வெள்ளி, 27 ஜூலை, 2012

வாழ்வின் நோக்கம் என்ன?



நாம் பிறந்தது ஏன் என்பது நமக்குத் தெரியாத ஒரு செயல். ஆனாலும் பிறந்து, வளர்ந்து கல்வி கற்று, வேலை தேடி, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகளின் வேறுபாடுகளினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் வாழ்கிறோம். ஆனாலும் மனிதன் வாழ்வதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்றால் சரியான பதில் எதுவும் சொல்லமுடிவதில்லை.

நாம் பிறந்து ஓரளவு அறிவு பெற்றவுடன் சிந்திக்கத் தொடங்குகிறோம். இந்நிலையில் நம் சிந்தனைகள் நாம் பழகும் மனிதர்களின் சிந்தனைகளை ஒட்டியே இருக்கிறது. குறிப்பாக நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரின் எண்ணங்களையே நாமும் பிரதிபலிக்கிறோம். இவர்கள் நமக்கு காட்டும் வழி என்ன? நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல வேலை தேடிக்கொள்ளவேண்டும், கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறவேண்டும், என்பவைதான். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் வழி காட்டுதல் இவ்வளவே.

இவ்வாறு ஒரு சராசரி வாழ்வு வாழ்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. உங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் உங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள். உங்கள் மனைவியும் மக்களும் இங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டிய அங்கீகாரங்கள் இவ்வளவே. ஏறக்குறைய செம்மறியாட்டு மந்தையில் ஒரு ஆடாக மனிதன் ஆகிவிடுகிறான்.

இதை விட்டு நீங்கள் வேறு வழியில் போக முயற்சித்தால் சமூகம் உங்களை விடுவதில்லை. அதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால் உங்களை பைத்தியம் என்று பெயர் சூட்டி ஒதுக்கி விடுவார்கள். இந்த சூழ்நிலையை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அரசியல் தலைவர்களாக, சமூக சீர்திருத்த வாதிகளாக, பெரிய தொழிலதிபர்களாக, பெரிய வியாபாரிகளாக உருவாகிறார்கள். அவர்கள் அவ்வாறு உருவெடுக்க உதவுவது அவர்களின் மனோபாவமும் சூழ்நிலைகளும் ஆகும். எல்லோராலும் அவ்வாறு உருவாக முடியாது.

அப்படி உருவானவர்களின் கொள்கைகள் நியாயமானதாகவே இருக்கவேண்டும் என்ற சட்டம் இல்லை. பெரும்பாலாவர்கள் குறுக்கு வழிகளையே கடைப்பிடிக்கிறார்கள். நியாய அநியாயங்கள் அவர்களுக்கு இல்லை. எப்படியும் தாங்கள் மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கொலைகளும் செய்வார்கள். இந்த வழி சாதாரண மக்களுக்கு உகந்ததல்ல.
அப்படியானால் என்னதான் செய்யலாம் என்று யோசித்தபோது கிடைத்த சில கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

  1.   உண்மையாக இருங்கள். உங்கள் மனச்சாட்சி சொல்வதைக் கேளுங்கள்.
  2.   மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  3.   அன்பாக இருங்கள். மற்றவர்கள் கஷ்டங்களைக் கண்டு மனம் உருகுங்கள். அக்கஷ்டங்களை உங்களால் முடிந்த அளவு குறைக்கப் பாடுபடுங்கள்.
  4.   தொழிலில் நேர்மையாக இருங்கள்.

எல்லோரும் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்தால், சமூகம் கொஞ்சமாவது மாறும் என்று நம்புகிறேன்.


21 கருத்துகள்:

  1. வளரும் சூழ்நிலையில் பெற்றோரின் மற்றும் ஆசிரியரின் எண்ணங்களைப் பிரதிபலித்தாலும் அவர்கள் சொல்லும் முக்கியமான அறிவுரையான 'புத்தகங்கள் படியுங்கள்' என்கிற அறிவுரையை சிரமேற்கொண்டால் போதும், நம் சுயசிந்தனை வளர! நீங்கள் சொல்லியுள்ள நான்கு அறிவுரை யோசனைகளும் தான் தன் சுகம், தன் வீடு தன் மக்கள் என்று ஆகிவிட்ட இந்த சுயநல சமூகத்துக்கு அவசியம் தேவையான யோசனைகள்தான்.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த தனி நபராக இருப்பதோடு
    நல்ல சமூக மனிதனாகவும் இருக்கக் கூடியவர்கள்
    அதிகமிருக்கிற சமூகமே சிறந்த சமூகமாக
    இருக்க முடியும் என்பதுவும்
    அப்படிப்பட்ட்ட சமூகத்தில்தான் தனிமனிதனும்
    சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும்
    என்பதுவுமே எனது கருத்து
    சிந்தனையை தூண்டிப்போகும் அருமையான
    பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வெளக்கு அணையறதுக்கு முந்தி பிரகாசமா எரியும், பாத்திருக்கீங்களா, அப்படீன்னு வச்சுக்குங்க.

      நீக்கு
  4. தலை சிறந்த சிந்தனைகள். ஒரு சமுதாயத்தின் அமைப்பு தனிமனிதனிடமிருந்தே தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதனும், தன் அண்டை வீட்டினரை நேசிக்க தொடங்கி விட்டாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். நன்றி சார்

    பதிலளிநீக்கு
  5. நல்ல சிந்தனை அய்யா!பதிவுக்கு மனமார்ந்த நன்றி!


    unmaivrumbii.
    mumbai.

    பதிலளிநீக்கு
  6. என் கணினியில் உங்கள் பதிவு திறப்பது அரிதாயிருக்கிறது.நேற்று முழுவதும் பல முறை முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. இன்று காலை சிலபல முயற்சிகளுக்குப் பிறகு வெற்றியளித்தது
    உங்கள் பதிவைபார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த ஒரு FRILL-உம் இல்லாமல் எளிமையாக சொல்ல வருவதை சொல்லிப் போகும் விதம் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிகச் சிறந்த சிந்தனைகள். இப்படியே வாழ முயற்சிக்கிறேன் பொய்யான உலகில் இதுவும் மிகச் சிரமமானது. நேர்மையாக வாழ விட மாட்டார்களே...நன்று. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.
    இதை வாழ்வில் கடை பிடித்தால் நலம் பயக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு அறிவுரை - சிறந்த அறிவுரைகள் - கடைப்பிடிக்க வேண்டுமே ! - தமிழ் மணத்தில் வரும் பதிவுகள் ஜொலிக்கின்றன - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. ahara nidra bhaya maithunam ca
    samanyam etat pasubhir naranam
    dharmo hi eko adhika viseso
    dharmena hinah pasu hi samana

    “The propensity to eat, sleep, mate and defend are equal in animals and human beings. Only one extra thing is rewarded to humans, that is to establish their relationship with God. In other words the only difference between human beings and animals is that human beings can be trained in the science of spirituality, whereas animals cannot. If any human being does not attempt to learn about spiritual life, he is considered to be equal to an animal.” [MAHABHARATAM]

    The philosophy which answers the questions of why we are here, why undesired things are imposed upon us, why do we have to die, where will we go after death, who is God, what does He looks like and where does He live ? etc. is called cultural philosophy. In other words realizing our constitutional position and our relationship with God is said to be the perfection of human life. Eating, sleeping, mating and defending propensities are equally found among both animals and human beings. The difference between human beings and animals is that animals are not responsible for their present deeds and cannot understand the science of God, whereas human beings can. Therefore a human being is advised to try to understand the science beyond life. The answer to where he has come from and where he will go after death is called the science beyond life. If one does not do so, then a careful consideration to reform one’s life is recommended.

