வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை


இந்தப் பழமொழியை எல்லொரும் அறிந்திருப்பீர்கள். இதைப்போலவே இன்னொரு பழமொழி; தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்.

இந்தப் பழிமொழிகளின் நீதி என்னவென்றால் திறமையுள்ளவன் இல்லாதபோது திறமையற்றவனைக் கொண்டாடுவார்கள். இது உலக இயற்கை.

இதை ஏன் இப்போது சொல்கிறேனென்றால், நேற்று என்னுடைய பிளாக்கின் தமிழ்மணம் தர வரிசையைப் பார்த்தேன். 29 வது ரேங்க்கில் என்னுடைய பிளாக் இருந்தது. ஏதோ என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன் என்றாலும் என்னுடைய பிளாக் பெரிய சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. பெரிய இலக்கியச் சேவையோ சமூக சேவையோ ஒன்றும் இந்த பிளாக்கில் நான் செய்வதில்லை.

பொழுது போவதற்காகவும், கம்ப்யூட்டர் கைவசம் இருப்பதாலும், டெக்னாலஜியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். இப்படிப்பட்ட பிளாக் தமிழ்மணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிளாக்குகளில் 29 வது ரேங்க்கில் இருக்கிறதென்றால், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நல்ல எழுத்தாளர்களெல்லாம் பதிவுலகத்தை விட்டுப்போய் விட்டார்கள் என்பதுதான்.

என்னுடைய கடந்த வருட சாதனைகளைப் பாருங்கள். மூன்றாவதாக உள்ளது இப்போதுள்ள ரேங்க்.

tamil blogs traffic ranking2010 Blog Rank 92 2011 Blog Rank 48

முதலில் கூறிய பழமொழிகளின் பொருத்தம் இப்போது புரிகிறதா?

தமிழ்மணத்தில் போனவருடம் ஏறக்குறைய தினம் 500 இடுகைகள் பதிவாகிக்கொண்டு இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 150 ஆகக் குறைந்துள்ளது.

நான் நான்கு வருடங்களுக்கு முன் பதிவுலகத்தில் பிரவேசித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் இன்று பதிவுலகில் இல்லை. இது ஏன் என்று யோசித்தால், இந்தப் பதிவுலகம் வரவர போர் அடிக்கிறது என்பதுதான் அர்த்தம். அவர்களுக்கு சோர்வும் சலிப்பும் ஏற்பட்டதால்தான் அவர்கள் பதிவுலகை விட்டு விலகி விட்டார்கள்.

எனக்கும் எப்போது இந்த நிலை வரும் என்று என்னால் கணிக்கமுடியவில்லை. இப்போது என்னால் பழைய மாதிரி பிளாக்குகளுக்குப் பின்னூட்டம் போட முடிவதில்லை. என் பிளாக்குக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் ஒழுங்காக பதில் போட முடிவதில்லை. ஏதோ என்னால் முடிந்தவரை பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த சோர்வு நிலை ஒரு நாள் கண்டிப்பாக வந்தே தீரும் என்று எதிர்பார்க்கிறேன். அன்று நானும் கடையைக் கட்டி விடவேண்டியிருக்கும் என்று முன்னெச்சரிக்கையாக இப்போதே கூறிக்கொள்கிறேன்.16 கருத்துகள்:

 1. தமிழ்மணம் தர வரிசையைப் பார்த்தேன். 29 வது ரேங்க்கில் என்னுடைய பிளாக் இருந்தது.

  வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பகிர்வுகள் அனுபவச்செறிவுகள்.. பயன்மிக்கவை..

  பதிலளிநீக்கு
 3. பதிவுலகம் மாறுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் .....இருப்பினும் பதிவர்கள் குறைவது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல ....

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா,

  தங்களின் உழைப்பிற்கு கிடைத்த பரிசிற்கு வாழ்த்துக்கள்!

  உண்மையில் வர வர பதிவுலகம் போரடிக்கிறது என்பது நிஜமே!

  பதிலளிநீக்கு
 5. ஆளே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துராங்கன்னு தெரியல!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்...
  உங்கள் எழுத்தை நீங்ளே குறைவாக மதிக்காதீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கு ஆனாலும் ரொம்பத் தான்...
  அவ்வளவு சீக்கிரம் ஏழரை நாட்டு சனி எங்கே விடப் போறது?

  பதிலளிநீக்கு
 8. இடுகைகள் குறைவதற்கு முதல் காரணம் plateau. அதாவது, ஒரு வளர்ச்சிக்கு கிளர்ச்சிக்கு அப்புறம் ஒரு சம நிலை அடைவது மனித இயல்பு. சரியான உதாரணம்: மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள். நம்ம தமிழ் அறிஞர்கள் கூறிய அர்த்தம் சரியில்லை. காஞ்சமாடு கம்புல பூந்த மாதிரி முதலில், அப்புறம், All of us hit a plateau. இது மனித இயல்பு.

  இரண்டாவது பல தமிழ் Aggregators கோதாவில் இறங்கிவிட்டார்கள். நாம தான் ஒவ்வொரு இடுகையை சமர்ப்பிக்க வேண்டும் என்றால்...ஆளை உடுறா சாமி தான்.

  கடைசியாக, எதிர் பார்த்த பலன் கிடைத்திருக்காது:

  ஒரு மாதத்தில் ரமேஷ், சுரேஷ், ஆதித்யா, அபினவ், அனிருத், முகுந்த், ஸ்ரீனிவாசன், பார்த்தசாரதி, கிருஷ்ணமுர்த்தி, அனுஷ்கா, அனோஷ்கா மாதிரி சம்பாதிக்க முடியும் என்று இதில் எல்லோரும் இறங்கி இருப்பார்கள் (எவ்வளு நாள் தான் நாம் குப்பனையும், சுப்பனையும் வம்புக்கு இழுப்பது!) அதான், ஒரு "சேஞ்சுக்கு" என் சொந்தங்களையும் இழுத்தேன்!

  முடிவாக, இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊரும். கிணறு வத்திப்போச்சு. நம்ம ஆட்கள் சினிமா பார்க்கும் அளவு படிப்பதில்லை. எல்லோரும் சினிமாவைப் பத்தி எழுதினால்...சினிமாவைத் தாண்டி எழுதனும் அம்பிகளா!

  அதற்கு, சுயமாக சிந்திக்கும் திறன் வேண்டும்...

  நம்ம முதல் அமைச்சர் சொன்னா மாதிரி, "நிம்பள்கி அந்த திராணி கீதாபா?"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட்டா பாயின்ட்டப் புடிச்சிட்டீங்க.

   //இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊரும். கிணறு வத்திப்போச்சு.//

   மழை பெய்தால்தான் கிணற்றில் தண்ணீர் ஊறும். படித்தால்தான் கருத்துக்கள் தோன்றும். நாமதான் படிக்கிறத உட்டு ரோம்ப நாளாச்சே? அப்புறம் பதிவில என்னத்த எழுதறது?

   அப்படியே எதையாச்சும் படிச்சு எழுதினா யாரும் சீந்த மாட்டேங்கறாங்க! என்னத்த பண்ணி பாழாப்போறதுன்னு தெரியல்ல.

   நீக்கு
 9. சிறந்த எழுத்தாளனுக்கு விருதுகள் தானாகவே வந்து குவியும்....எவ்வாறான விருதுகள் வந்தாலும் அவர்கள் தங்களை தாழ்த்தியே கூறுவர்.

  நீங்கள் உங்களை தாழ்த்தி சிறந்த எழுத்தாளன் என்பதனை நிரூபித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் சொல்வது உண்மைதான்.

  வலைத் தளத்தின் இடத்தை Facebook ம் Twitter ம் பிடித்துவிட்டதாகவே உணர்கிறேன். அவை இரண்டும் இயக்குவதற்கு சுலபமாக இருப்பதும் ஒரு காரணம்.

  அதோடு அல்லாமல் இரண்டு காரணங்களும் இருக்கின்றன.
  1. நிதி ஆண்டு முடிவு மற்றும் தொடக்கம் என்பதால் பெருவாரியான பதிவர்கள் கொஞ்சம் பிசியாக இருக்கிறார்களோ என்னவோ....?
  2. தமிழ்மணத்தில் முன்புபோல் பதிவுளை வலையேற்ற முடியவில்லை. .com இருந்தது .in மாறியதால், தமிழ் மணம் தொழிற் நுட்ப பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளது. தமிழ் மணம் பிரச்சனைகளை களைந்தால் பதிவுகளின் எண்ணிக்கை கூடுமென்பது எனது கணிப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய கணிப்பு மிகச் சரியாக உள்ளது. நன்றி, தோழரே.

   நீக்கு
 11. தமிழ்மணத்தில் இடுகைகள் குறைந்ததன் மற்றொரு காரணம் சில பதிவர்களிடையே ஏற்பட்ட ‘கருத்துச் சண்டை’தான். இதனால் பல பதிவர்கள் ‘இந்த வம்பே நமக்கு வேண்டாம்’ என ஒதுங்கிவிட்டார்கள் என எண்ணுகிறேன். I agree to disagree with you என்பதை எல்லோரும் கடைபிடித்தால் இந்த நிலை ஏற்படாது என்பது திண்ணம்.

  பதிலளிநீக்கு
 12. தமிழ்மணம் தர வரிசையைப் பார்த்தேன். 29 வது ரேங்க்கில் என்னுடைய பிளாக் இருந்தது. //

  வாழ்த்துக்கள் சார்.

  என்னால் முடிந்தவரை பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்...//

  முடிந்தவரை எழுதுங்கள் சார், உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவுமே!

  பதிலளிநீக்கு