மனிதனுக்கு அந்தரங்கம் என்று ஒன்று இருக்கிறது. அவன் நினைத்த, நினைக்கும் எண்ணங்கள், செய்த, செய்யப்போகும் செயல்கள் இவைகளைப்பற்றி, எல்லாவற்றையும் எல்லோரிடத்திலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொல்பவனை பைத்தியக்காரன், வெள்ளைச்சோளம், விவேகமற்றவன், இப்படி பல பட்டங்களினால் அழைக்கப்படுவான்.
இப்படித்தான் எங்கள் காலத்தில் இருந்தது. காலங்கள் மாறுகின்றன. வாழ்க்கை நெறிகள் மாறுகின்றன. இன்று open Society என்று சொல்லுகிறார்கள். மனிதன் வாழ்வில் ஒளிவு மறைவு கூடாது. எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனிதன் நாகரிகம் அடைந்தபோது மானத்தை மறைக்க ஆடைகள் அணிய ஆரம்பித்தான். இப்போது நாகரிகம் முற்றிப்போய் Nude club ஆரம்பித்து நடக்கின்றன.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் மனித வாழ்விற்கு வேண்டிய கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்கா வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன. பாதி பேருக்கு அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நமது புண்ணிய பூமியில் ஆளுக்கு ஒன்று என்ற அளவில் செல்போன்கள் இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ரோட்டில் நடந்து செல்லும் பாதி ஆட்கள் செல்போன் பேசியபடிதான் நடக்கிறார்கள். மீதிப் பேர் செல்போனைக் கையில் வைத்தபடிதான் நடக்கிறார்கள்.
காலையில் தூங்கி எழுந்தவுடன் எல்லோரும் செய்யும் காரியங்களை காலைக்கடன்கள் என்று பூடகமாகச் சொல்லிவந்தோம். அதே மாதிரி தம்பதிகள் குடும்பம் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டோம். ஆனால் அவற்றை இன்று படம் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். பிறகு வம்பில் மாட்டிக்கொண்டு குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறார்கள்.
இன்டர்நெட்டில், செல்போனில் முகம் பார்க்காமலேயே தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தங்கள் அந்தரங்கங்களை முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்கிறார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் எழுகின்றன.
ரியாலிட்டி ஷோ என்று உலகத்துக்கே எல்லாத்தையும் சொல்லும் நாகரிகம் வந்துருச்'சே'!
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதை எல்லாம் "இது தான் நாகரீகம்... இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த நவீன உலகில் குழந்தைகளை இவ்வாறு தான் வளர்க்க வேண்டும்" என்று பல 'நவீன' பெற்றோர்களின் எண்ணம் சார்... உருப்படுமா இந்த நாடு ?
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ! (த.ம.ஓ 2)
ஒழிவு மறைவில்லாத சமூகம் அவசியம் தான்... அதற்காக அனைத்தையும் துறந்து நிர்வாணமாக அலைய வேண்டியதில்லை. மனிதனுக்கு எக்காலத்தில் அந்தரங்க விடயங்கள் தேவையே !!!
பதிலளிநீக்குஇணைய உலகில் அந்தரங்கங்களை பாதுகாப்பதுக் குறித்து மேன்மேலும் விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும் .... !!!
விஞ்ஞான வளர்ச்சியின் பயனை இவ்வாறு விவஸ்தையில்லாமல் பயன்படுத்தி சீரழிந்து போகும் இந்திய சமுதாயத்தினை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியுமா என்று சொல்ல முடியவில்லை.
பதிலளிநீக்குஎன்னில் உள்ள ஆதங்கம் தங்கள் வரிகளில் கண்டேன்ஐயா.
மிக நல்ல பதிவு! உங்கள் கருத்துக்கள் உண்மைதான்! உலகம்ரொம்பவும் மாறிவிட்டது!
பதிலளிநீக்கு// இப்போது நாகரிகம் முற்றிப்போய் Nude club ஆரம்பித்து நடக்கின்றன.//
பதிலளிநீக்குஅவங்க கற்காலத்திற்கு மாறுகிறார்கள், அதை எப்படி முற்றிப் போன நாகரீகம் என்று சொல்ல முடியும்? உடைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதர்களின் தோற்றத்திற்கு கொடுப்பதாக நினைக்கும் சமூகத்தில் அந்த உடையைத் துறந்து மனம் போல் வாழ்பவர்களை தவறு என்று சொல்ல எனக்கு தோன்றவில்லை.
அட நீங்க வேற!, நட்பு வட்டத்தை அதிகமாக்க முகநூல், கூகுள் + என்று பல கணக்குகள் திறந்து வைத்து அனைவரையும் அதில் இணைக்க முயற்சிப்போம். ஆனால், அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள ஆர்வம் காட்டமாட்டோம் என்று எடுத்ததெல்லாம் இரட்டை வேடம் தான். இதிலும் அப்படியே எதையெல்லாம் மறைக்க வேண்டுமோ அதை மறைக்க மாட்டோம். அடுத்தவரைப் பற்றிய வன்மத்தை மட்டும் மனதில் வைத்து பழகுவோம்....
பதிலளிநீக்குஅந்தரங்கம் புனிதமானது.அது அம்பலமாதல் அசிங்கம்
பதிலளிநீக்குஅந்தரங்கம் புனிதமானது.அது அம்பலமாதல் அசிங்கம்
பதிலளிநீக்குஎது எது
பதிலளிநீக்குஎங்கே எங்கே
எப்படி எப்படி நடக்க வேண்டுமோ
அது அது
அங்கே அங்கே
அப்படி அப்படி நடக்கும்
அதனால் அச்சம் தவிரத்து அமைதி கொள்ளுங்கள்.(°__°)