எனக்கு சிறு வயதில் தீராத தும்மலும் சளியும் இருந்தன. காலையில் எழுந்ததும் ஒரு ஐம்பது தும்மல் போடுவேன். பிறகு அவ்வப்போது தும்மல் வரும். மூக்கிலிருந்து எப்போதும் நீராகக் கொட்டிக் கொண்டே இருக்கும். எப்போதும் கைக்குட்டை கையிலேயே இருக்கும். (கைக்குட்டை கையில் இல்லாமல் வேறெங்கு இருக்கும்னு யாரோ முணுமுணுக்கிறார்கள். இது ஒரு சீரியஸ் பதிவு. நக்கலெல்லாம் வேண்டாம்).
என் பாட்டி என்னை தன் கிராமத்தில் ஒரு நாட்டு வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தார்கள். அந்த அம்மா (வைத்தியர்) என் பாட்டியிடம் ஒரு கவுளி வெத்திலையும் அரைப்படி பசு நெய்யும் வாங்கி வரச்சொன்னார்கள். அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச்சொன்னார்கள்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் போனோம். அந்த அம்மா அந்த வெற்றிலைச் சாற்றையும் நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஒரு திரவப் பதத்திற்கு மாற்றி, ஒரு பாட்டிலில் போட்டுக் கொடுத்தார்கள். அதை உபயோகிக்கும் விதம் எப்படியென்றால், அதில் இரண்டு சொட்டு வீதம் எடுத்து என் இரண்டு மூக்கிற்குள்ளும் விடவேண்டும். நான் கீழே படுத்துக் கொண்டு தாடையை மேல் நோக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
ஐந்து நிமிடம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இந்த மருந்து மூக்கிற்குள் போனதுமே சுறுசுறு என்று மூக்கைப் பிராண்டும். மூக்கிற்குள் பெரிய அரிப்பாயிருக்கும். ஆனால் நான் மூக்கை ஒன்றும் செய்யக்கூடாது. ஐந்து நிமிடம் கழித்து எழுந்திருந்து மூக்கை சுத்தம் செய்து விட்டால், அப்புறம் சில மணி நேரம் தும்மல் வராது. ஆனால் அந்த மருந்தின் வேகம் குறைந்தவுடன் மறுபடியும் "பழைய குருடி கதவைத் திறடி" கதைதான்.
ஒரு ஆறு மாதம் இந்த வைத்தியம் நடந்தது. பிறகு என் பாட்டி சலித்துப் போய் இந்த வைத்தியத்தை விட்டு விட்டது. இப்படியே நானும் என் அடுக்குத் தும்மலும் வளர்ந்தோம். நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்குப் போன பிறகு என் தும்மல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அது என்னவென்று இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறேன். காத்திருங்கள்.
சார் எனக்கும் இதே பிரச்சினைதான். திடீரென சரியாகுது. பின்பு மீண்டும் வந்திருது. எதாவது தீர்வு இருந்தால் சொல்லிடுங்க. அப்படியே கர்சீப்பை வச்சு சமாளிங்கனு சொல்லிடாதீங்க.
பதிலளிநீக்குநிஜமாகவே தீர்வு இருக்குதுங்க. எனக்கு சரியாப் போச்சு. அது உங்களுக்கும் பயன் தரும் என்று நம்புகிறேன்.
நீக்குதயவு செய்து அடுத்த பகுதிக்கு காத்திருக்கவும்.
காத்திருக்கேன்!
பதிலளிநீக்குதட்டுங்கள் - திறக்கப்படும்.
நீக்குகேளுங்கள் - கொடுக்கப்படும்.
காத்திருங்கள் - வழி பிறக்கும்.
படிப்பை முடித்து விட்டு வேலைக்குப் போன பிறகு என் தும்மல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது./
பதிலளிநீக்குதிருப்ப்பம் என்ன ??? என்ன??/
என்ன? என்ன? என்ன?
நீக்குகே.பி.சுந்தராம்பாளாக மாறிவிட்டீர்களே? கந்தன் கைவிடமாட்டான்.
