வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாயம் என்றால் என்ன?



இயற்கை விவசாயத்தைப் பற்றி ஓரிரு பதிவுகள் போட்டிருந்தேன். ஆனால் இயற்கை விவசாயத்தைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ளும் விதமாக நான் ஒரு பதிவும் இடவில்லை. அந்தக் குறையை நீக்கும்பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன்.

இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
  1.   பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
  2.   சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
  3.   பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
  4.   பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
  5.   மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

  பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
  1.   சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  2.   நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  3.   நல்ல பயிர் மேலாண்மை
  4.   பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
  5.   பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
  6.   இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் என்றால் என்னென்ன என்று அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

9 கருத்துகள்:

  1. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

    நிறைவளிக்கும் பகிர்வு..

    பதிலளிநீக்கு
  2. Aiya,thangalin intha pathivu palli kudaththil puthakathil padipathu pool ullathu.
    Thangalin kusumpu thanam illamal iruppathu varuththai tharukirathu.
    Nadaimurai peachu vaakil pathivu poodunga aiyaa.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பானவிளக்கம்! ஆரிப் சொன்னதை யோசிக்கலாம் ஐயா!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரிப் சொன்னதை யோசித்துக் கொண்டே இருக்கிறேன். நல்ல தொழில் நுட்பப் பதிவு போட்டா வர்ற கமென்ட்டைப் பார்த்தீர்களா? அப்புறம் நாடு எப்படி முன்னேறும்? நான் எப்ப முன்னேர்றது?

      நீக்கு
  4. இயற்கை விவசாயம் பற்றிய அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா.இன்று இத்தளம் சந்திக்கக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.இயற்கை,விவசாயம் இரண்டுமே அவசியமாகது.இணைதல் அருமை.வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு