அன்புடையீர்,
ஒரு வார காலத்திற்கு
என்னை பதிவுலக நட்சத்திரமாக மாற்றிய தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் நிர்வாகிகளுக்கும்,
குறிப்பாக திரு. சங்கரபாண்டி அவர்களுக்கும், இந்த தகுதிக்கு என்னை முன்னிலைப்படுத்திய
நண்பர் கோவி. கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நடசத்திரப்
பதிவுகளுக்குப் பெருவாரியாக வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமிட்டவர்களுக்கும், வாழ்த்து
கூறியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்களுக்கும், பார்வையிட்டவர்களுக்கும், திரட்டிகளில்
ஓட்டுப் போட்டவர்களுக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன். இக்கடனை எவ்வாறு தீர்ப்பேன்
என்ற எண்ணம் என்னை ஒருவித குற்ற உணர்விற்குத் தள்ளியிருக்கிறது.
என் வயதின் காரணமாகவும்,
உடல், மன நிலை காரணமாகவும் என்னால் அதிகமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட முடிவதில்லை.
ஆகவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கம்பன் காட்டிய இலங்கை வேந்தன் போல் கலங்குகிறேன். நண்பர்கள் இந்நிலைக்காக
என்னை மன்னிக்கவேண்டும்.
என்னுடைய இந்த
வாரப் பதிவுகள் நட்சத்திரப் பதிவுகளின் தரத்தை எட்டாமல் இருந்திருக்கலாம். அதற்கு நான்
முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னால் நான் எழுதியவற்றைத் திரும்பவும் படித்து
மெருகேற்ற முடிவதில்லை. என் சோம்பேறித்தனம்தான் அதற்கு முக்கிய காரணம். அதற்காக தமிழ்மண
நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, என்னால்
விரிவாகவும் எழுத முடிவதில்லை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம்
என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே இதற்குக் காரணம். ஆகவே என்னுடைய இந்த நட்சத்திரப்
பதிவுகள் அனைத்தும் சுருக்கமாகவே அமைந்து விட்டன. சில சமயம் அவை திடீரென்று முடிந்து
விட்ட மாதிரியோ அல்லது குறையுடன் முடிந்து விட்ட மாதிரியோ கூடத் தோன்றலாம். இது என்னுடைய
பலகீனம். இதைப் பொறுத்துக்கொண்டு என்னை உற்சாகப்படுத்திய அத்துணை நல்ல நெஞ்சங்களுக்கும்
மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை
தமிழ் மணமும் பதிவுலகமும் எனக்களித்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இனிமேல் நான் எழுதுவது
படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற உணர்வை இந்த வாய்ப்பு என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.
இனி வரும் பதிவுகளில் இந்த உணர்வை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
அன்பின் அய்யா - பதிவுகள் அனைத்துமே அருமையாகத் தான் இருந்தன - ஏன் கவலைப் படுகிறீர்கள் - போற்றுவார் போற்ற புழுதி வாரித்தூற்றுவார் தூற்ற என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கொள்கை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமிக்க நன்றி, சீனா அய்யா.
நீக்குஉங்கள் வலைச்சர ஆசிரியர் பதவியை மறுத்தது மனதில் ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தப் பதவிக்கு நான் போருத்தமானவன் என்று நீங்கள் கருதினால் ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழ்மண நட்சத்திரம் என்பது ஒரு வார அங்கீகாரம், ரொம்ப உணர்ச்சி வசப்படத் தேவை இல்லை, உங்கள் ஒருவாரம் நட்சத்திரம் இயல்பாக சுவையாக இருந்தது. பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி கோவி.கண்ணன் அவர்களே.
நீக்குஎடுத்துக் கொண்ட தலைப்புகளும் சொல்லிய விதங்களும் நன்றாகத்தான் இருந்தன. சிறப்பாக முடித்தீர்கள். கடவுள், பதிவுலகம் பற்றிய பதிவுகள் எங்களையும் யோசிக்க வைத்தன. நன்றி.
பதிலளிநீக்குநன்றி, ஸ்ரீராம் அவர்களே.
நீக்கு//சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம் என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே இதற்குக் காரணம். //
பதிலளிநீக்குஐயோ.... இது தெரியாமத்தானே நான் எல்லாம் வளர்த்திக்கொன்டே போறேன்:(
இந்தவார நட்சத்திரப்பதிவுகள் அனைத்துமே அருமை.
இனிய பாராட்டுகள்.
