோசடிகளை வெளிக்கொண்டு வந்த தான், கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தன்னைப்போன்ற அதிகாரிகளை இனியும் மாநில அரசு இழிவுபடுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ள கெம்கா, தற்போதைய ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக தானும், தனது குடும்பத்தினரும் தாக்கப்படலாம் என்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் வதேரா இடையேயான பரிவர்த்தனையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இது போன்ற ஏகப்பட்ட நிலமோசடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

    பதிலளிநீக்கு
  13. புரட்டாசி மாசத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிட்னி முருகன் கோவிலில் அன்னதானம் போட்டார்கள். (ஒன்றையும் தவறவிடவில்லை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் ரொம்ப ரொம்ப நல்ல செய்தி. அடுத்த வருஷம் நானும் வந்துடறேன். சிட்னி இங்க கோயமுத்தூருக்குப் பக்கத்திலதான இருக்கு?

      நீக்கு
  14. திரு முத்துக் குமரன் அவர்களே அது எப்படி கல்யாண பத்ரிக்கை நல்ல செய்தி என்று கண்டிப்பாக கூறுகிறீர்கள் .......நல்ல செய்தியாகவும் இருக்க வாய்ப்புண்டு .....இந்த செய்திகள் நம்மை திருத்திக்கொள்ள வைப்பு அளிக்க என்று நினைத்தால் மீண்டும் மீண்டும் அதிக ஆசைப் பட்டு பணத்தை முட்டாள்தனமாக மூலதனமிட்டு முழுதும் இழந்த செய்திகள் தானே அடிக்கடி காண்கிறோம்......யாரைக் குறை சொல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகோபால் சார், நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி மங்களகரமாக வரும் செய்திதான் கல்யாண பத்திரிக்கை என்பதால்தான் அதை நல்ல செய்தி என்று சொன்னேன். மற்றபடி நீங்கள் சொல்வது போல் தம்பதிகளுக்கு நல்ல செய்தியாகவும் இருக்க வாய்ப்புண்டு. கலியுகத்தில் திருமணமும் வியாபாரம் தானே..?

      நீக்கு