எது முதலில் தோன்றியது?
இலக்கணமா அல்லது இலக்கியமா? இது பட்டி மன்ற விவாதத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள்.
நாள் கணக்கில் விவாதிக்கலாம். இந்தப் பொருள் பற்றி விவாதிக்கும் முன் நாம் ஒன்றைத்
தெளிவு படுத்திக்கொண்டால் விவாதமே தேவையிருக்காது.
எது முதலில் தோன்றியது?
மொழியா அல்லது மொழியின் இலக்கணமா? இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
மொழிதான் முதலில் தோன்றியிருக்கவேண்டும். கற்காலத்தில் மனிதன் சைகளினால்தான் பேசினான்
என்று சரித்திரங்கள் சொல்லுகின்றன. அதன்பிறகுதான் அவன் ஒலிகளினால் பேச ஆரம்பித்திருக்கவேண்டும்.
ஒவ்வொரு பகுதி
மக்களும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்ய தனித்தனியாக மொழிகள் உருவாகின. அவை
வலுப்பெற்று அவைகளுக்கு வரிவடிவம் ஏற்பட்ட பின் அந்தந்த மொழிகளில் இலக்கியங்கள் உருவாகின.
இந்நிலையில் அம்மொழிக்கு இலக்கணம் என்று ஒன்று இருந்திருக்க முடியாது. ஓரளவு இலக்கியங்கள்
உருவான பின்புதான் அந்த மொழிக்கு இலக்கணம் உருவாகியிருக்கும்.
ஆகவே இலக்கியம்தான்
முதல், இலக்கணம் இரண்டாவது என்பது தெளிவாகின்றது. இந்த அடிப்படையில்தான் ஒரு சமுதாயத்தின்
நடைமுறைகளும் உருவாகின்றன. மனிதன் கூட்டாக வாழவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தபின் சமுதாயங்கள்
ஏற்பட்டன. இந்த சமுதாயங்கள் கட்டுக்கோப்பாக வாழ சிலபல விதிமுறைகள் தேவைப்பட்டன. அந்த
சமுதாயத்தின் மூத்த அறிஞர்கள் கூடிப்பேசி இந்த வரைமுறைகளை உருவாக்கியிருப்பார்கள்.
நல்ல விதிமுறைகள்
உள்ள சமுதாயங்களே நாகரிகம் பெற்றவை என்று போற்றப்படுகின்றன. விதிமுறைகள் மட்டும் இருந்தால்
போதுமானதல்ல. அவைகளை நடைமுறையில் அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.
அப்போதுதான் அந்நாகரிகம் முழுமை அடைகின்றது. அப்டிப்பட்ட நாகரிகமடைந்த சமுதாயங்கள்
உள்ள நாடுகள்தாம் பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றன.
இத்தகைய விதிகள்
இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் பொதுவானவை, அவைகள் மீறப்படும்போதுதான் சிக்கல்கள்
உருவாகின்றன. மொழிகளும் சமுதாயங்களும் அழிவது இதனால்தான். தனிமனித ஒழுக்கம்தான் சமுதாய
ஒழுக்கமாக அமைகிறது. தனிமனிதனின் மொழிப் புலமைதான் அந்த மொழி வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
இதை நாம் புரிந்து நடக்கவேண்டும்.
நல்ல விதிமுறைகள் உள்ள சமுதாயங்களே நாகரிகம் பெற்றவை என்று போற்றப்படுகின்றன. விதிமுறைகள் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அவைகளை நடைமுறையில் அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் அந்நாகரிகம் முழுமை அடைகின்றது. அப்டிப்பட்ட நாகரிகமடைந்த சமுதாயங்கள் உள்ள நாடுகள்தாம் பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றன//
பதிலளிநீக்குநூலைப் போலத்தானே சேலை
என்பதனை மிக அழகாக சொல்லிப்போகிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்க பதிவு கிளாஸ் ரூம் லெக்சர் போல இருக்கு !
பதிலளிநீக்குவா.......................................................வ.....,,,,,வ்
கொட்டாவி தான் பயப்படாதீங்க !!!
நான் வாத்திதானே ஆராரார், அப்புறம் என் எழுத்து அப்படித்தானே வரும்?
நீக்குநட்சத்திர வாழ்த்து(க்)கள்.
பதிலளிநீக்குமுதலில் இந்த வார நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇலக்கியமும் இலக்கணமும் நாகரிகமும் - நல்ல அலசல்...
தனி மனித ஒழுக்கம் தான் தேவை, முக்கியமானது என்று முடித்துள்ளது அருமை. (த.ம. 3)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
மிக அருமையான கருத்துக்களை சொல்லி விட்டீர்கள் சார். செயல்கள் செம்மையாவது இலக்கணத்தால். ஆனால் செயல்கள் இல்லாமல் இலக்கணம் இல்லை.
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குசமுதாயத்தில் இருக்க வேண்டிய அந்த கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் இன்றும் இருக்கிறதா, தனிமனித கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் பேணப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.
பதிலளிநீக்குநண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .
பதிலளிநீக்குஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php
நட்சத்திர பதிவின் தொடக்கமே நிறைய விஷயங்களுக்கு வித்திட்டாற் போலிருக்கிறது.தொடருகிறேன்.
பதிலளிநீக்குதேவியர் இல்லத்தின் நட்சத்திர வாழ்த்துகள். நட்சத்திர பதிவு என்று லேபிள் போட்டு விட்டு அதைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே
பதிலளிநீக்குஅய்யய்யோ, இந்தப்பதிவ பாத்துடுங்க ஜோதிஜி.
நீக்குhttp://swamysmusings.blogspot.in/2012/07/blog-post_21.html
நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யா.
பதிலளிநீக்குநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்குஆழமான சிந்தனையும் கருத்தும் உள்ள பதிவிற்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநட்சத்திர பதிவருக்கு வாழ்த்த்துக்கள்!
பதிலளிநீக்குதனிமனித ஒழுக்கம்தான் சமுதாய ஒழுக்கமாக அமைகிறது. தனிமனிதனின் மொழிப் புலமைதான் அந்த மொழி வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றது. இதை நாம் புரிந்து நடக்கவேண்டும்.²
பதிலளிநீக்குஅருமையான கருத்து. வணங்கி ஏற்கிறேன் ஐயா.
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதமிழ்மணம் நட்சத்திரமா நீங்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதனிமனித ஒழுக்கம்தான் சமுதாய ஒழுக்கமாக அமைகிறது. //
பதிலளிநீக்குஉண்மை.
அன்பின் கந்தசாமி அய்யா - நட்சத்திரப் பதிவர் பெருமை பெற்றதற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஇலக்கியம் கண்டதற்கு இலக்கணம். இலக்கியம் வந்த பின்னர் தான் இலக்கணம் வந்தது. விதி முறைகள் அமைக்கப் பட்டன. நல்ல சிந்தனையில் விளைந்த பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு