திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு


வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி
இப்பொழுதுதான் புதுக்கோட்டையிலிருந்து திரும்பினேன். பதிவர் திருவிழா பற்றி அடுத்த பதிவர் திருவிழா வரை எழுதுவதற்கு சமாச்சாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கொட்டி அவியல் பண்ணினால் தனித்தனி நிகழ்ச்சிகளின் சுவை தெரியாமல் போய்விடும் அல்லவா?

அதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். (எனக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கூடவேண்டும் அல்லவா?

முதலில் இந்த மாகாநாட்டின் மொத்த விளைவைக் கூறுகிறேன். விழா மகத்தான் வெற்றி. திரு கவிஞர் முத்து நிலவனுக்கும் அவருடன் பணியாற்றிய விழாக்குழுவினர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைக்கு சில படங்கள் மட்டும் . மற்ற விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரும்.


விழா நாயகன் கவிஞர் முத்து நிலவன்


வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்


வருகைப் பதிவு மும்முரமாக நடைபெறுகிறது


இவங்கதான் விழாவின் வெற்றிக்கு முழுக் காரணம்
(உணவுக் குழுத் தலைவி)

சகோதரி ஜெயலட்சுமி

35 கருத்துகள்:

  1. என்னங்க மேடை ஏறினதும் சட்டுபுட்டுன்னு ஒடிட்டீங்க நீங்களெல்லாம் கொஞ்சம் நிறைய பேசுவீங்கன்னு எதிர்பார்த்து இரவு முழுவதும் முழித்து இருந்து பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடையில் பேசுவதற்கு சில வரை முறைகள் உண்டு. சுய அறிமுகம் செய்ய மேடையில் ஏற்றினார்கள் என்றால் சுய அறிமுகத்தோடு நின்று விடவேண்டும். அதற்கு மேல் என்ன பேசினாலும் அதற்கு மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்காது. பத்தோடு பதினொன்று என்றுதான் போய்விடுமே தவிர அந்த பேச்சை யாரும் ஆழமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் நான் சுய அறிமுகத்தோடு நிறுத்தி விட்டேன்.

      நேற்று மேடையில் பேசினவர்களில் முதலில் பேசிய ஒருங்கிணைப்பாளரைத் தவிர, வேறு ஒருவரும் நல்ல பேச்சாளர்களாக இல்லை என்பது என் கருத்து. அது ஒரு வருந்தத்தக்கதாகவும் அமைந்து விட்டது. இதில் விழாக்குழுவினர் ஏதும் செய்வதற்கில்லை.

      நீக்கு
    2. அய்யா வணக்கம். பதிவர் விழா அறிவிப்பிலிருந்தே தங்களைப் போலும் மூத்த முன்னோடிப் பதிவர்களின் உற்சாகப் பதிவுகளால் நெகிழ்ந்துபோய் எங்கள் பணிகளை இயன்றவரை திட்டமிட்டு இயன்றவரை செயல்படுத்தினோம். தாங்கள் முதல்நாளே வந்திருந்து, சிரமங்களை வெளிப்படுத்தாமல், இதில்உள்ள நன்மைகளை மட்டுமே பார்த்து, விழாவை வெற்றி விழாவாக மாற்றியது தங்களைப் போலும் சான்றோர்கள்தான் அய்யா. தங்கள் அன்பின் பதிவை (பத்திரிகைச் செய்தி தருவது உள்ளிட்ட உடனடிப் பணிகள் காரணமாக) தாமதமாக மாகவே பார்க்கும் படி நேர்ந்தமைக்கு மன்னியுங்கள். பதிவர்கள் அன்பின் விரிவுதான் இந்த விழா வெற்றி. இதைத் தங்கள் மொழியில் கேட்க மனம் நிம்மதி அடைகிறோம். தங்கள் பதிவுக்கு விழாக்குழுவின் நன்றி நன்றி நன்றிகள்!

