இது என்னுடைய 400 வது பதிவு. உடனே எல்லோரும் வாழ்த்துப் பின்னூட்டங்கள் போடவேண்டாம். ஏனெனில் இதில் ஒன்றும் பெரிய பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. "ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்கிற மாதிரி கூகுள்காரன் புண்ணியத்தில நாம இலவசமா பதிவு போட்டுட்டு இருக்கிறோம். பதிவு ஒன்றுக்கு 10 ரூபாய் என்று சார்ஜ் போட்டிருந்தால் 95 சதம் பேர்கள் காணாமல் போயிருப்பார்கள்.
பதிவுகளில் மொக்கைகள்தான் அதிகம். அதில் யாருடையது பெரிய மொக்கை என்று கண்டு பிடித்துச் சொல்ல பல திரட்டிகள் இருக்கின்றன. என்னுடைய பதிவுதான் அசல் மொக்கை என்று தமிழ்மணம் சான்றிதழ் கொடுத்திருக்கிறது.
இப்போ மேட்டருக்கு வருவோம். எனக்கு ரொம்ப நாளா ஒரு "ஸ்லேட்" வாங்க வேண்டுமென்று ஆசை. ஸ்லேட்டுன்னாத் தெரியும் என்று நினைக்கிறேன். அதாங்க டேப்லெட் பி.சி. அதாவது டேப்ஃ அல்லது செல்லமா ஸ்லேட் என்று சொல்லப்படும் லேடஸ்ட் கேட்ஜட்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த என் நண்பரின் பேத்தி ஒரு ஸ்லேட் வைத்திருந்தாள். அதில் என்னென்னமோ வேடிக்கையெல்லாம் காட்டினாள். அதைப் பார்த்த எனக்கும் அது மாதிரி ஒன்று வாங்வேண்டும் என்ற ஆசை வந்தது. என்ன விலை என்று கேட்டேன். சும்மா 600 டாலர்தான் தாத்தா என்று சொன்னாள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
விலையைக் கேட்டல்ல. என்னைத் தாத்தா என்று கூப்பிட்டதால்தான். இதுவரை என்னை யாரும் அப்படிக் கூப்பிட்டதில்லை.
சரி, 600 டாலருக்கு எத்தனை ரூபாய் என்று மனக்கணக்கு போட்டதில் 30000 ரூபாய் என்று தெரிந்தது. வாங்கிடலாம், ஆனால் வீட்டம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இந்த யோசனையைக் கைவிட்டேன்.
இந்த 400 வது பதிவிற்காக ஏதாவது செய்யவேண்டுமே என்று எங்கள் ஊர் கடைவீதிக்கு சென்றேன். அங்கு நான் வழக்கமாகப் போகும் கடைக்குப் போய் ஸ்லேட் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இருக்கிறது என்று சொன்னார். என்ன விலை என்று கேட்டேன். அவர் 30 ரூபாய் என்று சொன்னார்.
எங்க ஊரில் ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் என்று சொல்லும் வழக்கம் உண்டு. நான் அதை நினைவில் கொண்டு என்ன பெரிய ரூபாயில் முப்பதா என்று கேட்டேன். இல்லைங்க, வெறும் 30 ரூபாய்தானுங்க என்றார். அட, வெலை ரொம்ப சலீசா இருக்குதே அப்படீன்னு நெனச்சிக்கிட்டு ஒண்ணு கொடுங்க என்றேன். அவர் ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.
அதை வீட்டில் வந்து பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நீங்களும் பாருங்கள். சரி, வாங்கினது வாங்கியாய் விட்டது. உருப்படியாய் எங்கேஜ்மென்ட்டுகளையாவது எழுதி வைப்போம் என்று எழுதி வைத்திருக்கிறேன்.
செம மொக்கை!
பதிலளிநீக்குநானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குபெரிய பெருமை இருப்பதாக நினைக்கிறோம் ...
சிலேட்டு மகன் வாங்கிதந்தார் .. ப்யன்படுத்த மேஜைக்கணிணி மாதிரியோ, லேப்டாப் மாதிரியோ வசதிப்படவில்லை..
ஹா ஹா....
பதிலளிநீக்கு#நாங்கூட டேப் வாங்கிட்டீங்கனு நெனச்சேன்!!!
:-)
நல்ல பயன்! இனிய பாராட்டுகள்!
பதிலளிநீக்குசெம மொக்கை
பதிலளிநீக்குNejamaave konjam mokka dhaan Sir
பதிலளிநீக்கு/வாங்கினது வாங்கியாய் விட்டது. உருப்படியாய் எங்கேஜ்மென்ட்டுகளையாவது எழுதி வைப்போம் என்று எழுதி வைத்திருக்கிறேன்./நிச்சயமாய் உருப்படியான காரியம்தான். /என்னைத் தாத்தா என்று கூப்பிட்டதால்தான். இதுவரை என்னை யாரும் அப்படிக் கூப்பிட்டதில்லை/வயது என்பது நாம் நினைப்பது பொறுத்தது. YOUR AGE IS NOT WHAT PEOPLE THINK OF YOUR CHRONOLOGICAL YEARS. IT IS WHAT YOU FEEL ABOUT YOURSELF. YOU CAN FEEL OLD IN FORTY. YOU CAN FEEL YOUNG IN EIGHTY.என்றும் இளமையுடன் நினைக்க வேண்டுகிறேன். 40-வது மொக்கைக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு400-க்கு வாழ்த்துக்கள் சார் !
