மனிதன் ஒரு குழு
மிருகம். அதாவது அவன் குழுவாக இருக்க விரும்புபவன். யாருடனும் சேராமல் தனியாக இருப்பவனை
எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள். (என்ன சந்தேகம், மனநோய் பீடித்தவன் என்ற
சந்தேகம்தான்).
குழுவாக சேர்ந்து
என்ன செய்யமுடியும்? அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் விளையாட்டுகள். பழங்காலத்திலிருந்தே
பல வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டு இருக்கின்றன.
விளையாட்டுகளுடன் கூடவே அவற்றை
வேடிக்கை பார்ப்பதும் ஒரு குழு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே விளையாட்டு என்றாலே
விளையாடுபவர்கள் சிலரும் அதை வேடிக்கை பார்ப்பவர் பலரும் சேர்ந்த செயல்பாடாகவே இருந்து
வந்திருக்கிறது.
விளையாட்டுகள்
அந்தந்த நாடுகளின் கலாசாரம், கால நிலை, வாழ்க்கை முறைகள் ஆகியவைகளை அனுசரித்தே உருவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கை
முறையான விவசாயத்தை ஒட்டி அமைந்த விளையாட்டாகும். காளைகள் விவசாயத்திற்கு இன்றியமையாதவை.
அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அவசியமான ஒன்று. அதையே ஒரு வீர விளையாட்டாக
அமைத்துக் கொண்டார்கள்.
பல்லாங்குழி, பாண்டி
ஆகிய விளையாட்டுகள் சிறுமிகளுக்கு உகந்ததாக அமைந்தன. இந்த விளையாட்டுகளுக்கு எந்த செலவும்
இல்லை. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். குழுவாகப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருந்தன.
சாதாரணமாக விளையாடக்கூடிய
விளையாட்டுகள் கால ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று பல சட்ட திட்டங்களுடன் வளர்ச்சியடைந்தன.
கபடி என்று சொல்லப்படும் விளையாட்டு கிராமத்தில் பத்து பேர் கூடினால் விளையாடக்கூடிய
விளையாட்டாக இருந்த காலம் மாறி இன்று அது ஒரு தேசிய விளையாட்டாக பல சட்டதிட்டங்களுடன்
மாறி விட்டது.
பொதுவாக எல்லா
விளையாட்டுகளும் உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்து நாடு
ஒரு குளிர்ப் பிரதேசம். வெயிலைக் காண்பதே அபூர்வம். அந்த நாட்டில் வெய்யில் வரும்போது
குளிர் காய்வதற்காக ஏற்பட்ட விளையாட்டு கிரிக்கெட். அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக
விளையாடுவார்கள். விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வெய்யிலின் பயன்
கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தது. இதே மாதிரிதான் கோல்ப்ஃ என்ற விளையாட்டும்.
ஒரு பந்தை நாற் முழுவதும் தட்டிக்கொண்டே போவது.
குளிர் பிரதேசத்துக்காரன் வெயில் காய்வதற்காக ஏற்படுத்திய விளையாட்டுகளை வெயில்
பிரதேசங்களில் எதற்காக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிர்களில்
ஒன்று. தவிர, நாள் கணக்கில் வெய்யிலில் நின்று கொண்டிருப்பது உஷ்ணப் பிரதேசங்களில்
முடியாததும் தேவையில்லாததும் ஆகும்.
நம் நாட்டுக்கு
உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில்
உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல்
இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும்
கொடுக்காததுதான்.
விளையாட்டு வெறும்
பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் ஜெயிப்பவர் கெட்டிக்காரர் என்ற எண்ணம் எப்போதும்
உண்டு. இதனால் விளையாட்டு என்பது குழுவாகப் போட்டி போடுவதுடன் நில்லாமல் யார் ஜெயிக்கிறார்களோ
அவர்களே கெட்டிக்காரர்கள் என்று பேசப்பட்டார்கள். நாளாக நாளாக இந்த விளையாட்டுகளில்
யார் ஜெயிப்பார்கள் என்று பணையம் கட்டுவதும் தொடங்கியது.
கிரிக்கெட்டில்
இது பெரும் பூதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும்
இந்த சூதாட்டம் பரவி இன்று சூதாட்டம் இல்லாத விளையாட்டே இல்லை என்று ஆகிப்போனது.
மனித
நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட விளையாட்டுகள் இவ்வாறு சூதாட்டமாக மாறிப்போனது
பெரிய கலாச்சார சீர்கேடு. இந்த நிலை மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதிலளிக்கவேண்டும்.
விளையாட்டைப் பற்றிய அலசலா... நன்று. குளிர் பிரதேசத்தில் விளையாடும் அவர்களும் உஷ்ணப் பிரதேசத்துக்கு வந்து அதே விளையாட்டை விளையாடுகிறார்களே.... பணம்! கோல்ஃப் விளையாட்டைப் பற்றிச் சொல்லும்போது என் நண்பனொருவன் சொல்வான். 'வேலைக்காரர் வைத்துக் கொண்டு ஆடும் ஒரே ஆட்டம்!"
பதிலளிநீக்குநம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்./
பதிலளிநீக்குஇப்படித்தான் நம்முடைய உடை உணவு
பண்பாடு கலாச்ச்சாரம் அனைத்திலும்
திசையறியாது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
மனம் கவர்ந்த பயனுள்ள அனைவரும் அவசியம்
மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டிய பதிவிது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
பதிலளிநீக்குஅனைத்துமே வியாபாரமாக ஆகி விட்டது. விளையாட்டும் அதில் இடம் பெற்றிருப்பது வேதனைக்குரியது.
பதிலளிநீக்குநல்ல விளையாட்டு ..!!!???
பதிலளிநீக்குக்ரிக்கெட் வந்து மற்ற எல்லா விளையாட்டுகளையும் குழி தோண்டிப் புதைச்சுருச்சுன்னுதான் சொல்லணும்:(
பதிலளிநீக்குஎல்லாத்துலேயும் பணம் பிரதானமாப்போயிருக்கு.
காசே கிடையாது. எல்லோரும் விளையாட்டின் மேல் உள்ள ஆசைக்காக மட்டும் வந்து போட்டி போடுங்கன்னு சொல்லிப் பாருங்க. அப்பத் தெரியும்:(
//நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான்.//
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் நாம் குளிர் பிரதேசங்களுக்கான விளையாட்டான ‘கிரிக்கெட்’டை ஆதரித்து நம்முடைய நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு உகந்த ‘ஹாக்கி’ விளையாட்டை மறந்துவிட்டோம். அரசு ஆதரித்தால் ஒழிய நாம் ‘ஹாக்கி’ ஆட்டத்தில் இழந்த இடத்தை பெறமுடியாது. அரசு செய்யுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
நல்ல அலசல் சார் ! எல்லாமே பணம் தான் காரணம்.
பதிலளிநீக்குநன்றி (த.ம. 5)
காலம் போற போக்கைப் பார்த்தா, எதையுமே விளையாட்டா எடுத்துக்க
பதிலளிநீக்குமுடியாத் போல இருக்கே !!
நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.//
பதிலளிநீக்குஉண்மை, என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை.
என் அப்பா ஹாக்கி விளையாட்டு வீரர்.
தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் சார்.
நாம் மறந்த கிளித்தட்டு விளையாட்டு வேறு வடிவில் தேசிய அளவில் ஆடப்பட்டு வருகிறது..அது பற்றிய பதிவு.....http://tamilmottu.blogspot.com/2012/06/atya-patya.html
பதிலளிநீக்குஏதோ விளையாடுவதிலும் விளையாட்டைப் பார்ப்பதிலும்தான்
பதிலளிநீக்குஎம் கவனம் இதுவரை இருந்தது இன்று தாங்கள் அருமையாக
விளையாட்டு உருவான விதம் ,அதன் பயன் ,இன்று அதன் நிலைப்பாடு
என்று அருமையாக விவரித்துள்ளீர்கள் ஐயா .மனம் கவர்ந்த பகிர்வுக்கு
பாராட்டுக்கள் ஐயா .
அனைத்துமே பணம் என்று ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஇதுவரைக்கும் 13 பேர் பதில் சொல்லிட்டாங்க - ஆனா காலம் இன்னும் பதில் சொல்லல!
பதிலளிநீக்குநல்ல அலசல்....
பதிலளிநீக்கு// நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.//
பதிலளிநீக்குஇது அரசு மட்டும் செய்வது இல்லை.. கிரிக்கெட் ஆடுவதற்கு பெரிய இடம் தேவையே இல்லை.. ஒரு சிறு இடம் இருந்தால் போதும்... customize செய்து விளையாடலாம்.. ஹாக்கி மற்றும் கால்பந்து இவ்வாறு சிறு இடங்களில் விளையாட முடியாது... கிரிக்கெட் போல் அவற்றில் முறை வைத்து விளையாட முடியாது.. அதனால் கூடத்தான் அது சிறுவர்களிடம் பிரபலமாக உள்ளது..
இப்போது T20 வந்துவிட்டதே.. அப்புறம் என்ன :)
அன்பின் அய்யா - விளையாட்டு சூதாட்டம் ஆகி விட்டது - அதிலும் கிரிக்கெட் பயங்கர சூதாட்டமாகி விட்டது - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு