சனி, 28 ஜூலை, 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை. முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.

சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.

அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி. கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.

ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன். இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.
ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்கவேண்டும்? ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார். ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்? அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர்தானே இன்று வரையில் இருக்கவேண்டும்? ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?

ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள். தங்களின் மனம் சலனமடையும்போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?

அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா? கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்.

52 கருத்துகள்:

 1. கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்.//

  நல்ல கருத்து.

  பதிலளிநீக்கு
 2. //கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள்.//
  நன்று சொன்னீர்!

  பதிலளிநீக்கு
 3. நம்பினோர்க் கெடுவதில்லை என்றால் அவர்களின் அந்த நம்பிக்கை அவர்கள் மனதில் உத்வேகத்தைத் தூண்டி அதுவே அவர்களை வெற்றி கொள்ளச் செய்கிறது! கடவுள் இருந்து விடுவாரோ என்ற சந்தேகமும், இருந்து, வணங்காமல் விட்டு விட்டால் தண்டித்து விடுவாரோ என்ற (அரசியல்வாதிகள் போல!!) பயமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன போலும்! சமூகத்தில் சில ஒழுங்குமுறைகளை வளர்க்க பயம்தான் உதவுகிறது! பயம் விலகும் அன்று கடவுளும் கட்டுப்பாடும் காணாமல் போகலாம். அது மனிதன் மரணத்தை வென்ற நாளாக இருக்கும் அல்லது மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்று தெரிந்து விடும் காலமாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 4. முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மையான கருத்துக்களை கொண்ட பதிவு. அனைவரையும் சென்று சேரவேண்டிய பதிவு. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி அய்யா!

  இதே போல் தங்களது கருத்துடன் ஒன்றிப்போகும் பதிவொன்று..
  http://vstamilan.blogspot.com/2011/12/blog-post_02.html

  நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 5. //சிந்தியுங்கள்// அதுவே உண்மையை உணர்த்திவிடும் .

  பதிலளிநீக்கு
 6. //கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள்.//

  சரியான அறிவுரை. ஆனால் நம்மவர்களில் பலர் இன்னும் அந்த ‘வியாபாரிகளை’ நம்பி ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்,

  பதிலளிநீக்கு
 7. மனதில் பட்டதை எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்.
  பொய்யும், தற்சார்பும், கற்பனையும் கலவாத இது போன்ற ‘கருத்து வெளிப்பாடுகள்’ மிகவும் பயன் தருபவை.
  பாராட்டுகள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நல்ல அலசல் சார் ! அருமையான கருத்துக்களுடன் முடித்துள்ளீர்கள்.
  கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறார். நம் மனம் தெளிவாக, சலனமில்லாமல் இருக்கும் போது நமக்குள் இருக்கும் கடவுளை நாம் பார்க்கலாம்.

  (தெய்வம் இருப்பது எங்கே ? என்று பதிவு எழுதி உள்ளேன். http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html)

  நன்றி. (த.ம. 5)

  பதிலளிநீக்கு
 9. நானும் கடவுளை வைத்து வியாபாரம் செய்கிற
  (இருக்கு எனவும் இல்லையெனவும்)
  இருவரையும் நம்புவதில்லை
  சிந்திக்கச் செய்து போகும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. A DOWN TO EARTH AND PRACTICAL THINKING. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. 'நித்தி பக்தர்களுக்குச் சமர்ப்பணம்'னு போட மறந்துட்டாரு போல!!!

  ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 12. Muulai salavai seivathil munnaniyil iruppathu kirusthuva amaippu thaan .
  Naan aarampa palliyil irunthu poothikka pattu mandai kaainthavanil naanum oruvan.sumaar 11 varuta anupavam.

  பதிலளிநீக்கு
 13. Nice post.
  What do you think about people claiming superiority of one religion over another?

  பதிலளிநீக்கு
 14. //ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.//
  கடவுளை மனிதனால் உருவாக்க முடியாது. கடவுள் என்பது மாபெரும் சக்தி. மனித சக்தி இறைசக்தி முன்பு வெறும் தூசுதான். ஏற்கனவே இருக்கும் கடவுளுக்கு மனிதர்கள் அவரவர் இஷ்டத்துக்கு பெயர் கொடுத்து கதைகளையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து சரியானதே, ராபின். நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வார்த்தைகளைக் கையாண்டிருக்கவேண்டும். மனிதன் கடவுளை உண்டாக்க முடியாது. இருக்கும் கடவுளுக்கு அவரவர்கள் பெயர் கொடுத்து விட்டார்கள் என்பதே உண்மை.

