வியாழன், 9 ஆகஸ்ட், 2012

உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்


இந்தப் பழமொழியை எல்லோரும் அறிவீர்கள். ஈமு கோழியின் நிலை இதற்கு நல்ல உதாரணம்.

சுசி ஈமு பண்ணை திவாலானதும் போலீசும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து அந்தக் கம்பெனியின் சொத்துக்களை முடக்கியதும் தெரியும். ஆனால் ஓடிப்போன இந்தக் கம்பெனி முதலாளி இப்படி ஒரு வில்லங்கத்தை விட்டுச் செல்லுவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மூன்று இடங்களில் சுமார் 6500 ஈமு கோழிகளையும் அந்த ஆள் விட்டுச் சென்றிருக்கிறான். அவைகள் நாலு நாளாக பட்டினி. இதை அப்படியே விட முடியுமா? அவைகளுக்குத் தீனி போட்டுத்தான் ஆகவேண்டும். 6500 கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 5 டன் தீவனம் வேண்டும். ஒரு டன் 20000 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யவேண்டும்.

பராமரிப்புக்கு அவன் போதுமான ஆட்களை விட்டுச் செல்லவில்லை. அதற்கு குறைந்தது 30 ஆட்களாவது வேண்டும். ஆள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அதற்கு தினம் 15000 ரூபாய் வேண்டும்.

இது போக ஈமு கோழி ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 6500 கோழிக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும்.

இவ்வளவு இருந்தும் பராமரிப்பு சரியில்லாவிட்டால் கோழிகள் இறந்து போக வாய்ப்புகள் உண்டு. அப்படி இறந்து போனால் அவைகளை என்ன செய்வது? கோர்ட்டுக்கு என்ன பதில் சொல்வது?

ஐயா, சுசி முதலாளியே, எங்கிருந்தாலும் உடனே வந்து எங்களை இந்த உடும்பிலிருந்து காப்பற்றும் ஐயா!

24 கருத்துகள்:

 1. "என்ன செய்வது ?" என்று மாட்டிக் கொண்டவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...(TM 2)

  பதிலளிநீக்கு
 2. இப்படியும் பிரச்னைகள் இருக்கா? ஐயோ.. ஐயோ..

  பதிலளிநீக்கு
 3. ஹா..ஹா..ஹா.. இதை படித்ததும் சிறு வயதில் தமிழ் பாடத்தில் படித்த "செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பன்" கதைதான் நினைவுக்கு வருது.

  பதிலளிநீக்கு
 4. அடப்பாவி.

  இப்படி கோழிகளைப் பட்டினி போட்டுருக்கானே:(

  பதிலளிநீக்கு
 5. ஐயா, சுசி முதலாளியே, எங்கிருந்தாலும் உடனே வந்து( எங்களை ?) இந்த உடும்பிலிருந்து காப்பற்றும் ஐயா! ---------

  பதிலளிநீக்கு
 6. இதைத்தான் ‘நாயர் பிடித்த புலி வால்’ என்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
 7. சரியான வகையில் கணக்கெடுப்புச் செய்து , நீதிமன்றத்தில் கையளித்து, அவற்றை மிருகக்காட்சிச்சாலை விலங்குகளுக்கு, முதலைப் பண்ணைக்கு உணவாக்க முடியாதா?
  இனி அவர் வந்து என்ன? செய்யப்போகிறார். இதைத் இனி நாடுவாரும் இருக்கார்; இறந்து மண்ணுக்குள் போவதை அரசு பயன் படுத்தலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பிரச்சினையை யார் அணுகி, எப்படி முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. முதலமைச்சரின் பார்வைக்கு இந்தப் பிரச்சினை சென்று அவர் நீதிமன்றங்களின் ஒப்புதல் பெற்று இவைகளுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்குள் அநேகமாக அடுத்த தேர்தல் வந்துவிடும்.

   நீக்கு
 8. சுசி மட்டுமல்ல ஐயா. இன்னும் பல ஈமு கோழி நிறுவன அதிபர்களும் தலைமறைவு என்று செய்தி.

  @ திண்டுக்கல் தனபாலன் சார் - சுசி ஈமு கோழி நிறுவனத்திற்கு தீவனம் அனுப்பி வந்தது திண்டுக்கல்காரரர் தானம். அவருக்கு ரூ.4 கோடி பணம் பாக்கி இருக்கிறதாம். அதனால் தான் கடந்த சில வாரங்களாகவே தீவனம் அனுப்புவதை நிறுத்தி விட்டாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தோடு இந்தக்கதை முடியாதே, விருச்சிகன். இந்தக் கம்பெனிகளிடம் அக்ரிமென்ட் போட்டு வாங்கி தனியார் வசம் வளரும் கோழிகள் எத்தனையோ. அவர்கள் இந்தக் கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

   ஜெயலலிதா அம்மையார் ஒரு சட்டம் போடவேண்டும், இனிமேல் கோயில்களில் கடா வெட்டுவதற்குப் பதிலாக ஈமு கோழிகளைத்தான் வெட்டவேண்டும், என்றால் ஓரளவுக்கு சுமை குறையும். அதே மாதிரி சாயபு வீட்டுக் கல்யாணங்களில் ஈமு பிரியாணிதான் போடவேண்டும் என்றும் ஒரு சட்டம் போடலாம். தஞ்சாவூர் மொய் விருந்துகளிலும் ஈமு பிரியாணிதான் போடவேண்டும். டெசோ மகாநாடு, பதிவர் சந்திப்பு ஆகிய இடங்களிலும் இதே பிரியாணிதான் போடவேண்டும்.

