செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஈரோடு பதிவர் சங்கமம் 2010

இது ஒரு மீள்பதிவு. புதுக்கோட்டைக்காரர்களை இப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தும் பதிவல்ல.


இது ஈரோட்டில் நடந்த இரண்டாவது பதிவர் சங்கமம். முதல் சங்கமத்திற்கு நான் போகவில்லை. காரணம் அப்போதுதான் நான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்த புதிது.

ஈரோடு பதிவர் சங்கமம் - 2010



ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு வந்தேன். விழாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் = விழா வெற்றி, மாபெரும் வெற்றி, வரலாறு காணாத வெற்றி, பதிவுலக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. அவ்வளவுதானுங்க.

விரிவாக எழுதுவதற்கு முன்பாக எனக்குப்பிடித்ததைப்பற்றி முதலில் எழுதுகிறேன்.

செவிக்குணவு இல்லாத போழ்தில் சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவு இன்னும் ஜீரணமாகவில்லை. ஆகவே அதை அப்புறம் பார்ப்போம்.

வயிற்றுணவைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். பாருங்க. எழுத்தெல்லாம் எதுக்குங்க?

காலை சிற்றுண்டி களம் ?


முட்டைல என்னென்னமோ பார்த்திருப்பீங்க. முட்டை பூரிய பார்த்திருக்கீங்களா?


மதிய உணவு. இடமிருந்து வலமாக மூன்றாவது இருப்பதுதான் உலகிலேயே தலை சிறந்த பதிவர் ( நான்தானுங்க அது, ஹிஹீஹி..)


நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணையே காலி !

ஆனாப் பாருங்க, மீட்டிங் முடியறதுக்குள்ள அத்தனையும் ஜீரணமாகிட்டுதுங்க. புறப்படறப்ப கொஞ்சம் ஊட்டுக்கு கட்டிட்டிப் போலாம்னு பாத்தா சமையலறைல எல்லாத்தையும் கழுவிக் கமுத்துட்டுப் போயிட்டாங்க. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். ஆனா பாருங்க, அடுத்த வருஷம் உஷாரா மொதல்லயே பார்சல் பண்ணீடுவமில்ல !

16 கருத்துகள்:

  1. அடுத்தமுறை கூப்பிடாவிட்டாலும்
    வந்துதானாகணும் போல இருக்கே !

    பதிலளிநீக்கு
  2. பதிவர் சங்கமம் என்று உள்ளே வந்தால் உணவு சங்கமம் அல்லவா உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. வலைஉலகில் பதிவர்களின் ஒற்றுமை ஓங்கி ஒலித்த இடம் ஈரோடு என்று கேள்விப்பட்டிருக்கிறேனே

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா!
    தங்களை போன்றோர் தரும் பதிவுகளாதான் முந்தைய வலைப் பதிவர் திருநாள் விழா பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. நன்றி!
    புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிலும்
    செவிக்கும், வயிற்றுக்கும் உணவு சிறந்த முறையில் பகிர்தல் வேண்டும்!
    நிகழும் அய்யா!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. ஈரோட்டில் நடந்த பதிவர் விழா உணவு திருவிழா போல அட்டகாசமாக அமைந்தது.. ஆமாம் பதிவர் மீட்டிங்க் என்று சொல்லும் போது பலர் ஈரோடு சென்னை மதுரை இப்போது புதுக்கோட்டை என்று பேசுகிறோம் ஆனால் ஆபிர் தலமையில் நடந்த நெல்லை திருவிழாவை மறந்துவிட்டோமே?

    பதிலளிநீக்கு

  6. புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் உணவு உபசரிப்பு, ஈரோடு பதிவர் சந்திப்பை மிஞ்சவேண்டும் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பதிவும், படங்களும்தான் நான் உங்கள் தளத்துக்கு முதலில் வரத் தொடங்கிய நேரம்.

    :)))))

    பதிலளிநீக்கு
  8. உலகிலேயே தலைசிறந்த பதிவரை ரசித்தேன் ஐயா
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  9. 2010ல் நான் பதிவர் ஆகவில்லை! அப்பவே களை கட்டியிருக்கே பதிவர் சந்திப்பு!

    பதிலளிநீக்கு
  10. நாங்க அப்ப பதிவரா இல்லையே! உலகிலேயே தலை சிறந்த பதிவர்...சத்தியமாக உங்கள் பதிவை ரசித்தோம்....என்ன கொஞ்சம் தாமதமாகிவிட்டது....ஐயா..

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பதிவை ரசித்து எழுதினது. எனக்காக எழுதபட்ட பதிவு மாதிரி இருக்கு. நன்றி! உணவு விஷயத்தில் பொது விழாவில் சைவம் தான் போடவேண்டும் என்பது முற்றிலும் தவறு! இது ஒரு கல்யாணம் என்றால் கல்யாணம் செய்பவர் (பெண்ணைப் பெற்றவர்) சைவம் 'மட்டும்' போடுவது சரி! அது அவர் வீட்டு கல்யாணம். இது பதிவர் விழா----இதில் அசைவமும் போடவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் சாப்பீட்டு போகட்டுமே! இத்தனைக்கும் நான் முழு சைவம்--பால் கூட கிடையாது. பால் பக்கா அசைவம்! பசுவின் ரத்தம் அது. மேலும் அது தன கன்றுக்காக தயாரிக்கும் பால். மனிதன் அதை திருடுகிறான். அது மகா பாபம். குழந்தையின் பாலை நாம் திருடி ஊன் வளர்க்கும் பாபம் ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் போகாது. எங்க group காப்பிக்கு கூட பருத்தி அல்லது சோயா பால் தான். இல்லை கருங்காப்பி தான்.

    பால் மட்டும் சாப்பிடும் சைவர்களுக்கு (?) ஒரு இடமும், அதற்கு அப்புறம் கோழி ஆடு சாப்பிடும் அசைவர்களுக்கு ஒரு இடமும், மாடு , பன்னி சாப்பிடும் அசைவர்களுக்கு ஒரு இடமும் கொடுக்கலாம்.

    நாங்கள் ரொம்ப ஆசாரம என்பதால் எங்களுக்கு தனியா சாப்பிட ஒரு இடம்.
    முத்துநிலவன் மற்றும் விழா அமைப்பாளர்கள், இந்த அசைவர்கள் சாப்பிடாத இடமா ஆசாரமா ஒரு இடம் ஒதுக்கினால் நல்லது. என்னென்றால்..பசும் பால் குடிக்கும் அசைவர்களும், ஆடு, கோழி, மாடு , பன்னி சாப்பிடும் அசைவர்கள் எங்களுக்கு ஒன்று தான்.

    பால்

    பதிலளிநீக்கு
  12. பதிவர் சந்திப்புகள் பற்றி சுவையான பதிவு . புதுக்கோட்டையில் சந்திப்போம் ஐயா

    பதிலளிநீக்கு
  13. நான் சொல்லும் இடங்களில் எல்லாம் ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கி, சென்னையில் மாநில அளவில் தொடர்ந்து மதுரையில் மூன்றாம் ஆண்டாக நடந்து, இப்போது புதுக்கோட்டையில் 4ஆம்ஆண்டாக நடக்கிறது என்றுதான் சொல்லி வருகிறேன். நெல்லைச் சந்திப்புப் பற்றி எனக்குத் தெரியலயே! மதுரைத் தமிழன் அதுபற்றிச் சொன்னால் நல்லது. நமது முன்னோடிகளை மறந்தவர் யாரும் முன்னேற முடியாது என்பது என் அழுத்தமான கருத்து. பதிவர்சந்திப்பு வரலாற்றுக் குறிப்பை சரியான நேரத்தில் மறுபதிவிட்ட அய்யாவுக்கு நன்றியும் வணக்கமும். புதுக்கோட்டையில் சுவையான சைவச் சாப்பாடுதான் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைவச்சாப்பாட்டையே இப்போதெல்லாம் ஜீரணிக்க கஷ்டப்படுது. அது போதும் விழாவிற்கு. நான் எழுதினதெல்லாம் சும்மா கலாய்ப்பு என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  14. மீள் பதிவிற்கு நன்றி இன்றும் அதே பழைய உற்சாகத்தோடு நீங்கள். உங்களிடம் கற்றுக் கொள்ள என்னைப் போன்றவர்களுக்கு நிறையவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  15. ஐயா - பதிவிலகம் சிறப்புடன் உள்ளது , படங்களிலும் பதிவிலும் தெரிகிறது.
    இந்த 4 ம் படத்தில் உங்களுடன் இருந்து உணவுண்ணும் குட்டிப் பதிவர் யாரென அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு