1. முகநூல் விளம்பரம்
நிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது. சின்னப் பசங்க அம்மா காலையே சுத்திச்சுத்தி வருவாங்களே அந்த மாதிரி. நாயை விட்டுகிற மாதிரி சூ, சூ என்றால் போகாமல் அப்படியே நிற்கிறது. பதிவை விட்டு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.
2. மேலும் படிக்க
பதிவுக்குள்ள போனமா, பதிவப் படிச்சமான்னு இருக்கணும். அதை உட்டுப்புட்டு மோர், தயிர், மேலும், இப்படீன்னு பல பதிவுகளில் போட்டிருக்கிறார்கள். அந்த மோரும் தயிரும் எங்கிருக்குதுன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.
3. கருப்பு பின்புலம்
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்தான் படிப்பதற்கு சுகம். சில பேர் கருப்பு பின்புலத்தில் வெள்ளை அல்லது வேறு கலர் எழுத்துகளை உபயோகிக்கிறார்கள். அந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவே முடிவதில்லை.
4. சிறிய எழுத்துகள்
எழுத்துகள் ஓரளவுக்கு படிக்கிற மாதிரி இருக்கணும். சின்ன சின்ன எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கின்றன. அதைப் பெரிது பண்ணிப் படிக்க கம்ப்யூட்டரில் வசதி இருந்தாலும் அது ஒரு கூடுதல் வேலை. இதனால் பதிவைப் படிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.
5. வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை.
ஒரு பக்கம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரு பதிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி இருந்தால்தான் படிக்க சௌகரியம்.
6. பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சல்கள்
ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று. நீங்கள் ரோபோட் இல்லையென்று நிரூபியுங்கள் அப்படீன்னு ஒண்ணு. அதில மேகமூட்டத்தில கலங்கின மாதிரி ஆங்கில எழுத்துக்கள். அப்புறம் நீங்க ஆங்கிலத்திற்கு மாறி, அந்த எழுத்துக்களை ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி எழுத்துக்கூட்டி டைப் பண்ணவேண்டும். அப்புறம் பப்ளிஷ் பண்ண வேண்டும்.
ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.
பதிவுகள் போடுவது நாலு பேரு படிக்கட்டும் என்றுதானே. அதில் இவ்வளவு சங்கடங்கள் கொண்டு வந்தால் எப்படிங்க படிக்கிறது? எப்படிங்க பின்னூட்டம் போடறது? பதிவுலக கனவான்களே, சிந்தியுங்கள்.
உண்மையான பிரச்சினைகளை அலசியிருக்கிறீர்கள். அதிலும் word verificationம் பேஸ்புக்கும் ரொம்பத்தான் கடுப்பேத்துது.
பதிலளிநீக்குவிட்டுப்போன இன்னொறு காரணம் : ரீடரில் படிக்க முடியாமல் உங்க பதிவுக்கு வந்தேதான் படிக்கனும்னு வச்சிருக்கிறது. (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேனுமா?)
பதிலளிநீக்குஐயோ சாமி........:) சரியாச் சொன்னீங்க....இப்படி பட்டவர்கள என்ன பண்ணலாம்..?
பதிலளிநீக்குநல்ல பதிவு அருமையாக சொன்னீங்க...நக்கலாகவும் இருக்கு
பதிலளிநீக்குஅன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇதே காரணங்களுக்காகத்தான் நான் பலரின் பதிவுகள் பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி, ஐயா.
உண்மையான ஓர் அலசல் சிந்திப்பார்களா ? பார்ப்போம் . பகிர்ந்தமைக்கு நன்றிங்க .
பதிலளிநீக்குபதிவுலக விஞ்ஞானி சொல்றாரு...கேட்டுக்கங்கப்பா!
பதிலளிநீக்கு“ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம்.”
>>>>
அண்ணே பெரிய அப்பாடக்கரு...வாரி வாரி வழங்குவாரு பின்னூட்டமாமாமாமா!...பழசு மறந்து போச்சி போல...பின்னூட்டமே போட முடியாம பொத்தி வச்சிருந்த பிளாக் தானே உங்களுது...மறந்துடாதீங்கன்னே....உலகம் உருண்டை ஹெஹெ!
வாரி வாரி வழங்குகிற வள்ளலே, நான் பொத்தித்தானே வச்சிருந்தேன். தொறந்து போடலையே?
நீக்குபொத்தி வச்ச மல்லிகைப் பூவு! பேசிப் பேசி ராசியானதே! நல்ல குன்சான பாட்டுங்க!!
நீக்குஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை ..,
பதிலளிநீக்குword verification - எப்பிடி நீக்குவதேன்று நிறைய பேருக்கு தெரிவதில்லை நண்பரே.., அது தான் உண்மையான காரணம்.. !
ரொம்ப எளிது..
நீக்குபிளாக்கர் Settings--> Posts and Comments போய், "Show Word Verification" என்கிற Options-ஐ "No" என மாற்றவும்!
நியாயமான கேள்விகள்..!!!
பதிலளிநீக்குWhat you are saying is absolutely correct.
பதிலளிநீக்குI just tried to add my comment to check whether you have opted for word verification or not :)
By Shan, Erode.
லேட்டாக வந்த "எரிச்சல்" :))
பதிலளிநீக்குha ha unmai :)
பதிலளிநீக்குநல்லாத்தான் புதுசு புதுசா கண்டு பிடித்து அனுபவத்தினால் கிடைத்த உண்மைகளை வாரி வாரி வழங்குறீங்க! மனதில் பட்டதை உண்மையாக எழுத இருக்கவே இருக்கு அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் நம் தளம் அதனால் மற்றவர்களுக்கு பயந்து எழுத அவசியமில்லை.கட்டுரையில் உண்மை நிறைய உள்ளது
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வரி எடுக்கப்பட்டது இங்கீயிய விரும்பினா பின்னூட்டம் இடுங்க இல்லேன்னா விட்டுடுங்க ஏ இப்படி சின்ன பசங்க மாதிரி அடிச்சிகிறீங்க
பதிலளிநீக்குசரீங்க.
நீக்குநியாயமான கேள்விகள்..!!!
பதிலளிநீக்குதவறுகளை சுட்டி காட்டியதிற்கு. விளக்கம் தந்தமைக்கு நன்றி !
பதிலளிநீக்குமுகநூல் விளம்பரம்
பதிலளிநீக்குநிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது ./// அவ்வ்வ்.. நின்கு ஏனு ஒத்தில்லா
எரிச்சலூட்டும் பதிவுகளைப்பற்றி நன்றாக சொன்னீர்கள். சில பதிவுகளில் ஏதாவதொரு திரைப்படப்பாடலை இணைத்து நம்மை இம்சிக்கிறார்கள்.அதையும் தங்கள் ‘List’ல் சேர்க்கலாம்.
பதிலளிநீக்குஐயா, ரொம்ப சரியா சொன்னிங்க, ஹா... ஹா..
பதிலளிநீக்குஇப்படி நீங்க பதிவு போட அவங்க காரணமா இருந்திருக்காங்க. அதனால அவங்கள ரொம்ப திட்டாதிங்க...
இங்க சொல்றத அவங்க பதிவுல எப்படியாச்சும் கஷ்ட்டப்பட்டு நேரடியா குறிப்பிட்டு சொல்லி இருந்தா அவங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்திருக்கும்ல....
////உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.////
இந்த வரிகளுக்காக என் கருத்தை சொல்லி இருக்கேனுங்க
அப்படியே இந்த மாடரேஷன் வச்சிருக்கரவங்கள என்ன செய்யலாம்னு ஒரு போஸ்ட் போடுங்க. நாம போட்ட கமென்ட் வருமா வராதான்னு அந்த பதிவுல போயி பாத்து அவங்களுக்கு பேஜ் வியு நம்மளால கூடுது.....
