திங்கள், 9 ஜூலை, 2012

நான் செய்த புரட்சிகள்


முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.மறுநாள் மீட்டிங்க்குக்கு பிரதம மந்திரி தவிர ஏறக்குறைய மற்ற எல்லா மந்திரிகளும் ஆஜர். செக்ரடரிகள் எல்லோரும் வந்திருந்தார்கள். நம்ம பெர்சனல் செக்ரடரியையும் ஸ்டெனோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

எல்லோரையும் பார்த்து என் சொற்பொழிவை ஆரம்பித்தேன்.

நீங்கள் எல்லோரும்தான் இந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறவர்கள். இந்திய நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்றப்போவதில்லை. நீங்கள் செய்த சேவைகளினால் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வெளிநாட்டில் கேட்டால்தான் தெரியும். இனியும் அதே நீலை நீடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை.

நான் வகுக்கும் திட்டங்களை நீங்கள் எல்லோரும் முழு மனதுடன் ஒத்துக் கொண்டு செயல் புரிய வேண்டும். அதற்கு விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் கைகளைத் தூக்குங்கள் என்றேன்.

யாரும் இதை எதிர்பார்க்காததினால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே கோச்சிங்க் கிளாஸ் நடத்தினால்தான் அவர்களுக்கு ஏதாவது பேசத் தெரியும். பிரதம மந்திரி வேறு இல்லையா? அவர் இருந்தால் எல்லாவற்றையும் அவர் கவனித்துக்கொள்வார். நாம் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருக்கலாம். இந்த ஆளுக்கு ஓட்டுப்போட்டு ஜனாதிபதி ஆக்கினது தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒருவரும் கை தூக்கவில்லை.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களில் யாருடைய பதவிக்கும் ஆபத்தில்லை என்றேன். இதைக்கேட்டவுடன்தான் எல்லோருடைய முகத்திலும் கொஞ்சம் பிரகாசம் தெரிந்தது.

கவனமாகக் கேளுங்கள். நம் இந்திய நாட்டை மற்ற நாட்டவர்கள் கேவலமாகப் பேசுவதற்கு முக்கிய காரணம் நம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தங்கள் காலைக் கடன்களை நிறைவேற்றும் முறைதான். இதை மாற்றினாலே நம் நாடு வல்லரசாகும் பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது என்று அர்த்தம்.

நமது மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உடனே தங்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்கு விழிப்பு உண்டாக்கவேண்டும். உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன். நான்காம் நாள் காலையிலிருந்து யாரும் வெட்டவெளியில் காலைக்கடன்களை கழிக்கக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்களை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் சகாரா பாலைவனத்தில் விடப்படுவார்கள். இந்த வேலையை நம் முப்படைத் தளபதிகளிடம் விடுகிறேன்.

இதற்கான எழுத்து மூலமான உத்திரவுகள் இன்று மாலைக்குள் எல்லோருக்கும் வந்து சேரும். உத்திரவுகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த கூட்டம் நாளை இதே நேரத்தில் நடைபெறும். நாளைக் கூட்டத்தில் "லஞ்ச ஒழிப்பு வாரியம்" அன்னா ஹஸாரே தலைமையில் தொடங்கவிருக்கிறேன். மேலும் பல திட்டங்களை அறிவிப்பேன். இந்தக் கூட்டம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டேன்.


15 கருத்துகள்:

 1. இரண்டு நாட்களுக்கு முன்பே கோச்சிங்க் கிளாஸ் நடத்தினால்தான் அவர்களுக்கு ஏதாவது பேசத் தெரியும்.

  கதை - வசன்ம் - டைரக்‌ஷன் - !!????

  பதிலளிநீக்கு
 2. கைவசம் நிறைய திட்டங்கள் வைச்சிருக்கீங்க போல!

  முதல் திட்டமே நடந்தால் நல்லாயிருக்கும்! :)

  தொடருங்க!

  பதிலளிநீக்கு
 3. // நாளைக் கூட்டத்தில் "லஞ்ச ஒழிப்பு வாரியம்" அன்னா ஹஸாரே தலைமையில் தொடங்கவிருக்கிறேன். மேலும் பல திட்டங்களை அறிவிப்பேன். இந்தக் கூட்டம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டேன். // வந்தவர்களின் கருத்துகளை கூட கூற விட வில்லையே, சில சமயங்களில் இப்படித் தான் இருக்க வேண்டுமோ.

  படித்துப் பாருங்கள்

  தலைவன் இருக்கிறான்

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 4. புரட்சிகளும் திட்டங்களும் தொடரட்டும் சார்... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி ! (த.ம.ஓ. 2)

  பதிலளிநீக்கு
 5. ஆரோக்கியத்தினை உணர்த்தம் முதல் திட்டம் உத்திரவுகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. உட்காருவதற்கு வசதி செய்து விட்டல்லவா வெட்ட வெளியில் உட்காரக் கூடாது என்று சொல்ல வேண்டும். பாவம் ,முப்படைத் தளபதிகள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1. உட்காருவதற்கு வசதி செய்து கொடுத்த இடத்தை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?

   2. பொதுச்சொத்துன்னா அது யாரோ சொத்து, அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனப்பான்மை நம்முள் ஊறிப்போய் இருக்கிறது.

   3. மகாத்மா காந்தி வழிமுறைகள் சொல்லிப் போயிருக்கிறார். அவர் போய் 60 வருடத்திற்கு மேல் ஆகியும் நாம் அதைக் கடைப்பிடிக்கவில்லை.

   4. அவரவர்களே ஏற்பாடு சொய்து கொண்டால்தான் நீடித்து இருக்கும். அதற்குத்தான் மூன்று நாள் டைம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

   நீக்கு
 7. ///நம்ம பெர்சனல் செக்ரடரியையும் ஸ்டெனோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.///
  Writer's block - கேள்விப்பட்டு இருப்பீர்கள்; அது மாதிர் எனக்கு Reader's block அதிகம். ஆகவே, முதலில் பக்கத்தில் வைத்துக் கொண்ட செக்ரடரியையும் ஸ்டெனோவையும் ஆனா பெண்ணா என்று சொல்லுங்கள்.

  மேலும், ஒரு நிமிடம் பயந்து விட்டேன்; எங்கடா என்னுடைய கோட்டையாகிய "புரட்சி" கிட்டே வரார் என்று! கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் சார், புரச்சி எப்பவும் என்னுடைய மைதானம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சீரீஸ்ல மொதப் பதிவ நீங்க பாக்கல போல இருக்கு. பாருங்க, இதுக்கு விடை இருக்கு.

   http://swamysmusings.blogspot.in/2012/07/1.html

   நீக்கு
 8. நல்லா கனவு கானுங்க! மெய்ப்படுதான்னு பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
 9. "என்னப்பா ஏன் சோகமா இருக்கே?”
  “ஒண்ணுமில்லேப்பா”
  “சும்மா சொல்லு,கஷ்டத்தை பகிர்ந்தா பாதியாகும்; சந்தோஷத்தை பகிர்ந்தா இரட்டிப்பாகும்”
  “அது கஷ்டமா..சந்தோஷமான்னு தெரியலியே?”
  “எதுவானாலும் எங்கிட்ட சொல்லேன்”
  “ஒண்ணுமில்லேப்பா.. நம்ம கந்தசாமி சார் நல்லாத் தான் இருந்தாரு..யார் கண் பட்டதோ தெரியலே..வர,வர அவர் போக்கே சரியில்ல..எப்படி இருந்த மனுஷன்..ம்..”
  “ தம்பி..அப்ப வரேன்..ஏதோ நம்மால தீர்க்க முடியற ப்ரச்னையாக்கும்னு பார்த்தேன்..ம்..”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியும் கீழ்ப்பாக்கம் போறதுன்னு முடிவு பண்ணீட்டனுங்க.வாழ்க்கையில அது ஒண்ணுதான் பாக்கியாயிருந்துச்சு. அதையும் பாத்துடறதுதானுங்க.

   நீக்கு
 10. நம்பள்கி உங்கள் ஆல்ட்டர் ஈகோவா அல்லது நீங்கள் அவரது ஆல்ட்டர் ஈகோவா :) ரெண்டு பேரும் இந்த மேட்டர் பத்தியே எழுதுறீங்களே

  பதிலளிநீக்கு