புதன், 1 ஆகஸ்ட், 2012

கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.\\கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.
===================================================================


மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" என்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

17 கருத்துகள்:

 1. இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

  ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை//

  உங்கள் விசாலான மனத்தையும்
  பக்குவத்தையும் இந்தப் பதிவு
  பறைசாற்றிப் போகிறது

  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நான் இதுவரை கடவுளை பற்றி படித்ததில் மிக தெளிவான கருத்து. ஜெயதேவ தாஸ் , உங்களுக்கு ஒரு நமஸ்காரம். சார்.. அதை தனிப்பதிவாக போட்ட உங்களுக்கும்..

  பதிலளிநீக்கு
 3. ஒரு பின்னூட்டத்தையே பதிவாக போட்டதற்கு முதலில் பாராட்டுக்கள் ஐயா...

  மண்சட்டி உதாரணம் அருமை...

  உங்களின் முடிவு வரிகளும் அருமை...

  நன்றி...
  (த.ம. 5)

  பதிலளிநீக்கு
 4. இதை நானும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை .

  முடிந்தால் இதை நானும் என் தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன் அனுமதி கிடைக்குமா? நல்ல கருத்துகள் நாலு பேரை சென்று அடைய வேண்டுமென்றுதான் கேட்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராளமாகச் செய்யுங்கள். இந்த கருத்து நல்ல கருத்துதானே. மக்களின் மனம் தெளிவடைய உதவும்.

   நீக்கு
 5. Jayadev Das சொன்னதைப் போலவே என் நண்பன் சொன்னான். நான் நம்பவில்லை; இத்தனைக்கும் அவன் Jayadev Das மாதிரி வெண்டைக்காய் விளக்கம் கொடுக்காமல், ஆதார பூர்வமாகக் நிரூபித்தான் "ஏசு கிறிஸ்து" என்ற கடவுள் தான் உலகத்தில் எல்லா மக்களையும் ஜீவா ராசிகளையும் படைத்தார் என்று.

  நான் அதை உண்மை என்று மனதார ஒத்துக் கொண்டாலும், என் வாதத் திறமையால் அவனை விவாதத்தில் தோற்ககடித்தேன். உண்மையில் அவன் சொன்னது தான் சரி; உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் அவர் எம்மதத்தவர் ஆக இருந்தாலும், அவர்களை உருவாக்கியது ஏசு கிறிஸ்து தான்....ஆதாம் ஏவாள் மூலம்...இந்த உண்மையை எவனாலும் மறுக்க முடியாது.

  நான் இந்துப் பள்ளியில் மூன்று வருடம் படித்த்தாலும், நான் முழுக்க முழுக்க படித்த்து கிறித்துவ பள்ளியிலும் கல்லூரியிலும் தான்.

  எனது தெய்வம் ஏசு கிறிஸ்துவின் தூதராக வந்து சுவிசேஷம் செய்த Jayadev Das என்ற இறை தூதருக்கு நன்றி!


  ஆமென்! இறை தூதர் Jayadev Das ஐயா அவர்களே, ஏசு உங்களுக்கு சுகமளிப்பார்.

  பதிலளிநீக்கு
 6. நானும் இதை ஏற்கிறேன். நமக்கும் மேலான ஒரு சக்தி உண்டே!.
  நன்றி ஐயா.பின்னூட்டத்தை முன்னூட்டமாக்கியதற்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. கமெண்டையே பதிவாக்கி வாசகரை சிறப்பித்தமைக்கு நன்றி! மிகவும் சிறப்பான கருத்துக்கள்!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  பதிலளிநீக்கு
 8. நம்பவே முடியவில்லை..............!! நானும் சில நாட்களாக தங்கள் தளம் பக்கம் வரவேயில்லை, அதே தலைப்பு குறித்து தனிப் பதிவு போடுவதாகவும், அது குறித்து கருத்து தெரிக்கவேண்டும் என்று தாங்கள் சொல்லியிருந்ததால் இன்று இந்த பக்கம் வந்தேன், வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி. இது தாங்கள் எனக்கு வழங்கிய கவுரவம், மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. Earthen pot may not have come on its own. But ''EARTH'' ?? We need someone to confide ourselves and someone to help us and comfort us. That may be your father, mother or your son.The one who is ready to help you at any cost and do anything to make you happy and safe is your god.Have ''BELIEF'' but not SUPERSTITIOUS BELIEF.
  KARTHIK+AMMA

  பதிலளிநீக்கு
 10. படைத்தவர் இன்றி படைப்பு இல்லை என்றே எடுத்துக் கொள்வோம் எனில் !!! படைத்தவரை படைத்தவன் எவனோ ???!!! அப்படி எனில் அதற்கு முடிவே இருக்காது .. படைத்தவனை படைத்தவனை தேடி கொண்டே தான் இருக்க வேண்டும் ... !!!

  ஜெயதேவ் தாஸ் சொல்வதைப் பார்த்தால் 96 சதவீதம் தென்படாத கருப்பு பிரபஞ்சத்தில் தான் கடவுள் ஒளிந்துக் கொண்டிருக்கின்றார். ஒளிந்துக் கொண்டிருப்பவனை கண்டுப்பிடிக்க முடியாது என்ற தொனியில் சொல்கின்றார் ... !!!

  நாம் கேட்பது கடவுள் எங்கேயோ ஒளிந்துக் கொண்டிருந்து இங்கு பூமியில் இருப்பவையை படைத்தும், ஆட்டுவித்தும், அழித்தும் வருகிறார் அல்லவா !!!