      நீக்கு
  2. தாங்கள் நல்லபடியாக ஊர் போய்ச்சேர்ந்தது கேட்க மிக்க மகிழ்ச்சி.

    நேற்றைய புதுக்கோட்டை நிகழ்ச்சிகளில் சுமார் 75% காணொளியில் கண்டு மகிழ்ந்தேன்.

    நடுவில் மதியம் 1 மணி முதல் 3.30 மணி வரை நடந்த நிகழ்ச்சிகளைக் காண முடியவில்லை. யாரோ ஒரு பெண் பாட்டுப்பாடிக்கொண்டே இருந்தார்கள்.

    மொத்தத்தில் எல்லாமே மிகவும் அருமையாகத் திட்டமிடப்பட்டு வெகு அழகாகவே நடைபெற்றுள்ளன. குறையொன்றும் இல்லை.

    தங்களின் அறிமுகம் மட்டுமே கம்பீரமாகவும், தெளிவாகவும், ரத்தின சுருக்கமாகவும் ரசிக்கும் படியும் இருந்தது.

    வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி போல, தாங்களே இந்த விழாவினைப் பாராட்டி எழுத ஆரம்பித்துள்ளதே, புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்பதே என் கருத்து.

    தங்களின் பதிவுகள் தொடரட்டும் ...... அடுத்த பதிவர் சந்திப்பு வரை. :)

    விழாக் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தங்களின் அறிமுகம் மட்டுமே கம்பீரமாகவும், தெளிவாகவும், ரத்தின சுருக்கமாகவும் ரசிக்கும் படியும் இருந்தது. வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி போல, தாங்களே இந்த விழாவினைப் பாராட்டி எழுத ஆரம்பித்துள்ளதே, புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்பதே என் கருத்து“ - ஆமாம் அய்யா, “இரண்டு வசிஷ்டர்கள்” எங்களை வாழ்த்துகிறார்கள் எனும் போது, இன்னும் சில ஆண்டுகள் பணியாற்றும் சக்தி கிடைத்திருக்கிறது அய்யா! இந்த வெற்றி, தங்களைப் போலும் மூத்தோர்களின் ஆலோசனை கேட்டு நடந்த இளையோர்களின் செயலூக்கத்திற்கான வெற்றி என்பதே சரியானது நன்றி தங்களிருவருக்கும்.

      நீக்கு
  3. தொடர்கின்றேன். போன மாநாடு நினைவுக்கு வந்தது., இந்தமுறை கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கலை :-(

    பதிலளிநீக்கு
  4. எதிர்பாராதகாரணத்தால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை... தவவலும் அளிக்க இயலவில்லை... மன்னிக்கவும்..

    சிவபார்க்கவி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான நிகழ்வு. தங்களை நேரில் சந்தித்ததும் மகிழ்ச்சி.
    த ம 3

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் எங்கள் ஊராம் திருச்சி வழியாக புதுக்கோட்டைக்குச் சென்றதால் தங்களை என்னால் வரவேற்று என் இல்லத்தில் சந்தித்துப் பேசி மகிழும் பாக்யம் மீண்டும் கிடைத்தது. 10.10.2015 அன்று நிகழ்ந்த நம் சந்திப்பினைப்பற்றி ஓர் தனிப்பதிவு படங்களுடன் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html

    தலைப்பு: பதிவர் சந்திப்பு 2015 .. சூடான சுவையான செய்திகள்.. [புதுக்கோட்டை via மலைக்கோட்டை]

    இது தங்களின் வலைத்தளப் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் நட்புக்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  7. ஐயா

    இப்படி சுருக்கமான ஒரு பதிவைப் போட்டு ஏமாற்றி விட்டீர்கள். வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் திரும்பி வீடு சேர்ந்தது வரை உள்ள விரிவான ரிப்போர்ட் வீட்டுக்காரம்மாவுக்கு கொடுத்தீர்கள் அல்லவா.அதைப் பதிவேற்றினால் நாங்களும் கொஞ்சம் ரசிப்போம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. இந்த தடவையும் தங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. அதனாலென்ன.கோவை வரும்போது அவசியம் சந்திக்கிறேன். வலைப்பதிவர் விழா படங்கள் அருமை. விரிவான பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நேரலையில் நான் பார்த்த நேரங்களில் அறிமுகமான பதிவர்கள் காணக் கிடைத்தது குறைவு. உங்களை திரு செல்லப்பா அவர்களின் முகநூல் பகிர்வில் பார்த்தேன். டிடியை நேரலையில் மேடையில் பார்த்தேன்.

    தொடரும்போது வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மனம்நிறைந்த நன்றி அப்பா...உரிமையோடு நீங்க வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு எழுதுவது பெருமையாக உள்ளது... விழா பற்றி நாங்கள் எழுதுவதை விட கலந்து கொண்டவர்கள் தான் எழுத வேண்டும்..அப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK >>>>> Mrs. Geetha Madam

      முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் என்னை என் வீட்டினில் 10.10.2015 சந்தித்தபோது, தங்களின் சேவைகளை என்னிடம் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

      அவர் தான் தங்குமிடம் பற்றி, தங்களிடம் விடியற்காலை வேளையில், ஒரு நாள் மெயில் அனுப்பி கேட்டபோது, தங்களிடமிருந்து உடனடியாக சாதகமான பதில் வந்ததாம். மிகவும் ஆச்சர்யப்பட்டாராம்.

      இதைக்கேட்ட எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. இந்த இனிய விழாவினில் தங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு + அர்ப்பணிப்பை எண்ணி எண்ணி வியந்து போனேன். பாராட்டுகள் + வாழ்த்துகள் மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. அனைவரும் முழு ஈடுபாட்டுடன் இதே சிந்தனையாகவும் செயலாகவும் இருந்ததால் தான் இந்த வெற்றி சாத்தியமானது சார்.அதுவும் அப்பா மூத்தபதிவர்கள் விழாவில் கலந்து கொள்வது என்பது எங்களுக்கு மிகவும் பெருமையான ஒன்றல்லவா...சார்

      நீக்கு
  11. விழாக்கண்டு வெற்றியோடு திரும்பியதற்கு வாழ்த்துகள்/தங்களின் பதிவுகள் தொடரட்டும் ...... அடுத்த பதிவர் சந்திப்பு வரை./ நானும் வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  12. ஆஹா தொடங்கி விட்டீர்களா ? ஐயா தொடர்கிறேன்
    (எனக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கூடவேண்டும் அல்லவா ?) ரசித்தேன்
    தமிழ் மணம் 66

    பதிலளிநீக்கு
  13. வர இயலாமல் போய்விட்டது! உங்களின் தொடர்ச்சியான பதிவுகளை காண ஆவலாக உள்ளேன்!

    பதிலளிநீக்கு
  14. புகைப்படங்கள் பளிச்
    சுருக்கமாக எனினும் மிக மிக அருமையாக...
    அடுத்த பதிவையும் புகைப்படங்களையும்
    ஆவலுடன் எதிர்பார்த்து....

    பதிலளிநீக்கு
  15. அய்யா இன்று காலை உங்களுடன் போனில் பேசியவுடனேயே இந்த பதிவைப் படித்து விட்டேன். சில உள், வெளி வேலைகள். அதனால் சட்டென்று கருத்துரை எழுதவில்லை. உங்களச் சந்தித்ததையும், உங்களோடு படம் எடுத்துக் கொண்டதையும் நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இதன் தொடர்ச்சியான உங்களது பதிவுகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நேற்று எனக்கு வகுப்புகள் இருந்ததால் நேரலை பார்க்கமுடியவில்லை .
    எனினும் விழா வெற்றிகரமாக நடந்தது மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அய்யா! உங்கள் பதிவைப் பார்த்தவுடன் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அய்யா! பரிசு என்பது ஒரு பொருளாகதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லைதான் .அது ஒரு அழகான கண்ணோட்டம்...உங்கள் வாழ்த்து என் வாழ்வின் கொடை! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  18. தங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  19. வந்த முதல் இருந்தவரை உதவிக் கரம் தந்த தங்கள் அன்பை நான் என்றும் மறவேன் நன்றி முளைவரே!