   நீக்கு
 9. அய்யோ.. என்னதான் நடக்கப்போகின்றதோ.

  பதிலளிநீக்கு
 10. காப்பீடு செய்யப்படவில்லையா ? சிறு தொழில்களுக்கு காப்பீடுகள் இருக்கின்றன.. காப்பீடுகள் இருந்தால் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இழப்பை ஈடு செய்யும் ... !!! ஆனால் அரசு முன் வந்து உதவ வேண்டும்.. இனி மேல் தொடங்கும் எந்த சிறு / பெரு தொழில்களுக்கும் காப்பீடு செய்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் .. ஏமாந்து போன விவசாயிகள் நிலை பாவம் தான் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காப்பீடு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். விவசாயிகள் இந்த ஈமுக் கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்? வாங்குவதற்கு ஆள் இல்லை.

   நீக்கு
 11. ///இந்தப் பிரச்சினையை யார் அணுகி, எப்படி முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. முதலமைச்சரின் பார்வைக்கு இந்தப் பிரச்சினை சென்று அவர் நீதிமன்றங்களின் ஒப்புதல் பெற்று இவைகளுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்குள் அநேகமாக அடுத்த தேர்தல் வந்துவிடும்.///

  இந்த கூற்றிலே இந்தியா ஜனநாய் நாடு இல்லை என்பதை உறுதிப் படுத்திவிட்டீர்கள்; கொண்டாம் பட்டியில் ககக்கூஸ் செயல் படக் கூட அம்மா ஆசீர்வாதம் தேவையா?

  பின்குறிப்பு: சும்மா பேச்சுக்கு கொண்டாம் பட்டி என்று சொன்னேன். ஏனென்றால், சென்னையில் உள்ள பல வீடுகளில் கூட ககக்கூஸ் (running water toilet) கிடையாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த கூற்றிலே இந்தியா ஜனநாய் நாடு இல்லை என்பதை உறுதிப் படுத்திவிட்டீர்கள்;//

   என்னுடைய வாயில் வார்த்தைகளைப் போட்டுப் புடுங்காதீங்க. இந்தியா ஜனநாயக நாடில்லையென்று சொன்னால் நான் கம்பியெண்ணப் போகவேண்டும், நம்பள்கி. என்னாலெல்லாம் இனி களி சாப்பிட முடியாதுங்க.

   நீக்கு
 12. ///ஜெயலலிதா அம்மையார் ஒரு சட்டம் போடவேண்டும், இனிமேல் கோயில்களில் கடா வெட்டுவதற்குப் பதிலாக ஈமு கோழிகளைத்தான் வெட்டவேண்டும்,///

  பேஷ்! பேஷ்!!
  எனது கோவை நண்பர்கள், இப்படி சொன்னால், நான் சொல்லுவேன், நீ தாண்டா கொங்கு நாட்டு குசும்பு தங்கம் அப்படின்னு.!

  நீங்களே பெரியவா? வயிதிலே மூத்தவா நீங்க! அதனாலே, நீங்க தான் சார் கொங்கு நாட்டு சொக்கத் தங்கம்!

  பதிலளிநீக்கு
 13. ///பழனி.கந்தசாமி ...இந்தியா ஜனநாயக நாடில்லையென்று சொன்னால் நான் கம்பியெண்ணப் போகவேண்டும், நம்பள்கி. என்னாலெல்லாம் இனி களி சாப்பிட முடியாதுங்க///

  நான் ஒரு பேச்சுக்கு சொன்னா....ஆமாம், ஆமாம், இந்தியா ஜனநாயக நாடும் கிடையாது மேலும் பேச்சு சுதந்திரமும் கிடையாது அப்படின்னு செர்ட்டிபிகாடேடே கொடுத்திதிட்டீங்க.....

  ஜெயிலில், களிக்கு பதில் ஈமு கோழி போட்டா வசதி எப்படி?

  ஆண் ஈமுக்கு பேர் என்ன? ஈமு சேவல் தானா? இல்லை கோழனா [அதான், கோழன் கோழிக்கு எதிர்ப்பதம்.]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களிக்குப் பதிலா ஈமு கோழி? அட்டகாசமான ஐடியாவா இருக்குதே? அம்மா கிட்ட சொல்லீடவேண்டியதுதான்?

   அப்புறம் ஒரு விஷயம் தெரியுமுங்களா? ஈமு கோழிங்க ஜோடி ஜோடியாத்தான் இருக்கும். பெண் கோழி முட்டை இட்ட பிறகு ஆண் கோழிதான் அடை காக்கும்.

   மொத்தமா தமிழ் நாட்டில இன்னக்கித் தேதிக்கு 60000 கோழிகளுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்குதுங்களாம்!

   நீக்கு
 14. ///ஈமு கோழிங்க ஜோடி ஜோடியாத்தான் இருக்கும்.///

  இதுக்கும் வழி உண்டு; அம்பிகா - அமரா மாதிரி சேர்த்தே ஜெயில் சமயலறைக்கு பார்சல் பண்ணிவிடலாம்.

  பதிலளிநீக்கு