  அவர் எதனூடாக அதனை செய்கின்றார் ? குறிப்பாக ஒரு செல்பேசி இயங்க ஒரு உபகரணமும், அலைகளும் தேவைப்படுகின்றது ... !!! ஒரு டிவியின் ரிமோட் இயங்க ரிமோட்டும் அலைகளும் தேவைப்படுகின்றது .. !!! டிவி நாம் என வைத்துக் கொண்டால் .. இயக்குபவன் கடவுள் என வைத்துக் கொண்டால் .. அந்த ரிமோட் எது ? ரிமோட்டில் இருந்து வரும் அலைகள் எது ?

  இதுவரை உலகில் அப்படி ஒரு அலை கடவுளிடம் இருந்து வருவதாக கண்டுப்பிடிக்கப்படவில்லை .. எங்கோ இருப்பவை ( கடவுள் ) தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் இங்கிருப்பவையை நாம் கண்டறிந்துவிட்டோம்.. அப்படி ஒரு அலை மனிதனை, உயிர்களை உருவாக்குவதை, கட்டுப்படுத்துவதை, அழிப்பதைக் கண்டறியவே இல்லை.. !!!

  சோ ! ஜெயதேவ் தாஸ் சொல்லும் ஏரணம் ( லாஜிக் ) அடிவாங்குகின்றது ... !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. \\ஜெயதேவ் தாஸ் சொல்வதைப் பார்த்தால் 96 சதவீதம் தென்படாத கருப்பு பிரபஞ்சத்தில் தான் கடவுள் ஒளிந்துக் கொண்டிருக்கின்றார். ஒளிந்துக் கொண்டிருப்பவனை கண்டுப்பிடிக்க முடியாது என்ற தொனியில் சொல்கின்றார் ... !!!\\ என் கண்ணுக்கும், நான் கண்டுபிடித்த அறிவியல் உபகரணங்களுக்கும் தென்படாத ஒன்று இருக்கவே முடியாது என்று சொல்வதற்கில்லை என்பதை மறுதலிக்க சொன்ன உதாரணம் இது, இறைவன் அங்கு ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

   நீக்கு
  2. \\நாம் கேட்பது கடவுள் எங்கேயோ ஒளிந்துக் கொண்டிருந்து இங்கு பூமியில் இருப்பவையை படைத்தும், ஆட்டுவித்தும், அழித்தும் வருகிறார் அல்லவா !!!

   அவர் எதனூடாக அதனை செய்கின்றார் ? குறிப்பாக ஒரு செல்பேசி இயங்க ஒரு உபகரணமும், அலைகளும் தேவைப்படுகின்றது ... !!! ஒரு டிவியின் ரிமோட் இயங்க ரிமோட்டும் அலைகளும் தேவைப்படுகின்றது .. !!! டிவி நாம் என வைத்துக் கொண்டால் .. இயக்குபவன் கடவுள் என வைத்துக் கொண்டால் .. அந்த ரிமோட் எது ? ரிமோட்டில் இருந்து வரும் அலைகள் எது ?\\ இன்றைக்கு இவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பதால் இந்த வைகையில் எல்லாம் அவர் தொடர்பு கொள்கிறாரா என்று கேட்கிறீர்கள், ஒருவேளை இது பற்றி தெரியாத ஒரு காட்டு வாசியிடம் சொன்னால், அது எப்படி சாத்தியம் என்று நகைப்பார். பிரபஞ்சத்தை ஒப்பிடும் போது இந்த பூமி தூசி கூட இல்லை, அதில் ஒரு தனி மனிதன் இன்னமும் அற்பமான இடத்தையே ஆக்கிரமிக்கிறான், இத்தனைக்கும் அவனால் ஒரு அனுவைக் கூட உருவாக்க முடியாது, அவனுக்கு இத்தனை தொழில் நுட்பம் தெரிந்திருந்தால், இந்த பிரபஞ்சத்தை படைக்க வல்ல ஒரு சக்தி வாய்ந்த ஒருத்தரிடம் இன்னும் என்னென்ன டெக்னாலஜி இருக்கும்? மறுபடியும் செக்கு மாடு என்னால் காணதது இருக்கவே முடியாது மாதிரி அதே கதைக்கு வர வேண்டாம். உம்மால் காண முடியாததும் இருக்கும் என்பதற்கு முன்னரே உதாரணங்கள் கொடுக்கப் பட்டுவிட்டது.

   நீக்கு
 11. "ஏசு கிறிஸ்து" என்ற கடவுள் தான் உலகத்தில் உள்ள மற்ற எல்லா கடவுள்களையும் ஜீவா ராசிகளையும் படைத்தார்.

  நான் பர்ர்த்திருக்கிறேன் ஏசு என்ற கடவுளை; மேலும் அவர் மீது கடவுள்களை படைப்பதையும் நான் நேராகப் பார்த்திருக்கிறேன்.

  கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்வது தவறு; நீங்கள் பார்க்காவிட்டால் அதற்கு நீங்கள் இன்னும் புண்ணியம் பண்ணனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி பல் பெரியவா கருத்துக்களை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறேனே, அதை விட வேறென்ன புண்ணீயம் பண்ண வேண்டும்? நேற்று இரவில் எனக்கு கடவுள் சப்பாத்தி ரூபத்தில் காட்சியளித்தார்.

   நீக்கு
 12. கடவுளைப் பார்க்காவிட்டாலும், பார்த்தாலும் அறிவதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். என்னை அஸ்ஸமில் சந்தித்த ஒருவர் இரண்டு நாட்கள் இரயிலில் பயனம் செய்து ஜான்சி வந்து சேர்ந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு இரயில் பயன்ம் தொடர வந்தபோது அதே நபர் என்னை சந்தித்தார் என்றால் அவர் கடவுளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்

  பதிலளிநீக்கு