பதிலளிநீக்குஓபன் கமென்ட் வச்சா இந்த ஓசி பேஜ் வியு எங்களுக்கு இருக்காதுல.....
சிறிய எழுத்துகள் மற்றும் வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை
பதிலளிநீக்குஇவை இரண்டும் தான் என் பதிவுகளில் பிரச்சனை என்று நினைக்கிறேன்..
சரி செய்ய முயல்கிறேன்
இந்தப் பதிவில் வரிகளுக்கிடையே இடைவெளி அதிகப்படுத்துவது எப்படி என்ற குறிப்பு கொடுத்துள்ளேன்.
நீக்குhttp://swamysmusings.blogspot.in/2011/03/blog-post_27.html
அதிலேயே font 110% என்று இருப்பதை உங்களுக்குத் தேவையான அளவு அதிகரித்துக் கொள்ளலாம்.
நன்றி ஐயா..
நீக்குஇனி பின்பற்றுகிறேன்!
நல்லாச் சொன்னீங்க போங்க. சில பதிவுகளில் முக்கால் வாசி விளம்பரங்கள், தெரியாம அதன் மேல் க்ளிக் செய்தால் பாப்-அப்புகள். சிலருக்கு ஸ்பேஸ் பார் இருப்பதே தெரியாது. படிப்பதற்குள் கண் வலி வந்து விடும். இந்த "மோர்" லின்க் கொடுத்து அவர்களின் வேறு சைட்டுக்கு வர வைக்கும் உத்தி பதிவுகளில் நான் க்ளிக்குவது "மோர்" அல்ல எக்ஸ் பட்டனைத்தான்.
பதிலளிநீக்குவிக்கி பொங்குனதுக்கு காரணம் ஒங்களோட வரிகள் தான். பிச்சைக் காரர்கள் என்று சொன்னது தவறு தானே?
தப்புத்தானுங்க. அப்படிச் சொல்லீருக்கப்படாதுங்க. ஆனா அப்ப வர்ற எரிச்சல் அப்படி எழுதத் தூண்டீட்டுதுங்க. அப்புறம் வீராப்புன்னு ஒண்ணு இருக்குது பாருங்க, முன் வச்ச காலைப் பின்வைக்கக் கூடாதுன்னு, அந்த வீராப்புல சப்பைக்கட்டு கட்டுனேனுங்க. அவ்வளவுதானுங்க.
பதிலளிநீக்குபதிவுலகில் புதியவனான எனக்கு மனதில் பதிய வேண்டிய பதிவு. பிழைகள் இருப்பின் திருத்திக் கொள்கிறேன் அய்யா
பதிலளிநீக்குநிலவன்பன் என்ன சொல்ல வருகிறார்? 'உனக்கு ஒண்ணும் தெரியாது' என்பதைக் கன்னடத்தில் சொல்ல வருகிறாரா? அதற்கு 'நினகே ஏனு கொத்தில்லா' என்று சொல்லவேண்டும். 'நின்கு ஏனு ஒத்தில்லா' என்பதல்ல.
பதிலளிநீக்கு"மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?
பதிலளிநீக்குஅண்டர் கிரவுண்ட் அப்பர் கிரவுண்ட் எல்லாம் எனக்குத் தெரியாதுங்கோ. சம்பந்தர் கிரவுண்ட் (some under ground) ஏதோ கொஞ்சம் தெரியுமுங்கோ.
நீக்குஆமாங்க, பின்னூட்டம் போடறதில இது என்ன புது டெக்னிக்?
//ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.// good comedy.nice post.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் ஐயா !பதிவைப்படிக்கும் நேரத்தில் இவர்கள் எப்ப பின்னூட்டம் இட்டு ம்ம்ம் சூப்பர் என் கோபத்தையும் பதிவாக தந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு>ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று
பதிலளிநீக்குஹா ஹா. அப்படி ஒன்று என் blog இல் இருப்பதே யாரோ சொல்லிதந்தான் தெரிந்தது. இப்ப எடுத்துவிட்டேன்