உங்கள் விரிவான பதிவுகள்தான் அழகாக இருக்கின்றன. சுருக்கி விடாதீர்கள்.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா .தங்கள் ஆக்கங்கள் எப்போதுமே
பதிலளிநீக்குசிறப்பானவைதான் .கவலை வேண்டாம் மகிழ்வுடன் மேலும்
சிறப்பான ஆக்கங்களைத் தொடருங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்க்ள் ஒரு வார தமிழ்மணப் பதிவுகள் அனைத்தும்
பதிலளிநீக்குசிறப்பாகவும் பய்னுள்ளதாக்வும் இருந்தன
வாழ்த்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குதங்களின் ஒரு வார தமிழ்மணப் பதிவுகள் அனைத்தும் சுருக்கமாகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன. டேக் இட் ஈஸியாக எடுத்து கொள்ளுகள் ஐயா.... எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
பதிலளிநீக்குஎடுத்த பணியை செம்மையாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம் என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே --
நீக்குஇந்த வித்தையை டியூசன் வைத்தாவது கற்றுக்கொள்ள வேண்டுமெ !
தமிழ்மண நட்சத்திரத்திற்குப் பாராட்டுக்கள் !
நீக்குதங்களின் ‘நட்சத்திர’ப் பதிவுகளில் பயன்தரும் நல்ல கருத்துகள் இருந்தன. இது உண்மை. நம்புங்கள்.
பதிலளிநீக்குஆரவாரமற்ற எதார்த்த நடையில் கருத்துகளை முன் வைத்தீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம்.
‘வலைச்சரம்’ வாய்ப்பை ஏற்று, அப்பணியைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
யாரும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு பதிவும் உங்கள் ட்ரேட் மார்க் , அனுபவத்தின் கருத்துக்கள். நன்றாகவே இருந்தன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பதிலளிநீக்குநன்றி, GMB Sir.
நீக்குதங்களின் பதிவுகள் எல்லாம் பயனுள்ல பதிவுகள் தான்.
பதிலளிநீக்குவயது காராணமாய் எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டம் போடவில்லை என்று வருத்தபட வேண்டாம்.
இந்த வயதிலும் பதிவுகள் எழுதி வருவதால் உங்களைப் பார்த்து மற்றவர்களும் இது போல் எழுதும் ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள் அதுவே பெரிய விஷயம்.
வாழ்த்துக்கள்.
கூடிய விரைவில் வலைச்சரத்தில் எதிர்ப்பார்க்கிறோம்.
கம்பன் காட்டிய இலங்கை வேந்தன் போல் கலங்குகிறேன்.:)நட்சத்திரவாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குஒரு வார பதிவுகளும் நல்ல பல கருத்துக்களையும், மனதில் உள்ள உண்மைகளையும் எழுதியது சிறப்பு...
பதிலளிநீக்குவழக்கம் போல் நகைச்சுவை கலந்த எழுத்து நடையில் எழுதும் பதிவுகள் தொடருங்கள் சார்...
கூடிய விரைவில் வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக வர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
நன்றி.
(த.ம. 6)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
Sir,
பதிலளிநீக்குYou have done it excellantly....
With kind regards,
RRR
மிக்க நன்றி, ஆர்ஆர்ஆர்.
நீக்குநட்சத்திர வாரத்தில் கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள், அதற்காக பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா. இந்த அளவு உழைப்பை வெகு காலத்திற்குப் பிறகு பார்க்கிறேன். கிட்டத்தட்ட இதே அளவு உழைப்பை சுப்பய்யா வாத்தியார் நட்சத்திரமாக இருந்த போது தான் பார்த்ததாக நினைவு.
பதிலளிநீக்குநன்றி, அமர பாரதி. நமக்கு ஒருவர் மரியாதை கொடுக்கிறார் என்றால் அந்த மரியாதையை பல மடங்கு அதிகமாகத் திருப்பித் தருவதுதானே தமிழன் பண்பாடு.
நீக்கு" பத்திகளுக்கிடையே ஒரு காலி வரி அவசியம் " என்று தாங்கள் என் பதிவில் கூறி இருந்ததை செய்து சரி செய்து விட்டேன். (என் முந்தைய பதிவுகளிலும் சரி செய்ய வேண்டும்)
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் !
I beleive, you really took time to think and write something good. These post were not your usual posts. Your intention is to be appreciated.
பதிலளிநீக்குநட்சத்திரப் பதிவுகள் கொஞ்சம் ஆழமான கருத்துக்களுடன் இருந்தால்தான் தமிழ்மணம் திரட்டிக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று கருதியதின் விளைவுகள்தான் இந்தப் பதிவுகள்.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா. எதையுமே சுருக்கமாகச் சொல்வதில் தங்கள் திறமை மிகவும் பாராட்டத்தக்கது தான்.
பதிலளிநீக்குதாங்கள் நினைத்திருக்கும் புதிய பாணியில் வெற்றிகரமாக நடை போடுங்கள் ஐயா.
தங்களுடன் ஒரு விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
தங்கள் தகவலுக்காக மட்டுமே. இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
அன்புடன்
vgk
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி வை.கோ.
நீக்கு