சனி, 21 ஜூலை, 2012

வாலை விட்டு ஆப்பை எடுத்த குரங்கு

நான் ஒரு சரியான வாழைப்பழச் சோம்பேறி. நாளைக்கு தள்ளிப்போடக்கூடிய வேலைகளை நாளை மறுநாளைக்கு தள்ளிப் போடுபவன். ஒரு நொடி சலன மனநிலையில் வாலை பாதி அறுத்த மரத்தின் இடைவெளியில் விட்டுவிட்டு ஆப்பை எடுத்துவிட்டேன். இப்போது வால் சிக்கிக்கொண்டு விட்டது. "காள்,காள்" என்று கத்தினால் யார் உதவிக்கு வரப்போகிறார்கள்?


விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முன் ஒரு பதிவுலக நண்பர் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் என்னை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு, உங்களை தமிழ்மண நட்சத்திரமாக ஆக்க சிபாரிசு செய்யட்டுமா என்று கேட்டிருந்தார். நான் சினிமா நட்சத்திரம் மாதிரியாக்கும் என்று முன்பின் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன்.


பிறகு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் நிர்வாகி ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார் அதில் உங்களை நட்சத்திரமாக்குவதில் தமிழ்மணம் பெருமையடைகிறது, இத்தியாதி, இத்தியாதி, என்று சொல்லிவிட்டு, வருகிற ஜூலை மாதம் 23 ம் தேதி தொடங்குகிற வாரத்தில் நீங்கள் தமிழ்மண வானில் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் என்று முடித்திருந்தார். என்னுடைய ஒப்புதல் வேண்டுமென்று கேட்டிருந்தார்.


உங்களுக்குத் தெரியும், நான் கணிணியைப் பார்ப்பது காலை 3 மணியிலிருந்து என்று. தூக்கக் கலக்கத்தில் சரி என்று பதில் போட்டுவிட்டேன். இப்போதுதான் அந்த அஞ்சலை முழுமையாகப் பார்த்தேன். அதில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோதுதான் வாலை விட்டுவிட்டு ஆப்பை எடுத்து விட்டேன் என்பது மண்டையில் உறைத்தது.


நான் வருகிற ஜூலை 23 ம் தேதி முதல் தினம் ஒரு பதிவு வீதம் ஒரு வாரம் பதிவு போடவேண்டுமாம். அவை நட்சத்திரப் பதிவுகள் என்று தமிழ்மணத்தில் தனியாக கட்டம் கட்டி காண்பிப்பார்களாம். என்னுடைய தலை கழுத்தில் நிற்காதாம். என்னை அநேகமாக இந்திய ஜனாதிபதியாக இருக்கும்படி பிரதம மந்திரி கெஞ்சுவாராம். இப்படி பல ஆம்கள்.


உரலுக்குள் தலையைக் கொடுத்த பின் உலக்கைக்குப் பயந்தால் ஆகப்போகிறது என்ன? நடப்பவை நடந்தேதான் தீரும். துணிந்து விட்டேன். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் என் நட்சத்திரப் பதிவுகளைப் படிப்போருக்கு என் அனுதாபங்களும். வாழ்க பதிவுலகம்.

பின்குறிப்பு. சரியான படம் கூகுளில் கிடைக்கவில்லை. ஆகவேதான் இந்தப்படம். இதுவும் என் நிலையை சரியாகத்தான் காட்டுகிறது.

31 கருத்துகள்:

  1. நட்சத்திர பதிவுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!....

    பதிலளிநீக்கு
  2. ஆப்பசைத்து, நட்சத்திர பதிவாளரானதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நட்சத்திர(அட்வான்ஸ்) வாழ்த்து(க்)கள்.

    வாழைப்பழ சோம்பேறின்னு சொல்லிக்கிட்டே மூணு நாளைக்கு முன்னே ஆஜராகிட்டீங்க!!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. அம்பாளடியாள், பந்து, துளசிகோபால் எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு என்ன சார்!இப்படி சொல்லியே அசத்தப் போறீங்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் தமிழ்மண சூப்பர் ஸ்டாருக்கு...சார் மறந்துடதீங்க மன்றம் ஆரம்பித்தால் நான் தான் அதற்கு தலைவன்....அதன் பிறகு நாம் கட்சி ஆரம்பித்து அடுத்த தமிழக முதல்வராக உங்களை ஆக்கிவிடுகிறேன்...ஒகே வா

    பதிலளிநீக்கு
  7. அது சரி..

    கூகிளிலா படத்தை எடுத்தீர்கள் ?

    அச்சு அச்சா உங்க மாதிரி இருக்கே ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யய்யோ, உங்களுக்கு விஷயமே தெரியாதா? என் படங்கள் எல்லாமே கூகுளில்தான் போட்டு வச்சிருக்கேன்!

      நீக்கு
  8. உங்களுக்கெல்லாம் தினம் ஒரு பதிவு போடுவது கிள்ளுக் கீரையாய்த்தான் இருக்கப் போகிறது. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நட்சத்திர ‘அந்தஸ்து’ பெற்று திங்கள் முதல் சிறப்புப் பதிவுகள் தர இருக்கின்ற உங்களுக்கு, எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. என் நெஞ்சார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள், ஐயா.

    தமிழ்மண நட்ச்த்திரமாக ஒரு வாரம் ஜொலியுங்கள்.

    நானும் இது போல ஆரம்பத்தில் மிகவும் பயந்தேன்.
    பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் தெளிந்தது.

    அதைப்பற்றிய என் பதிவுக்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

    தலைப்பு: ”Happy இன்று முதல் Happy”

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  11. நட்சத்திரபதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. நட்சத்திர பதிவாளரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  13. நட்சத்திரப் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.
    நட்சத்திரப் பதிவுகள் சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  14. ஆப்பசைத்த குரங்காய் நான் அகப்ப்பட்டேனே !' அப்படின்னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா,ரைமிங்காகவும் இருக்கும்;பட்டினத்தார் பாடலைக் கோட் செய்தாற் போலவும் இருக்கும்..

    சான்ஸ் மிஸ்ட்.

    :))

    வாழ்த்துக்கள். கலக்கலான பதிவுகளைத் தயார் பண்ணுங்க..

    மழைநீர் சேமிப்புத் திட்டம்,மண் பரிசோதனை வேளாண்மைப் பதிவு எங்கே?

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள். தினம் ஒரு பதிவு போடறதெல்லாம் உங்களுக்கு உரித்த வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி... அசத்துங்க!

    பதிலளிநீக்கு
  16. Engal pathivulaga singam singela ithaiyellam samaaliththu vituveevigal.vaalththugal.

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் சார். தமிழ்மண அறிமுகத்தில் விவசாய இலாகாவில் பணி புரிந்ததை சொல்லியிருந்தீர்கள். பல்கலை கழக பேராசிரியராக இருந்ததையும் குறிபிட்டிருக்களாம்!

    பதிலளிநீக்கு
  18. இந்தவார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள்! அசத்துவீர்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பதிவை காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்

    பதிலளிநீக்கு