ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.
இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.
1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.
2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.
3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்தற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.
அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.
அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.
4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.
5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.
6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.
8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.
9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.
10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.
அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
இனிமையான யோசனைகள்!
பதிலளிநீக்குvery useful.. thanks..
பதிலளிநீக்குமிகவும் நன்றாக இருந்தது
பதிலளிநீக்குஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிப்பான பகிர்வு..
rompa nallave vilakkam koduththathikku nandri aiyaa.
பதிலளிநீக்கு//எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.//
பதிலளிநீக்குஇது நல்லா இருக்கு...
நல்ல பகிர்வு ஐயா......
:-)
பதிலளிநீக்கு\\\அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.\\\ ஆமால்ல
பதிலளிநீக்குநல்ல பதிவு ஐயா. உபயோகமானது.
பதிலளிநீக்குIT IS SO SWEET!
பதிலளிநீக்குஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.
பதிலளிநீக்கு//
இதுக்கும் 20 வருசம் எக்ஸ்பீரியனு சொல்லாம விட்டீங்களே...ஹிஹி
.
.
.
//
4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.
//
படார்-னு சொல்லிப்புட்டீங்க...
மயிரிழைல அந்த எக்ஸ்பீரியன்ஸ தவற உட்டுட்டேனுங்க.
நீக்குஅருமை! எட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு:-)))))
பதிலளிநீக்குநானும் இந்த 'இனிய' சங்கத்தில் சேர்ந்து மாசம் நாலு ஆகுது!
இங்கே நம்ம டாக்குட்டரும் அப்பப்பக் கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டுக்கோன்னு சொல்லி இருக்காங்க. ஒரேடியா எப்படி விட்டுத் தொலைப்பது? நோ பாய்ன்ட் ஆஃப் லிவிங் என்று சொன்னேன்.
எனக்கு 44 வயதாகிறது. நாள் தவறாமல், காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் என்று இரு வேளைகளிலும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். மாதம் இருமுறை வேப்பிலை ஜூஸ் எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு ஞாயிறு மதியம் உணவு உட்கொள்வதில்லை. இதனால், எடை கூடாமல் இருப்பதுடன், சர்க்கரை அளவும் சரியாகவே இருக்கிறது. இது என் அனுபவம்.
பதிலளிநீக்குமேலும், தங்களுடைய குறிப்புகள் மிகப் பயனுள்ளவை. எனது முகநூல் நண்பர்களுக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.
அன்புடன்,
சிவா.
South Sudan,
Africa
nirmalshiva1968@gmail.com