   நீக்கு
 15. ''...ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்? அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர்தானே இன்று வரையில் இருக்கவேண்டும்? ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?...''

  உண்மையில் சரியான கேள்வி. கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பக் கூடாது என்பதும் முழுக்க முழுக்க உண்மையே. அறிவார்ந்த பதிவு. பாராட்டுகள் ஐயா. நட்சத்திரப் பதிவருக்கு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 16. //அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா? கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்.//

  இந்த வியாபாரத்தில், கொப்பரேட் (ஆ)சாமிகளுடன் , கோவில்களும் பெரும் பங்கு வகுப்பதே மிகக் கவலை.
  கடவுளைப் பற்றிய நல்ல தெளிவு.

  பதிலளிநீக்கு
 17. Sir, To know God, first you have to know what is mind and then when the mind is under your control, the nature will reveal what is what. But for all this, meditation or some kind of regular practices are necessary.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனது என்றால் என்ன, அது எங்கே இருக்கிறது, அது என்ன செய்யும், அதை அடக்க முடியுமா, இப்படி பல கேள்விகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கும். மனதை அடக்குவது என்பது ஒரு கற்பனை. நமது புத்தி சரியாக வேலை செய்தால் அனைத்தும் புரியும். மனதிற்கு புத்தியின் வேலையை செய்யத் தெரியாது.

   நீக்கு
 18. தங்களின் மனம் சலனமடையும்போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. --

  அருமையான கருத்து ஐயா.

  பதிலளிநீக்கு
 19. இருப்பது சிங்கப்பூரிலா? blog SG என்றே காட்டுகின்றது.

  பதிலளிநீக்கு
 20. http://swamysmusings.blogspot.sg/2012/07/blog-post_28.html

  எனக்கு இப்படித்தான் தெரிகின்றது. என்ன கொடுமையோ... sg என்று எப்படி வருகின்றது?

  பதிலளிநீக்கு
 21. கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்வி என் மனதில் பத்து வயதில் வந்தது. பல நிகழ்ச்சிகள், ஆழ்ந்த சிந்தனைகள், ஒப்பீடுகள் இவற்றிற்கு பின்னால் நான் புரிந்து கொண்ட உண்மை " கடவுள் உண்டு, ஆனால் நாம் உருவக படுத்தி பார்க்கும் கடவுள் அது அல்ல. அதுதான் இயற்கை. அதன்படியேதான் எல்லாம் நடக்கும்". அதுதான் விதி. அதை வழிபாட்டின் மூலமோ அல்லது பரிகாரம் செய்வதன் மூலம் மாற்றிவிடலாம் என நம்புவது அறியாமை. தெய்வ வழிபாடு என்பது மனதை ஒருவழிப்படுத்தி, நம்பிக்கையை மட்டுமே வளர்க்கும்.

  பதிலளிநீக்கு
 22. இது சூப்பர் நட்சத்திர பதிவு.

  பாராட்டுகள், வீட்டுக்குள்ளோ, ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது தப்பே இல்லை, கடவுள் என்கிற பெயரில் மத யாவாரம் தான் சகிக்க முடிவதில்லை.

  பதிலளிநீக்கு
 23. வுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர்// - இப்படிய்ம் சொல்கிறீர்கள். பிறகு //கடவுளை நம்பினால் நம்புங்கள்/என்கிறீர்கள், பின் ராபினுக்குச் சொல்லும் பதிவிலும் குழப்பம்.

  கடவுளை - கடவுள் என்ற கருத்தை (concept) - கேள்வி கேட்கும் பருவத்தில் இந்தக் குழப்பங்கள் வருவதும் இயற்கைதான்.

  வெளியே வாருங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்குத் தெரியாத அல்லது புரியாத ஒன்றை கடவுள் என்று வழிபடுவதால் ஏற்படும் குழப்பங்கள்தான் இவை. ராபினை வருத்தப்படுத்த விரும்பவில்லை. அவ்வளவுதான்.