பதிலளிநீக்குஉங்க கரைச்சல் தாங்க முடியலை..... ஹா ஹா...
பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...(த.ம. 2)
அது சரி ..மரண மொக்கையாயில்ல இருக்கு !!
பதிலளிநீக்கு400 க்கு இனிய வாழ்த்துக்கள் ஐயா.;)
பதிலளிநீக்கு:))))
பதிலளிநீக்குநானூறு பதிவு போட்டும் மொக்கைகள்
பதிலளிநீக்குபுதுசு புதுசா முளச்சுக்கிட்டே இருக்கே.
என்ன ஒரு கொடுமை..அதுக்காக தாத்தான்னா கூப்பிடறது?
பதிலளிநீக்குஇந்த சிலேட்டோ அந்த சிலேட்டோ செய்வது என்னவோ ஒன்றுதான்!
பதிலளிநீக்கு400-க்கு வாழ்த்துக்கள்!
Dear Sir,
பதிலளிநீக்குI am big fan of your blog.
Congrats on your 400th blog.
Your writing style is always simple and very nice.Please continue your blog and keep us interested.
Thanks
Arul
San Jose,CA.
400 க்கு இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநானூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! பதிவு செம மொக்கை!
பதிலளிநீக்கு//எல்லோரும் வாழ்த்துப் பின்னூட்டங்கள் போடவேண்டாம். ஏனெனில் இதில் ஒன்றும் பெரிய பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.//
பதிலளிநீக்குநீங்கள் அப்படி நினைக்காலம். ஆனால் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை. 400 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கூறிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு:))))
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
http://www.jeyamohan.in/?p=9502
பதிலளிநீக்குஅன்றாட வாழ்க்கையில்நாம்செய்யும் பத்து மனப்பிழைகளை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் கட்டுரையில் எங்கும் ஆசிரியர் பெயரே இல்லை.
this will help u to write 401s pathivu
இந்த பதிவில் உங்கள மனநிலை தெரிகிறது
பதிலளிநீக்குஒவ்வரு நாளும் எழுத எதை தீர்மானிப்பது என உழல்வதும்
google நன்றியும் சொல்லாமல் சொல்ல வருகிறீர்.........
கனவுகள் கற்பனைகள் பற்றி ஒரு கட்டுரை உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன் ............................
401- வது பதிவுக்கு ஒரு ஐடியா....
பதிலளிநீக்குஎந்த சிலேட்டுக்கு எந்த கலர் பலப்பம் வாங்குவது?
மேலும் பலப்பத்தை எப்படி டூ இன ஒன் மாதிரி உபயோகப் படுத்துவது...
அதாவது, எழுதவும் செய்யலாம்; பசிக்கும் போது சாப்பிடவும் செய்யலாம்!
இங்க எங்க வீட்டிலே பிரிட்ஜ் மேலே ஒரு [magnet} ஸ்லேட்டு ஒட்டி இருப்போம்; அதிலேயே, ஒரு பலப்பமும் இருக்கும்...SMS - மாதிரி சில எழுதி வைப்போம்; காப்பி இருக்கு குடிடா மவனே; வெளியில் சாப்பிடாதே; இட்லி ஹாட் - பிளாஸ்கில் இருக்கு., அப்படின்னு.
சமயல் அறைக்கு வந்தால் அதைத் தான் முதலில் பார்ப்போம்!
எப்படி நாங்க கற்காலத்திற்கு போகிறோம் பார்த்தீங்களா!
பரவாயில்லீங்க, நல்ல நல்ல ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. உங்களுக்கு "ஐடியா மன்னன்" விருது கொடுக்க முடிவு செய்துட்டேன். விருதின் டிசைனை வடிவமைக்க ஆள் தேடிக்கொண்டு இருக்கிறேன். டிசைன் வந்தவுடன் முதல் விருது உங்களுக்குத்தான்.
பதிலளிநீக்குபலப்பத்தை எங்க ஊர்ல "சிலேட்டுக்குச்சி" என்போம். அது பல வகைகளில் உபயோகப்படும். சிலேட்டில் எழுத, சாப்பிட என்பது எல்லாம் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும். காது குடைய உபயோகப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எப்படியோ ஒரு பதிவிற்கு மேட்டர் கெடச்சுட்டுது.
என்னோட உதவி தேவையா?
பதிலளிநீக்குஆமாங்க, கண்டிப்பாய் வேண்டும். சாப்பிடறதுக்கும் தூங்கறதுக்கும் உதவி வேண்டியதில்லை. கம்ப்யூட்டர நோண்டறதுக்கு மட்டும் ஏதாவது ஐடியா கொடுங்க, ஒரு வழி பண்ணீடலாம்!
நீக்குந்கைச்சுவையாக இருந்தாலும்,அலட்டாமல் யதார்த்தமாக பதிவுலகை பார்க்கிறீர்கள்,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநானூறாவது பதிவு என்றதும் என் மனம் தானாக வாழ்த்துச் சொல்லி விட்டதே!!!....:)
பதிலளிநீக்குமேலும் மேலும் தொடரட்டும் ஐயா சிறப்பான மொக்கைகள்.
மிக்க நன்றி, அம்மா.
நீக்குநானூறுக்கு நல்வாழ்த்துகள் அய்யா - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு