சனி, 29 செப்டம்பர், 2012

ஈரோடு மாவட்டக்காரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

உலகத்தில் மிக விலை உயர்ந்த பொருளான காண்டாமிருகத்தின் கொம்பிற்கு பல்லாயிரக்கணக்கில் தேவை இருக்கிறது. அந்தக் கொம்பின் மருத்துவக் குணங்களை அனைவரும் அறிவர். இந்தக் காண்டாமிருகம் ஆப்பிரிக்கா காடுகளில் லக்ஷக்கணக்கில் திரிந்து கொண்டு இருக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு இந்தக் கொம்பின் மதிப்பு தெரியாததால் அதை சும்மா தங்கள் கழுத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்.

நமது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆப்பிரிக்கா போயிருந்தார். அப்போது அவர் ஆயிரக்கணக்கில் காண்டாமிருகக் கொம்புகள் ரோடு ஓரங்களில் கொட்டிக்கிடப்பதைப் பார்த்தார். இதற்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் என்பதை உணர்ந்து அங்குள்ள லோகல் தலைவர்களுடன் அக்ரிமென்ட் போட்டுவிட்டு வந்துள்ளார்.

அதை சர்வதேச மார்க்கெட்டில் விற்பதற்காக ஒரு மார்க்கெட்டிங்க் கம்பெனி ஈரோட்டில் ஆரம்பித்துள்ளோம். யாம் பெற்ற இன்பம் ஈரோடு மக்களும் அடைய விரும்புகிறோம். இதற்காக வருகிற திங்கட்கிழமை ஈரோடு கொங்கு திருமண மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டியிருக்கிறோம். கூட்டத்தில் விருப்பமுள்ளவர்களை கம்பெனி மார்க்கெட்டிங்க் ஆபீசராக நியமனம் செய்ய உள்ளோம். மாத சம்பளம் 50000 ரூபாய். நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே கம்பெனி வேலையைச் செய்யலாம்.

ஆபீசர் வேலைக்கு டெபாசிட் தொகை வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிராப்ட் கொண்டு வரவும். டிராப்ட் " ஈரோடு காண்டாமிருகம்  கம்பெனி" என்ற பெயருக்கு எடுக்கவும். வேலைக்குத் தகுதியுள்ளவர்களுக்கு உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுக்கப்படும்.

அனைவரும் வருக, வருக, வருகவே.

பின் குறிப்பு: வேலையில் சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் டெபாசிட் தொகை திருப்பித் தர மாட்டாது. ஈரோடு மாவட்டம் தவிர வேறு மாவட்டக்காரர்கள் வரவேண்டாம்.

19 கருத்துகள்:

 1. ஏன் ஈரோடு மாவட்டக்காரங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை என்று சந்தேகம் வருகிறதா? அங்குதான் மாங்கா மடையர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
 2. முதல் கம்மென்ட்டு போடலேன்னா இதை உண்மைன்னு நம்பி கூட்டத்துக்கு வர வாய்ப்பிருக்கு சார்!

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தானாகவே சரியாகும் என்று காத்திருந்தேன். ஒண்ணும் சரியாவதாகக் காணோம். ஒரு பதிவு போட்டு உதவி கேக்கறேன்.

   நீக்கு
  2. முரளிதரன், தி. தமிழ் இளங்கோ சொன்ன வழியில் செய்தேன். ஓட்டுப் பட்டை வந்து விட்டது. இப்போது பார்க்கவும்.

   நீக்கு
 4. ஐயோ பாவம் ஐயா அந்த மக்கள் இப்படி ஒரு பதிவு அவசியமா எனவும் சொல்லத் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு நாளா செய்தித்தாள் பார்த்திருந்தீங்கன்னா உங்களுக்கு வெவரம் புரியும். எவனோ ஒருத்தன் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாசம் 8500 ரூபாய் வட்டி கொடுக்கறான்னு சொன்னதுக்கு பல நூறு கோடியக் கொண்டு போய்க் கொட்டியிருக்காங்களே, ஏதோ நமக்கும் ஒண்ணு ரெண்டு கோடி கெடச்சாப் போதும்னுதாங்க இந்த அறிவிப்பு.

   நீக்கு
 5. நீங்களும் எப்படியாவது 'திடீர் பணக்காரர்' ஆகவேண்டும் என்று பார்க்கிறீர்கள் போல இருக்கிறது. என்ன.. கொஞ்சம் உண்மையும் கலந்து எழுதிவிடுகிறீர்கள். (//வேலையில் சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் டெபாசிட் தொகை திருப்பித் தர மாட்டாது.//நாம் தான் தலைமறைவு ஆகிவிடப்போகிறோமே. எதற்கு இந்த கண்டிஷன்?) அதனால்தான் யாரும் மாட்ட மாட்டேன் என்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனுங்க, கான்பூர்ல இருந்து இங்க வந்து நம்ம மக்களைக் கொள்ளையடிச்சுட்டு போறான். உள்ளூர்க்காரனுக்கும் கொஞ்சம் கொடுக்கட்டுமுங்களே?

   நீக்கு
  2. என்னதான் தலைமறைவு ஆனாலும் ஒரு நாளக்கு சரண்டர் ஆகித்தானே ஆகணும். அன்னிக்கு நாம இந்தக் கண்டிஷனைக் கோர்ட்டில் சொல்லலாமில்லையா?

   நீக்கு
 6. ayya, the same scheme runs in tirupur district also..especially sorroundings of avinashi, thekkalur lot of makkans(makkals) invested in them...here one teacher (elementary school teacher of vanjipalayam school) is the organiser..he was coming to school by scorpio!!!!...here they are giving 1050 for 10000 invested..in any business we can take that?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் எல்லாம் மாக்கான்களாக இருந்தால் என்ன செய்யமுடியும்? பட்டுத்தான் தெரிந்து கொளவேன் என்று இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது.

   நீக்கு

 7. எவ்வளவுதான் கரடியாக் கத்தினாலும் , நல்லவர்கள் ( உங்கள் ) பேச்சை யாராவது கேட்கப் போகிறார்களா என்ன. ?

  பதிலளிநீக்கு
 8. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று முன்பே சொல்லி விட்டார்கள்.

  நல்லது சொன்னாலும் கேட்பதில்லை. பட்டாலும் புத்தி வருவது இல்லை.
  எல்லாம் பணம் படுத்தும் பாடு வேறு என்ன சொல்வது.

  பதிலளிநீக்கு
 9. இதை பேப்பர்ல குடுத்திருந்தா இந்நேரம் பத்து கோடி வந்து சேர்ந்திருக்கும்!!

  பதிலளிநீக்கு
 10. நிகழ்வுகளை பார்த்தால், உங்க யோசனையை செயல்படுத்தலாம்னு எம்மனசுக்கு படுதுங்கய்யா,,,,

  ஆலோசனை தேவை,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
 11. ஐயா,
  நானும் தான் ஒரு ஸ்கீம் வைத்துக்கொண்டு, நேர்மையாக எல்லோரிடமும் சொல்கிறேன்.ஒரு பய கூட வரமாட்டேங்குறாங்க,,( 150000 முதலீடு, மாதம் 5000 வீதம் 24 மாதங்கள், )

  பதிலளிநீக்கு