    பதிலளிநீக்கு
  11. டாக்டர் கந்தசாமி ஐயா அவர்களே,

    ///Jayadev Das29 July 2012 7:53 PM

    ahara nidra bhaya maithunam...என்று நிறைய எழுதியிருக்கிறா.///
    ----------
    படித்தேன், ஆங்கில அறிவு எனக்கு உண்டு; இருந்தாலும், இது மாதிரி philosophy மற்றும் வாழ்கையின் எல்லா தத்துவங்களையும் புரிந்தவன் அல்ல! என்னை ஒரு தற்குறி என்றும் சொல்லலாம்.

    வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன், ஆகவே, எனக்கு நன்றாகத் தெரிந்த, தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்..

    மேலும் இது தமிழ்மணத்தில்...வந்தாதல் இந்த வேண்டுதல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய சம்ஸ்கிருத அறிவு மிகவும் குறைவு. இருந்தாலும் என்னுடைய புரிதலுக்காகவும் உங்களுடைய புரிதலுக்காகவும் ஜயதேவ் எழுதிய ஸ்லோகத்தை தமிழில் எழுத முயலுகிறேன். தவறுகளை ஜயதேவ் திருத்தவேண்டும்.

      ahara nidra bhaya maithunam ca
      samanyam etat pasubhir naranam
      dharmo hi eko adhika viseso
      dharmena hinah pasu hi samana

      ஆஹார நித்திரா பய மைதுனம் ச
      சாமான்யம் ஏதத் பசுபிர் நாரணம்
      தர்மோ ஹி ஏகோ அதிக விஸிசோ
      தர்மேன ஹீன பசு: ஹி சமான

      இதன் அர்த்தத்தை ஜயதேவ் ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார்.

      நீக்கு
  12. ahara nidra bhaya maithunam ca
    samanyam etat pasubhir naranam
    dharmo hi tesam adhiko viseso
    dharmena hinah pasu hi samana

    ஆஹார நித்திரா பய மைதுனம் ச
    சாமான்யம் ஏதத் பசுபிர் நாரணம்
    தர்மோ ஹி தேஷாம் அதிகோ விஷேசோ
    தர்மேன ஹீன பசுபி: ஹி சமான

    ஆஹார-உண்ணுதல்; நித்திரா-உறங்குதல்; பய-பயம்கொள்ளல்[உயிருக்கு வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்]; மைதுனம்- ச-மற்றும் இனவிருத்தியில் ஈடுபடுதல்; சாமான்யம்-பொது; ஏதத்-இந்தச் செயல்கள் யாவும்; பசுபிர்-மிருகங்களுக்கும்; நாரணம்-மனிதனுக்கும்; தர்மோ-ஆன்மிகம் [தன்னை அறியும் விஞ்ஞானம்]; ஹி-உண்மையில்; தேஷாம்-அவற்றில்; அதிகோ-ஒன்று சிறந்தது; விஷேசோ-தனிச் சிறப்பு வாய்ந்தது;
    தர்மேன-ஆன்மிகம்; ஹீன-இல்லாவிட்டால்; பசு: ஹி-மிருங்கங்கள்; சமான-இணையானது.

    மனிதனுக்கும் மிருங்கங்களுக்கும், உண்ணுதல், உறக்கம், இனவிருத்தியில் ஈடுபடுதல் மற்றும் ஆபத்திலிருந்து தன்னை காத்துக் கொள்ளல் ஆகிய செயல்களில் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆனால், மனித இனத்திற்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பு அவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட முடியும். ஆகையால், தன்னை யார் என்று அறிந்து கொள்ள உதவும் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாது வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கைக்கு ஒப்பானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா ஒவ்வொரு தமிழ் பதிவருக்கும் உள்ள கனவு தமிழ்மணத்தி்ன் நட்சத்திர பதிவராக வேண்டும் என்பதுதான். தங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றியுடன் கைலாஷி

      நீக்கு