   கடவுள் மனிதனின் கற்பனையில் உருவானவன் என்று நான் நம்புகிறேன். கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்களிடம் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவரவர்கள் விருப்பம் அல்லது நம்பிக்கை.

   நீக்கு
 24. \\கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை. \\ தங்க நகை வாங்க லலிதா ஜுவள்ளரிக்குப் போனால் வாங்கலாம், காயலான் கடையில் பழைய இரும்புதான் கிடைக்கும். தங்கம் கிடைக்குமா? கேள்விக்கு பதில் எங்கே தேடுகிறோம் என்பது முக்கியம், தேடவேண்டிய இடத்தில் தேடியிருந்தால் நிச்சயம் கிட்டி இருக்கும்.

  பதிலளிநீக்கு
 25. \\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. இத்தகைய விவாதங்கள்தான் சிந்தனைத் தெளிவு பெற உதவும். இதைப்பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன். அதற்கும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 26. \\கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்கவேண்டும்? ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார். \\ பள்ளிக்கூடம் என்று இருந்தால் எல்லாம் ஒரே வகுப்பாகத்தானிருக்க வேண்டும், எதற்கு ஒன்னாம் கிளாஸ், ரெண்டாம் கிளாஸ்......... பி.எச்டி என்று இத்தனை வகை இருக்கிறது? \\(ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), \\ ஆசிரியர் என்றால் ஹெட் மாஸ்டர் ஒருத்தர் தானே இருக்க வேண்டும், எதற்கு கிளாசுக்கு நாலு வாத்தியார், அப்புறம் பியூன் ஆயாம்மா என்று அத்தனை பேர் இருக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 27. \\ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். \\ மனுஷன் தோன்றுவதற்கு பல்லாயிரம் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பிரபஞ்சம் உருவாக்கப் பட்டுவிட்டது, மனுஷன் வந்து கடவுளைக் கண்டு பிடித்த பின்னர் தான் கடவுள் வந்தார் என்பது அபத்தம். மனிதன் கடவுளை வழிபட ஏற்ப்படுத்திய வழிகளை விமர்சிப்பது வேறு விஷயம், மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பது ஏற்கத் தக்கதல்ல.

  பதிலளிநீக்கு
 28. \\ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?\\ எமாதனும்னு முடிவு செய்தவன், எந்த வழியிலும் ஏமாற்றுவான், அவன் இறை நம்பிக்கையையும் விட்டுவைக்கவில்லை. ஏமாற்றப் பட்டால், முதல் தவறு ஏமாந்தவனுடையதே. விவரமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விடயம் தெரிந்தவர் துணையோடு இருக்க வேண்டும். மைல் கல்லெல்லாம் கடவுள், காவி உடுத்தியவன் எல்லாம் சாமியார்/அவதாரம் என்று போவது ஆபத்து.

  பதிலளிநீக்கு
 29. கடவுள் இருக்கிறாரா இல்லையா - இன்று தோன்றிய விவாதம் இல்லை - பல நூற்றாண்டுகளாக விவாதித்துக் கொண்டிருக்கும் ஒன்று தான். ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகமும் இருக்கத்தான் செய்யும். கடவுளை நம்புங்கள் - கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை நம்பாதீர்கள் - நல்ல சிந்தனை - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 30. அவரவர் தமதம தறிவறி வகைவகை
  அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
  அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
  அவரவ விதிவழி யடையநின் றனரே

  நம்மாழ்வார் அப்பவே சொல்லிவச்சுட்டுப்போனது!

  பதிலளிநீக்கு
 31. கடவுள் இருந்தா என்ன? இல்லேன்னா என்ன? நம்ம வாழ்கையை நாம் வாழ்வோமே? எந்த கடவுளும் என்னை நீ கும்பிட வேண்டும் என்று சொல்லவில்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூற்றுக்கு தொண்ணூரு பேர் அப்படித்தான் வாழ்கிறார்கள். மீதிப்பேர்கள் அப்படி இப்படி வாழ்ந்து கொஞ்சம் சௌகரியம் ஆனவுடன் அவர்கள் செய்த அக்கிரமங்கள் அவர்களை அலைக்கழிக்கின்றன. அப்படி அலையும் மனதிற்கு ஒரு சமாதானம் தேடித்தான் சாமி, சாமியார்னு போறாங்க. அவங்கவங்க வசதிக்குத் தக்கபடி சாமியும் சாமியார்களும் இருக்கிறாங்கல்ல.

