புதன், 7 அக்டோபர், 2015

பதிவர் சந்திப்புகள் - ஈரோடு - 2011

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு 2009. 2010, 2011 ஆகிய மூன்று வருடங்கள் மிக சிறப்பாக நடைபெற்றன. முதல் சந்திப்பிற்கு நான் போகவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளுக்கும் நான் சென்று வந்தேன்.

இதற்கு முன்பு சென்னைப் பதிவர்கள் மாதம் ஒரு முறை கடற்கரையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று "டோண்டு ராகவன்" பதிவுகளிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

2012 ம் ஆண்டு புலவர் திரு ராமானுஜம் ஐயா அவர்களின் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. இதுதான் முதல் பதிவர் சந்திப்பு என்று பலர் தவறாக எண்ணுக்கொண்டிருக்கிறார்கள். ஈரோட்டில் 2009 ம் ஆண்டே பதிவர் சந்திப்பு ஆரம்பித்து விட்டது.

திருநெல்வேலியில் உணவு ஆபீசர் முயற்சியில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. நான் கலந்து கொண்டேன். இதைப் பற்றிய என் பதிவை நாளை மீள்பதிவாகப் போடுகிறேன்.

2013ம் ஆண்டு சென்னையில் இரண்டாவத் தடவையாக பதிவர் சந்திப்பு நடந்தது. நான் கலந்து கொண்டேன்.

போன வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு நான் செய்த ரயில் டிக்கட் ரிசர்வேஷன் குளறுபடியால் போகவில்லை.

இந்த வருடம் புதுக்கோட்டைக்குப் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.

இப்போது நான் கலந்து கொண்ட ஈரோடு பதிவர்கள் சந்திப்பைப்பற்றிய என்னுடைய பதிவை இங்கு மீள் பதிவாகப் போடுகிறேன்.

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.

8 கருத்துகள்:

  1. மறுபடியும் இங்கு பதிவு இடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் மற்றொரு பதிவு ஈரோடு சங்கமம் பற்றி போட்டதால் நானும் போட வேண்டிய கட்டாயம்! மறுபடியும் முனைவர் அய்யா அவர்கள் என்னை மன்னிக்கணும்!
    ________________________________________________
    உங்கள் பதிவை ரசித்து எழுதினது. எனக்காக எழுதபட்ட பதிவு மாதிரி இருக்கு. நன்றி! உணவு விஷயத்தில் பொது விழாவில் சைவம் தான் போடவேண்டும் என்பது முற்றிலும் தவறு! இது ஒரு கல்யாணம் என்றால் கல்யாணம் செய்பவர் (பெண்ணைப் பெற்றவர்) சைவம் 'மட்டும்' போடுவது சரி! அது அவர் வீட்டு கல்யாணம். இது பதிவர் விழா----இதில் அசைவமும் போடவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் சாப்பீட்டு விட்டு போகட்டுமே!

    இத்தனைக்கும் நான் முழு சைவம்--பால் கூட கிடையாது. பால் பக்கா அசைவம்! பசுவின் ரத்தம் அது. மேலும் அது தன கன்றுக்காக தயாரிக்கும் பால். மனிதன் அதை திருடுகிறான். அது மகா பாபம். குழந்தையின் பாலை நாம் திருடி ஊன் வளர்க்கும் பாபம் ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் போகாது. எங்க group காப்பிக்கு கூட பருத்தி அல்லது சோயா பால் தான். இல்லை கருங்காப்பி தான்.

    பால் மட்டும் சாப்பிடும் அசைவர்களுக்கு ஒரு இடமும், அதற்கு அப்புறம் கோழி ஆடு சாப்பிடும் அசைவர்களுக்கு ஒரு இடமும், மாடு , பன்னி சாப்பிடும் அசைவர்களுக்கு ஒரு இடமும் கொடுக்கலாம். எங்களுக்கு (பசும் பால் கூட சாப்பிடாத ]தனியா ஒரு இடம் கொடுக்கணும்! எங்களால். பால் [மட்டும்] அசைவர்களுடன் அமர்ந்து சாப்பிட முடியாது. பாலில் என்ன நாத்தம்; மோரிலோ கக்கூஸ் DRAINAGE மூடிய திறந்தா மாதிரி ஒரு குடலை வாந்தி எடுக்கும் நாத்தம்.

    நாங்கள் ரொம்ப ஆசாரம என்பதால் எங்களுக்கு தனியா சாப்பிட ஒரு இடம்.
    முத்துநிலவன் மற்றும் விழா அமைப்பாளர்கள், இந்த அசைவர்கள் சாப்பிடாத இடமா ஆசாரமா ஒரு இடம் ஒதுக்கினால் நல்லது. என்னென்றால்..பசும் பால் குடிக்கும் அசைவர்களும், ஆடு, கோழி, மாடு , பன்னி சாப்பிடும் அசைவர்கள் எங்களுக்கு ஒன்று தான்..

    அப்படி பால், மோர் சாப்பிடும் மனிதர்கள் கிட்டே மட்டும் எங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டாம். அதுக்கு பன்னி, மாடு சாப்பிடும் ஆட்கள் உடன் இடம் ஒதுக்குங்கள். அங்கு நாத்தம் இருக்காது--அதாவது, பால், மோர் நாத்தம் இருக்காது!.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. எப்போதுமே முதல் என்பது தனிச் சிறப்புதான். அதிலும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பு. அதனை நினைவு படுத்திய அய்யாவுக்கு நன்றிகள் பல!
    விழாவில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பே தமிழ் என்கிற
    வலைத்தளப் பெயர் மிகவும் பிடித்திருக்கிறது

    பின்னூட்டத்தில் கருத்துக்குப் பதில்
    கோபத்தைக் காட்டியிருப்பது
    தலைப்புக்குப் பொருந்தவில்லை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ரமணி அய்யா!
      தளத்தின் தலைப்புக்கு ஏற்ப அன்பு தமிழில் இருக்கும்.
      'கருத்துக்களில் உண்மை இருக்கும்! இரு பொது விழாவில் ஒரு சாரர் 'தனிச்சியாக' தனக்கு பிடித்த (பால், மோர் பக்கா அஸைவம) so-called சைவசாப்பைட்டை மற்றவர்மேல் திணிக்கும் போது!

      பால் மோரில் வரும் நாத்தம் ஆடு, கோழி, மாடு, பன்னியில்i இருக்காது. எல்லோரும் மூக்கை துயந்து வைத்துகொண்டு சாப்பிடலாம். எலூருசும் சமம்-சாப்பாட்டில் உயர்வு தாழ்வு கிடையாது. அதை எப்படி மறக்கலாம்?

      நீக்கு
  4. // நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.//

    கொஞ்சம் ஓவர்தான்!

    பதிலளிநீக்கு

  5. ஈரோடு பதிவர் சந்திப்பே முதல் பதிவர் சந்திப்பு என்பதை தெரிவித்தமைக்கு நன்றி!

    நீங்கள் சாப்பிட்ட எட்டு இட்லிகளையும் 10 பூரிகளையும் போட்டு ‘கண் திருஷ்டி பட’ வைத்துவிட்டீர்களே! தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்து எங்களுக்கு பொறாமையாய் இருக்கிறது. உடனே திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மீள் பதிவை மீண்டும் படித்தேன். சுவாரஸ்யத்தில் சலிப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  7. ஈரோடு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை சுவையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு