ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

நினைவுகளின் சங்கமம்


கோவை விவசாயக் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புத்தோழர்களுடன் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம் நான் பல வருடங்கள் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த காரணத்தினால் எனக்கும் அழைப்பு வரும்.

அந்த வகையில் நேற்று ஒரு சந்திப்பு நடந்தது. ஆசிரியர்களுக்குத் தங்கள் பழைய மாணவர்களைச் சந்திப்பதிலும் மாணவர்களுக்குத் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதிலும் எப்போதும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அது தவிர நேற்று ஒரு மாணவரின் திருமண நாளாக அமைந்ததால் அந்த மகிழ்ச்சியையும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.




அந்த விழாவில் எடுத்த சில படங்கள். (நோக்கியா 5230 செல்போனில் எடுத்தது. ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது).


என்னைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று நம்புகிறேன்.
இடமிருந்து மூன்றாவதாக இருப்பதுதான் நான்.

பழைய நினைவுகள் எப்பொழுதும் இனிமையானவை.

17 கருத்துகள்:

  1. மாணவர்கள் மறவாது அழைக்கும் அளவுக்கு அவர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறீர்கள்.இளமை வேகம் இன்னும் உங்களுக்கு இருக்கிறது. அதை உங்கள் எழுத்துகளில் காண முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. நினைவுகள் இனிமையானவை மட்டுமல்ல சுகமானவையும் கூட. உங்களது மாணவர்கள் உங்களை அவர்களது சந்திப்புக்கு அழைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. நான் எங்களது சந்திப்பில் சொன்னதை இங்கு திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும் மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  3. பழைய நினைவுகள் எப்பொழுதும் இனிமையானவை.
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

    தற்போதைய தமிழ்நாடு அரசாங்க கொள்கையின்படி இது தவறு. இப்படி வந்துருக்க வேண்டும்.

    பதிவுகளை விலையில்லாமல் பெற.


    ////////


    தலைப்பு நன்றாக இருந்தது. ஆனால் பசங்களைப் போல படங்களைப் போட்டு ஒப்பேற்றி விட்டீங்க. உங்களுக்கு எழுதுவதற்கான நிறைய விசயங்கள் இருந்த போதிலும் எழுதுவதில் ஒரு சோம்பேறித்தனம் இருப்பதாக தெரிகின்றது. சரியா?

    ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளியில் என்னுடைய படித்த ஏழெட்டு பேர்களை இன்னமும் மாதம் ஒரு முறை அழைத்துப் பேசி விடுவதுண்டு.

    நேற்று கரூரில் இருக்கும் (ஐந்தாவது படிக்கும் போது ஒரே பெஞ்சில் என்னுடன் இருந்தவன்) நண்பனுடன் பேசினேன். வகுப்பில் சரியான பயந்தாங்கோலி பக்கோடா. தற்போது செட்டிநாடு குழுமத்தில் மின்சாதன மேற்பார்வையாளராக உயர்பொறுப்பில் இருக்கின்றான்.

    எப்படி நீ மட்டும் அணைவரின் எண்களை வாங்கி வைத்து பேசுகின்றாய்? என்றான்.

    சில சமயம் வளர்ந்தபிறகு வாடா போடா என்ற உரிமை கூட போய் வாங்க போங்க என்று மாறிவிடுகின்றது.

    பள்ளியில் முரடனாய் இருந்தவன் இன்று எதைப்பார்த்தாலும் நின்று நிதானித்து பேசும் பாங்கு.
    ஐந்து பாடங்களிலும் பத்து மதிப்பெணகளுக்கு கீழே வாங்கியவன் இன்று பள்ளியில் ஆசிரியர்.
    அற்புதமாக படித்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தவன் சிறைத்தண்டனை பெற்று வாழும் வாழ்க்கை
    நகை தொழிலில் குறுகிய காலத்தில் லட்சங்களை அள்ளி குவித்தவன் பெண்கள் தொடர்பால் இழந்த கதை
    ஜாதிப் பெருமையை ஐந்தாம் வகுப்பிலேயே பேசுபவன் இன்று மனைவியை அதே ஜாதியினால் கவுன்சிலராக்கி ஊர் முழுக்க வசூலிக்கும் திறமை

    இதே போல பல ஆச்சரியங்கள்.

    பழைய நண்பர்களை சந்திக்கும் போது பேசும் போது மறுபடியும் தொடர்பில் கொண்டு வரும் போது நாம் பொன்னியின் செல்வன் படிக்கத் தேவையில்லை. வாழ்க்கையில் பல செல்வங்களை காசு கொடுக்காமலேயே வாங்கிக் கொள்ள முடிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எழுதுவதில் ஒரு சோம்பேறித்தனம் இருப்பதாக தெரிகின்றது. சரியா?//

      உண்மையைக் கண்டுபிடித்த உங்களை பாராட்டுகிறேன். முடியவில்லை என்பதுதான் என் பதில். சோர்வு வருகிறது.

      நீக்கு
  5. நினைத்துப் பார்த்தல் கூட ஒருவித சந்திப்புதானே ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பகிர்வு! எனக்கும் இப்படி பழைய நண்பர்களை சந்திக்க ஆசை! நேரம் எப்போது கூடுமோ தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  7. மாணவர்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும். ஒவ்வொரு பேட்சிலும் எத்தனை மாணவர்களை உங்களால் நினைவு வைத்திருக்க முடிந்தது? ஏதாவது ஸ்பெஷல் நெகிழ்ச்சி நிகழ்வு உண்டா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி பேட்ச் வாரியாக ஞாபகம் இல்லை. ஆனாலும் சில மாணவர்களை, சில நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை அடுத்த பதிவில் படியுங்கள். என்னைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தலைகீழாக மாறிவிடும்.

      நீக்கு

  8. பழைய வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு என்று ஏதும் நிகழாவிட்டாலும், அம்பர்நாத்-இல் பயிற்சி பெற்றவர்கள் என்ற முறையில் இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு சந்திப்பு ஏற்பாடாயிருந்தது. அங்கு வருகை தந்தவர்கள் பெரும்பாலோர் எழுபது வயதுக்காரர்கள். உலகின் பல கோடிகளிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. ஒரு நாள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழிந்தது. மீண்டும் நினைவலைகள். நன்றி.

    பதிலளிநீக்கு