   நீக்கு
 32. டாக்டர் கந்தசாமி ஐயா,
  பிரமாதமான பதிவு; என் பதிவு ஒன்றுடன் ஒத்துப் போகிறது!

  நான் இந்த தலைப்பில் ஒன்று எழுதியுள்ளேன்; பார்க்கவும்.
  உலகத்தைப் படைத்தது கடவுள்; டார்வின் ஒரு வடிகட்டின முட்டாள்!
  இதன் லிங்க் கீழே...
  http://www.nambalki.com/2012/05/blog-post_30.html

  கடவுள் இருக்கிறாரா? இல்லையா? அது ஒரு ஓரமாகா இருக்கட்டும்; ஆனால், அந்தக் காலத்தில் உள்ள நம் முன்னோர்கள் அந்தக் கால அவர்கள் அறிவின்படி சொன்னதற்கு இந்தக் கால அறிவியல் விளக்கம் கொடுத்துக் கொண்டு, ஆன்மீக வியாபாரத்தை தொடர்ந்து செய்கிறார்கள்;

  அதாவது, அப்படி சொன்னாத்தான் இப்படி செய்வீங்க! இப்படி சொன்னாத்தான் அப்படி செய்வீங்க! இது கோலம் போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது!அவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும்; நீங்கள் சொல்வதும் அது தான் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 33. Great Minds think alike.

  எப்படி? நானும் உங்களுடன் சேர்ந்து Great ஆகிவிட்டேன்.

  எல்லாம் சரி, நான் ஜக்கி சாமியாரைப் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் (30 கி.மீ. தூரம்) இருக்கிறார்.அது யார் ஜட்டி சாமியார்? அவர் எங்கே இருக்கிறார்?

  சொன்னீங்கன்னா ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுவன்ல.

  பதிலளிநீக்கு
 34. ////நான் ஜக்கி சாமியாரைப் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் (30 கி.மீ. தூரம்) இருக்கிறார்.அது யார் ஜட்டி சாமியார்? அவர் எங்கே இருக்கிறார்?

  சொன்னீங்கன்னா ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடுவன்ல.////


  ஜக்கியைப் பார்க்கப் போகும் வழியில் உள்ள இருட்டுப் பள்ளத்தில் early 80's ( early எண்பதுகளில்)எழுந்தருளியிருந்தார்.

  இருட்டுப் பள்ளம் என்ற உடன் ஏதோ கசமுசா மேட்டர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். 'காருண்யா' தாண்டின உடன் வரும் ஒரு இடத்திற்கு பேர் தான் இருட்டுப் பள்ளம்.
  என்னடா இவனுக்கு நம்மள விட நம்ம கோவையைப் பற்றி அதிகம் தெரிகிறதே என்று நினைக்கக் வேண்டாம்.

  எனது டாக்டர் வாத்தி அங்கு ஒரு பண்ணை வைத்து இருந்தார்; இப்ப வித்துட்டார். நல்ல வாத்தி. டிக்கெட் போட்டு அவர் பண்ணைக்கு என்னை வரவழைப்பார், எனது தத்துவங்களைக் கேட்க....

  அங்குள்ள கிணத்தில் நீச்சலடித்து குளிக்கும் போது நான் பல அறிய தத்துவங்களை கூறுவேன்; நான் கிணத்தில் நீச்சலடித்து குளிக்கும் போது கட்டாயம் ஜட்டி போட்டிருப்பேன்...

  ஜட்டி போடாமல் இறங்கினால் வாத்தி செந்தமிழில் திட்டும்; இதுவும் எனக்கு ஒரு டாக்டர் மாமன் தான்.

  புரியுதா?

  யார் அந்தக் கள்வன் என்று?

  அமெரிக்காவிற்கு ஒரு எச்சு வந்தா நேராகவே பாத்துடலாம்!

