வியாழன், 19 ஏப்ரல், 2012

கழுத்து வலியைக் குணப்படுத்த வழி


நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல். - குறள்.

ஆகவே எந்த நோயாக இருந்தாலும் அது எப்படி, எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நாளில் கழுத்து வலி வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்.

1. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.

2. கணிணி முன் மணிக்கணக்காக ஒரே நிலையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது.

3. தலையணையின் உயரம் ஒத்துக் கொள்ளாமல் போவது.

முதல் இரண்டு காரணங்களையும் பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உண்டான வைத்தியத்தையும் அறிந்திருப்பார்கள். இந்த மூன்றாவது தலையணை காரணத்தையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.

நான் உயரம் குறைவான தலையணையைத்தான் உபயோகித்து வந்தேன். கழுத்து வலி இருந்து கொண்டே இருந்தது. ஒரு பரிசோதனைக்காக ஒரு உயரமான தலையணையை உபயோகித்தேன். இரண்டு மூன்று நாளில் கழுத்து வலி குறைந்து, ஒரு வாரத்தில் முற்றிலும் சரியாகி விட்டது.

இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.

18 கருத்துகள்:

 1. டாக்டர் கந்தசாமி ஐயா நாலும் தெரிந்தவர். அதற்காக அவர் மருத்தவரீதியாக "கழுத்து வலியைக் குணப்படுத்த வழி" சொல்வது மருத்தவரான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  அவர் மன்னிக்கவேண்டும் என்னை. ஏனென்றால் அவர் இடத்தில் (பிளாக்கில்) வந்து நான் அறிவுரை கூறுவது சரியில்லை. இருந்தாலும், நான் அறிவுரை கூறுவேன்: அது தான் நம்பள்கி...

  கேளுங்கள் கால் வலி, கழுத்து வலி, தலை வலி, வயிற்று வலி, இது மாதிரி மனிதனுக்கும் இருக்கும் எல்லா வலிகளுக்கும் நான் கூறும் சர்வரோக நிவாரணி இது ஒன்று தான்...

  உங்கள் மனிவியை வீட்டை விட்டு "உடனே" துரத்தி விடுங்கள். எல்லா வலியும் போய்விடும்...

  PS: If you need references from research, I would be more than happy to provide them.

  DO you really need references from me???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வைத்தியமாகத்தான் தெரியுது. எந்த மனைவியைன்னு குறிப்பா சொன்னா நடைமுறைப்படுத்த சௌகரியமா இருக்கும்!!!

   நீக்கு
 2. உண்மை. தலையணை மந்திரம்!!!


  contour latex pillow கிடைக்குது இங்கே. நம்ம கழுத்துக்கேத்த மாதிரி தானே செயல்படுது. இந்த வகையில் படுக்க மேட்ரஸ் கூட வந்தாச்சு. ஆனா படுக்கையை வாங்க வீட்டை விக்கணும்:-))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடம்புக்கு ரொம்ப சொகம் கொடுத்தா அப்புறம் நம்ம பேச்சைக் கேட்காது, கேட்டோ சேச்சி.

   நீக்கு
 3. தனித்துவம் மிக்க அனுபவப்பகிர்வுக்கு நன்றி ஐயா..

  எவ்வளவு பெரிய பதிவு எழுதினாலும் திருப்தி வராமல் இன்னும் ஒரு படம் போடலாமா இன்னும் கொஞ்சம் எழுதலாமா என்று யோசித்துவிட்டு -
  சரி படிப்பவர்கள் பாவம் ..மிரண்டுவிடுவார்கள் அடுத்த பதிவில் கவனித்துக்கொள்ளலாம் என்று பதிவிடும் ரகம் நான்..

  நறுக்குத்தெறித்தார் போல் கூட ஒரு வார்த்தைகூட அதிகம் சேர்க்கமுடியாத அருமையான தங்கள் பதிவுகளிலிருந்து நான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டில் நன்னூல் (தமிழ் இலக்கணம்), என் பெரியப்பா படித்தது, இருந்தது. நான் சிறு வயதில் ஏதாவது தவறு செய்தால் என் தந்தையார் கொடுக்கும் தண்டனை என்னவென்றால் அந்த நன்னூலிலிருந்து பத்து சூத்திரம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொல்லுவார். அதில் ஒரு சூத்திரத்தில் நல்லாசிரியருடைய குணங்களைப் பற்றி சொல்லும்போது "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" என்று வரும். இதைப் பல தடவை படித்ததினால் மனதில் பசு மரத்தாணி போல் பதிந்து விட்டது.

   பிற்காலத்தில் நான் எதையும் சுருக்கமாகவே எழுதவும் சொல்லவும் இது ஒரு காரணமாய் அமைந்தது.

   இன்னொரு காரணம் நான் ஒரு சோம்பேறி. அதிகம் எழுவதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு சுருக்கமாகவே எழுதிப் பழக்கப் பட்டுப் போனது.

   உங்கள் மாதிரி எதையும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுத என்னால் முடியாததைப் பற்றி மனதிற்குள் ஒரு ஓரத்தில் வருத்தம் இருக்கிறது.

   பி.கு. நன்னூலை பல தடவை படித்ததின் காரணத்தைப் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   நீக்கு
 4. இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.//

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் சார்.

  பதிலளிநீக்கு
 5. மிகச்சரியே

  கணமான கல்லு தலையணை வைத்தாலும் கழுத்து வலி அதிகமாகும்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு ஐயா

  தலையனை ஆலோசனை சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலையணை மந்திரத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

   நீக்கு
 7. நீங்க சொல்வது உண்மை. ஒவ்வொருவருக்கும் எது வசதியோ அப்படி வைத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.
  நான் இரண்டு தலையணை வைத்துக் கொள்ளும் ரகம்.

  பதிலளிநீக்கு
 8. //இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.//

  டாக்டர் சொல்வதெல்லாம் எனக்கும் சரிப்பட்டு வருவதிலை, சார்.

  //என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.//

  என் தனிப்பட்ட அனுபவத்தில் எனக்கு நல்ல கனமான தலையணிகளாக குறைந்தபக்ஷம் ஒரு 4 அல்லது 5 தேவைப்படுகிறது, சார்.

  இல்லாவிட்டால் தூக்கமே வராது. இருந்தாலும் தூக்கம் வராது என்பது தனி கதை.
  4-5 கனமான தலையணி இருந்தால் மட்டுமே தூக்கம் வருகிறதோ இல்லையோ தூங்க முயற்சி செய்வேன். அவ்வளவு தான்.

  நல்ல அழகான ஆலோசனைப் பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 9. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.
  குறிப்பாக scooter
  உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.
  ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.
  அனைத்தும் உண்மை என் சொந்த அனுபவத்திலும்

  பதிலளிநீக்கு
 10. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னால், எனக்கு கழுத்து வலியே வருவதில்லை, சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டு அம்மா இந்த கமென்ட்டைப் படிக்க மாட்டார்கள் என்கிற தைரியம்தானே? எப்படியாவது இந்தக் கமென்ட் அவர்களைப் போய் சேருமாறு செய்கிறேன் பாருங்க!

   நீக்கு
 11. எங்க அப்பாக்கு ஒரு சின்ன விபத்துல கழுத்து பிடித்துகொண்டது அத அப்பா கவனிக்காம விடுட்டாங்க அதனால இப்பம் கழுத்து கொஞ்சம் கூட திரும்ப முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு..ஹாஸ்பிட்டல போனாங்க மாத்திரை ,தைலம் எல்லாம் use pannaga ஆன இன்னும் சரியாகல..வைதியர்கிட்ட போனா அவங்க கழுத்து திருப்புவங்க..இது வேற ரொம்ப வருஷம் ஆகிட்டு அதனால அம்மாவும் பயந்து வேணாம் ஏதும் ஆகிரும்னு போக வேணாம் சொலிட்டாங்க..இப்பம் வழி இருந்தா tablet poduvanaga தையலம் use பண்றாங்க..இதுக்கு என்ன பண்ணலாம் யாராவது வழி சொலுங்கள ப்ளீஸ் please

  பதிலளிநீக்கு