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    எனக்கு இப்போது ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

    தாங்கள் பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்குச் செல்லும்போது, தங்களுக்கு சிறப்புச் சேவைகள் செய்து உதவிய ஒரு குறிப்பிட்ட பெண்மணிக்கு, கோயம்பத்தூர் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆன ‘மைசூர் பாக்’ கால் கிலோ டப்பா அளிக்கப்போவதாக என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றீர்கள்.

    அந்த மாபெரும் விழாக் கும்பலில் அவர்களைத் தனியாக சந்தித்து ’மைசூப் பாக்’ பாக்கெட்டை தங்களால் அவர்களிடம் கொடுக்க முடிந்ததா? இதற்கு விடை தெரியாமல் என் மண்டையே வெடித்து விடும் போல உள்ளது.

    தாங்கள் எனக்குத்தந்த ’மைசூர்பாக்’ பாக்கெட்டை இப்போதுதான் பிரித்து நாங்கள் சாப்பிட்டு மகிழ்ந்தோம். சூப்பரோ சூப்பர் ஸ்வீட். டேஸ்டோ டேஸ்ட். நாக்கில் வைத்ததும் உள்ளே போவதே தெரியாமல் அப்படியே நெய் மணத்துடன் வழிக்கிக்கொண்டு சென்று மகிழ்வித்தது.

    என் சுகர் லெவல் ஏறினாலும் பரவாயில்லை என்று முழுசாக இரண்டு மட்டும் எனக்காகவே எடுத்துக்கொண்டு நான் அவற்றை ரஸித்து ருசித்து ஃபினிஷ் செய்யும் போதுதான், எனக்கு அந்த தாங்கள் வைத்திருந்த இன்னொரு பாக்கெட் பற்றி சொன்ன ஞாபகம் வந்தது.

    என் மண்டை வெடிப்பதற்குள் பதில் அளிக்கவும்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்த ஸ்வீட் பாக்கெட்டை எப்படி திருமதி. கீதா அவர்களிடம் மற்றவர்கள் கவனத்தைக் கவராமல் கொடுப்பது என்று சிந்தித்துக்கொண்டேதான் புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை பஸ் ஸ்டேண்டில் இறங்கி ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு விழா நடக்கும் மண்டபத்திற்குப் போனேன். அங்கு வாசலிலேயே திருமதி கீதா அவர்கள் தன் வீட்டிற்கு ஏதோ காரியமாகப் போவதற்கு அவர்களுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு என்னை வரவேற்றார்கள். அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. அந்த தருணத்தில் நான் ஸவீட் பாக்கெட்டை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதை வாங்கி நன்றி சொல்லிவிட்டு தன் கைப்பையில் வைத்துக்கொண்டார்கள். இந்தப் பரிவர்த்தனை காதும் காதும் வைத்தமாதிரி யார் கண்ணிலும் படாதவாறு நிகழ்ந்தது என் நல்ல காலமே.

      பிறகு அவர்கள் என்னை மண்டபத்திற்குள் அழைத்துப்போய் திரு. முத்து நிலவனிடம் அறிமுப்படுத்திவிட்டு, ஒரு தொண்டரிடம் என்னை எனக்கு ரூம் போட்டிருக்கும் லாட்ஜ்ஜில் விடச்சொன்னார்கள். அவர் என்னை தன் வாகனத்தில் ஏற்றிப்போய் லாட்ஜ் வாசலில் இறக்கி விட்டார்.

      இந்தக் காரியங்களெல்லாம் clockwork precision என்பார்களே அந்த மாதிரி கனகச்சிதமாக நிறைவேறினது கடவுள் கிருபையாலும் தங்கள் தரிசன விசேஷத்தாலுமே என்று நம்புகிறேன்.

      திருமதி கீதா அவர்களும் போனில் இந்த ஸ்வீட்டைப் பாராட்டி நன்றி சொன்னார்கள். நீங்களும் இதை அனுபவித்தது என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.

      நீக்கு
    2. இந்த விழாவின் எனக்கு கிடைத்தவரமாய்...என்னை அருகில் அழைத்து வாசலிலேயே இனிப்பை வழங்கி மகளைக்காண வருகையில் சும்மா வரலாமாம்மா என்றதும் மனம் கரைந்து அழுதுவிட்டேன் ...கட்டுப்படுத்திக்கொண்டு அய்யான்னு கூப்பிட்ட நான் அப்பான்னு மனதாரக்கூப்பிட்டேன்...அம்மாவையும் அப்பாவையும் இழந்த எனக்கு இவ்விழா அன்பான தந்தையை கொடுத்துள்ளது...மறக்க முடியாத உறவும் விழாவும்..அப்பா யாருகிட்டயும் நான் இனிப்பு தந்ததை சொல்லல ஆனா இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு ஒண்டியா சாப்பிட்டியான்னு சண்டை போடப்போறாங்கப்பா...சார் இப்படி பன்ணீட்டீகளே..

      நீக்கு
    3. என்னப்பா மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க ..நான் .சந்தோஷமா எனக்கு அப்பா வாங்கித் தந்தாங்கலேன்னு பெருமையா சொல்லிக்குவேன்....சந்தோஷமா தான் சார் இப்படி பண்ணிட்டீங்களேன்னு கேட்டேன்பா..இனி இப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா. நிறைய உறவுகள் எனக்கு இந்த விழாவால் கிடைத்திருக்குப்பா ...மனம் நிறைய மகிழ்வா இருக்கோம்பா..

      நீக்கு
    4. இல்லம்மா, நான் நெஜமாவே கொஞ்சம் பயந்திட்டேன். பொதுவா நான் பெண்களிடம் மிகவும் ஜாக்கிரதையாகவே பழகுவேன். நம்மால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாதென்று இருப்பேன். என்னமோ உன் பேரில் ஒரு தனி அபிமானம் தோன்றியது. இந்த ஸ்வீட் சமாச்சாரம் ஏதாவது பிரச்சினையை உண்டு பண்ணிவிடுமோ என்று பயந்தேன். அப்படி இல்லை என்று தெரிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

      திரு. வைகோ அவர்கள் கூட மிகவும் சூசகமாக, அந்த இரண்டாவது ஸ்வீட் பாக்கெட்டை அந்தப் பெண்மணிக்கு எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டார். நான்தான் எங்கப்பா குதிருக்குள் இல்லைங்கற மாதிரி உன் பெயரைச் சொல்லிவிட்டு ஏதோ தப்பு பண்ணீட்டமோன்னு கவலைப்பட்டேன்.

      ஏன் எனக்கு கொடுக்கலேன்னு கேக்கறவங்களுக்கு எனக்கு எங்கப்பா வாங்கிக்கொடுத்தார், நீங்கள் உங்க அப்பாவைக் கேளுங்கள் என்று சொல்லிவிடு, மகளே.

      நீக்கு
  21. முதல் நாளே வந்து , இரட்டிப்பு சந்தோஷம் தந்து விட்டீர்கள் அய்யா :)

    பதிலளிநீக்கு
  22. அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களை சார், ஐயானு கூப்பிட மாட்டேன். தாத்தான்னுதான் கூப்பிடுவேன். மறக்காமல் லட்டு வாங்கி வரவும்.

    பதிலளிநீக்கு