  பதிலளிநீக்கு
 35. கொல்லந் தெருவிலேயே ஊசி விக்கறதுக்கு நல்ல சாமர்த்தியம் வேண்டும். உங்களுக்கு அந்த சாமர்த்தியம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருட்டுப்பள்ளத்தைப் பற்றி ஒரு சிறு திருத்தம். இருட்டுப்பள்ளம் தாண்டித்தான் காருண்யா இருக்கிறது. இருட்டுப்பள்ளத்தில் இருந்து வலது பக்கம் போனால் நம்ம ஜக்கி சாமியார். இடது பக்கம் போனால் சிலுவை சாமியார். நிற்க,

  எனது உடல் நிலை காரணமாக அமெரிக்கா வருவது இயலாத காரணத்தால் ஜட்டி சாமியார் கோவைப்பக்கம் வரும்போது சொன்னால் சேவித்துக் கொள்கிறேன். சாமிக்கு ஒரு டஜன் ஜட்டி வாங்கிவந்து சமர்ப்பிக்கிறேன். சைஸ் மட்டும் முன்னாடியே சொல்லீட்டிங்கன்னா போதும்.

  பதிலளிநீக்கு
 36. பதில்கள்
  1. இப்பவே ஆர்டர் கொடுத்திடறேன். என்ன, ஒரு ஆயிரம் பீஸ் போதுமா?

   நீக்கு
 37. ப்ரீ சைஸ்ஸின்னு மெட்ராஸ் பாஷையில் சொன்னால் அர்த்தம் வேற; யானைக்கு கோமணம் கட்டுறா மாதிரி... அதுக்கெல்லாம் சைஸ் கிடையாது!

  உங்களுக்கு நாலடியார் தெரிந்திருக்கும்....ஆறடியார்; வேற யார் நாந்தேன்; எங்கள் வகுப்பில் அப்போ இரண்டு பேர் தான் ஆறடியார். ஒன்று நான்; உன்னொன்னு என் ஆருயிர் நண்பன் பெர்ஷியன் பாய்! இங்க தான் 2000 மைல் பக்கக்திலே இருக்கான்.

  பதிலளிநீக்கு
 38. எனக்கு தெரியவில்லை இந்த பதிவை மீண்டும் பார்ப்பீர்களா என்று. தங்களது வலை பதிவை நான் இன்று தான் காண நேர்ந்தது. இதற்கு என்னிடம் விடை உண்டு.

  கூகிள் ஆண்டவரிடம் கீழ்க்கண்ட முகவரியை தேடுங்கள். நான் எழுதிய பல பதிவுகள் வள்ளலார் குழுவகத்தில் உண்டு.
  Dhanapal.Thirumalaisamy@gmail.com

  கடவுளை பற்றிய உண்மைகளை ஆதியிலே ஒருவன் மறைத்து விட்டான். இதை எங்கே அறியலாம் என தங்களுக்கு ஆர்வம் இருப்பின் நான் தெரிவிக்கிறேன்.

  -தனபால்

  பதிலளிநீக்கு
 39. தங்களது இணைய முகவரியை எனக்கு அனுப்பவும். என்னுடைய பதிவுகளை அனுப்பி வைக்கிறேன்.
  நன்றி.
  -தனபால்

  பதிலளிநீக்கு
 40. neegal sonnathu unmai! muthal manithanai padaithavane kadaulage iruka mudium. aanal anthe madal manithanai padaithe anthe kadaul yaar? mudal manithanai padaithathai patriya thelivana vilakkam ISLAM mathathil mattumme inru varai nan thelivage padithullen.. aage ALLAH mattume ore iraivan enru ethu kolgiren..