அப்போ கிராம வைத்தியர் சரி இல்லையோ
பதிலளிநீக்குஅப்படி ஒரேயடியா அவங்களை ஒதுக்கக்கூடாது. அந்த மருந்து எனக்கு பிடிபடலை. அவ்வளவுதான்.
நீக்குஎனக்கும் சிறுவயதில் மூக்குசளிப் பிரச்சனை இருந்தது, மாவலிங்க இலையை வைத்து ஏதோ மருத்துவம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தார் அம்மா. பின்னர் பதின்ம வயதைக் கடந்த பிறகு சரியாகிவிட்டது
பதிலளிநீக்குசார் அவசியம் பகிருங்கள் பலருக்கும் பயன்படும்
பதிலளிநீக்குஎனக்கும் தும்மல் வரும், நல்ல வாசம், கெட்ட வாசம் என்று எல்லாவற்றுக்கும் தும்மல் வரும். இப்போது ஒரு உறவினர் ஒரு விஷயம் சொல்லி அதை கேட்டு அதன் படி செய்து அதிலிருந்து மீண்டு விட்டேன். நீங்கள் அது தான் சொல்கிறீர்களா என்று பார்க்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்.
பதிலளிநீக்குsir..! Enaku dust alargi. Konjam kooda sera mattenkudhu. Konjam dust'nlam 3 nalum thumitu , kan erichalodaa avasthai paduven. Please nalla solutiion sollunga, please.
பதிலளிநீக்குஎனக்கு இந்த பிரச்சினை உண்டு. நானும் கைக்குட்டை இல்லையென்றால் ஏதோ இழந்த மாதிரி உணர்வேன். நான் பெங்களூர் வந்த பிறகுதான் இது வந்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது. டாக்டர்கள் இதை rhenitus என்று ஏதோ சொல்கிறார்கள்.அலர்ஜி சம்பந்தப் பட்டது. பெங்களூரில் கிட்டதட்ட 30% பேருக்கு இதுவோ ஆஸ்த்மாவோ இருக்கிறதாம். அதோடு வாழப் பழகிக் கொண்டு விட்டேன். எந்த மருந்துக்கும் இது என்னைப் பொறுத்தவரை அஞ்ச வில்லை. எனக்குத் தும்மல் தொடங்கினால் என் பேரன் எண்ண ஆரம்பித்துவிடுவான்.குறைந்தது பத்து.
பதிலளிநீக்குதும்மல் வராமல் இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது! அதை இப்போது சொன்னால், ஐயாவுக்கு துரோகம் பண்ணின மாதிரி.
பதிலளிநீக்குதானைத் தலைவர் முடிக்கட்டும்; அப்புறம் நான் சொல்கிறேன்.
ஏனென்றால், கந்தன் கைவிட்டாலும், "கந்தசாமி" கை விடமாட்டார்.
சார் எனக்கு ஏதோ டவுட்டா இருக்கு. ஸோ அடுத்த பாகம் வரைக்கும் நோ கமெண்ட்ஸ்.
பதிலளிநீக்குஎனக்கும் சிறுவயதில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. காலையில் எழுந்ததில் இருந்து வரிசையாக தும்மல் தான். டஸ்ட் அலர்ஜியும் உண்டு. கைக்குட்டை இல்லாமல் எங்கும் செல்ல மாட்டேன். இப்போக் கூட தும்மிக் கொண்டே தான் பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் இது சளியின் காரணத்தால்.....
பதிலளிநீக்குசின்ன குழந்தைகளுக்கு தொடர்ந்து தும்மல் வந்தால் என் மாமியார் சொன்ன எளிய வைத்தியம் இருக்கிறது. நீங்க சொன்ன பிறகு சொல்கிறேன்.
ம்ம்ம்ம்... இருங்க நான் தும்மிட்டு வந்துடறேன்.
பதிலளிநீக்குஅடுத்த பகுதியில நீங்க சொன்னா என் தும்மலும் சரியாயிடும்!
சார்,
பதிலளிநீக்கு// "பழைய குருடி கதவைத் திறடி" // இதற்கும் விளக்கத்துடன் ஒரு பதிவு தேவை.
"மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?
பதிலளிநீக்கு