திங்கள், 5 அக்டோபர், 2015

ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

                                                    Image result for ஞானாலயா நூல் நிலையம், புதுக்கோட்டை

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய தனி முயற்சியினால் ஒரு நூல் நிலையம் உண்டு பண்ணி பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் அருந்தொண்டு ஆற்றி வருவது பதிவர்கள் அனைவரும் அறிந்ததே.

வருகிற 11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் தங்களிடம் உள்ள, அவர்களுக்கு இனிமேல் தேவைப்படாத புத்தகங்களைக் கொண்டு வந்தால் பெற்றுக்கொள்வார்களா எனத்தெரிந்தால், பதிவர்கள் தங்களிடம் அதிகப்படியாக இருக்கும் புத்தகங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது சம்பந்தமாக திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை யாராவது தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எந்த மாதிரியான புத்தகங்களைப் பெற்றுக் கொள்வார்கள்? பதிவர் சந்திப்பு நிகழும் மன்றத்திற்கு யாரையாவது நியமித்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?  இந்த விவரங்களும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

9 கருத்துகள்:

  1. நல்ல யோசனை. வலைப்பதிவர் சந்திப்பிற்கான குழுவினரோ அல்லது புதுக்கோட்டையில் உள்ள பதிவர்கள் இது குறித்து விசாரித்து சொல்லாம்.

    பதிலளிநீக்கு
  2. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக ஸ்தாபகர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி + அவரின் துணைவியார் பற்றியும், அவர்களின் மகத்தான சமூக சேவைகள் பற்றியும், அவர்களின் முழு விலாசம், தொலைபேசி எண், அலைபேசி எண் போன்ற அனைத்து முழு விபரங்களும் என் கீழ்க்கண்ட இரு பதிவுகளின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    (1) http://gopu1949.blogspot.in/2015/06/13.html

    (2) http://blogintamil.blogspot.in/2015/06/13.html

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொன்னது நல்ல யோசனைதான் அய்யா! வலைப்பதிவர்கள் சந்திப்பின் போது நீங்கள் அங்கே போனால், வந்த காரியம் என்ன ஆவது? மேலும் அவர்கள் பழைய நூல்களை வாங்கிக் கொள்வதிலும் சில நடைமுறைகள் வைத்து இருப்பார்கள். பிற்பாடு நேரிலோ அல்லது கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். நேரம் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல யோசனை! நூல் கொடுப்பதோடு புதுகை செல்லும் பதிவர்கள் இணைந்து அதன் பராமரிப்புச் செலவுக்கு சிறு உதவி செய்தாலும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. முனைவர் அய்யா யோசனையே தனி! மிக நல்ல ஐடியா வரவேற்போம். அதே மாதிரி தமிழ் இளங்கோ ஐடியாவும் சரி! எல்லோரும் அங்கே போய்ட்டா இங்க யார் இருப்பா! அதானால், நல்ல புத்தகங்களை (ஜாதி மதம் தவிர்த்த புத்தங்களை) ஒரு மூட்டையா கட்டி ஞாலையா முன்னால் போட்டு விடுங்கள். அவருக்கு வேண்டிய புத்தகங்களை அவர் எடுத்துக் கொள்வார். நாமும் பதிவர் விழாவில் பங்கேற்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல வந்தது நாம் யாரும் ஞானாலயா போகவேண்டியதில்லை. நாம் கொண்டுவரும் புத்தகங்கள் அவர்களுக்கு தேவையாக இருக்கும் என்றால் பதிவர் சந்திப்பு நிகழும் மன்றத்திற்கு ஞானாலயா ஆட்கள் யாரையாவது அனுப்பி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால் அப்படி தேவை இருக்காது என்று நினைக்கிளேன். ஏனெனில் இதுவரை அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

      ஜாதி மத புத்தகங்களைப் படித்தால்தானே அதில் உள்ள நல்லது கெட்டது தெரிந்து கொள்ள முடியும்? ஏன் அவைகளைப் புறக்கணிக்கிறீர்கள்?

      நீக்கு