  பதிலளிநீக்கு
 41. உடல் முழுதும் மனம் என்னும் சக்தி நிறைந்த்திருப்பதுபோல் பிரபஞ்சம் முழுதும் கடவுள் என்னும் சக்தி நிறைந்திருக்கிறது.மனித உடலுள் இருக்கும் அத்தனை அவையவங்களையும் தனித்தனியாக பிரித்துப்பார்த்த மனிதனுக்கு அந்த உடலிலிருந்த மனம் என்பது மட்டும் கண்ணுக்கு தெரியவே இல்லை. மனம் என்பது ஒரு சக்தி.அதை கண்ணால் காணமுடியாது.மனத்தைக்கொண்டு மனத்தை உணருவது போல மனத்தைக்கொண்டு கடவுளை உணரலாமே தவிர மனத்தைக்கொண்டு கடவுளை காணமுடியாது.கடவுள் இயற்கையோடு இயற்கையாய் கலந்து இருக்கிறார்.கடவுள் நம்முள் நிறைந்திருக்கிறார். நாம் அவருள் மூழ்கி இருக்கிறோம்.சில சமயம் இயற்கையின் நியதிகளாய் தென்படுகிறார்.சிலசமயம் நம்பிக்கைகளில் தென்படுகிறார்,சிலசமயம் பிரார்த்தனையில் கிடைக்கிறார். சிலசமயம் தியானத்தில் தென்படுகிறார்.சிலசமயம் சாதாரண நிகழ்ச்சிகளில் ஆச்சரியமாய் தென்படுகிறார்.அப்படித்தான் கடவுள் என்பது மனிதருள் பிரபல்யமானது.ஒரு சிலர் அந்த சக்தியை போற்றுவதிலேயே வாழ்வை அர்ப் பணித்துக்கொண்டார்கள். பலர் ஆன்மிக பயிற்சியும், முயற்சியும் செய்தார்கள்,செய்கிறார்கள்.இது விளையாட்டைப்போன்றது.பலபேர் முயற்சிப்பார்கள், ஒருவர்தான் வெற்றிபெறுவார், கோடிகணக்கானோர்
  பார்வையாளர்களாகவும்,விமர்சகர்களாகவும் இருப்பார்கள். ஆகையால், நம்மில் யாரோ ஒருசிலர்தான் கடவுள் பற்றி தெளிவாகவும், முழுநேரமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கமுடியும்.
  எல்லோராலும் ஒரே மாதிரி கடவுளை புரிந்து கொள்ளவோ,ஏற்றுக்கொள்ளவோ முடியாது.

  பதிலளிநீக்கு
 42. கடவுள் ஒருவரே.நாம் அனைவரும் ஓவ்வொரு பெயரில் அழைக்கிறோம்.
  ஆனால் அவையெல்லாம் ஒரே இடத்தைதான் சேருகிறது.கடவுள் இல்லாமல் இவ்வுலகில் ஏதும் இயங்காது.
  நான் பார்த்தால் தான் கடவுள் இருக்கிறார் என்று நம்புவேன் என்றால் அது சாத்தியமில்லை.நம்மால் MLA.MPபோன்றோர்களை பார்ப்பதே கடினம்.இதில் கடவுளை மட்டும் பார்த்துவிட்டுதான் நம்புவேன் என்றால் அது ஏற்புடையதல்ல.உண்மையை அறியத்தான் கடவுள் 6 அறிவை கொடுத்திருக்கிறார்.சிந்தியுங்கள் சரியான பாதையை தேர்ந்தெடுங்கள்

  பதிலளிநீக்கு
 43. *#நபிகள்_நாயகம்(ஸல்)........*

  *உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.*

  *தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.*

  *1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.*

  *ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத்துள்ளது.*

  *தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை,*

  *ஆனால் கொள்கை மட்டும் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றாண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.*

  *உள்ளங்களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள்.*

  *200 கோடி மக்களும் தங்களுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர் காட்டிச்சென்ற வழியிலேயே தீர்வை எட்டுகின்றனர். இது வேறு எந்த சமுதாயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு.*

  *இஸ்லாமியர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது. உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப்பட்டாலும் இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.*

  *இஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக்காரர். அவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனிதநேயத்தை ஊட்டினார்.*

  *பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றி கொண்டிருக்கிறது.*

  *அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.*

  *யார் அவர்..?*

  *எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..!!*
  *ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.*

  *ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.*

  *ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.*
  *இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,*

  *ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.*
  *(ஆதாரம் புஹாரி 2567)*

  *கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.*
  *(ஆதாரம் புஹாரி 5413)*

  *அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.*
  *(ஆதாரம் புஹாரி 5413)*

  *வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.*

  *பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.*

  *(ஆதாரம் முஸ்லிம் 3799)*

  *உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.*
  *உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்..* *(ஆதாரம் புஹாரி 3108)*

  *ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.*

  *போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.*
  *(ஆதாரம் புஹாரி 1277)*


  *அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.*
  *(ஆதாரம் புஹாரி 5386)*

  *இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய்* *பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.*
  *(ஆதாரம் புஹாரி 730)*

  *தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.*
  *(ஆதாரம் புஹாரி 6456)*

  *ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)*

  *மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)*


  *நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.*

  *நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?*

  *இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.*

  *நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?*

  *இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர்.*
  *நாட்டுக்கே ஜனாதிபதி

  பதிலளிநீக்கு