சனி, 18 ஆகஸ்ட், 2012

கீழ்ப்பாக்கத்துக்கு இன்னொரு வழி!

"All roads lead to Rome" அப்படீன்னு இங்கிலீசுல சொல்வாங்க. யாரு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நான் சொல்றேன் கேட்டுக்குங்க. ஆன்மீகத்தில எல்லா வழிகளும் கீழ்ப்பாக்கத்திற்கே செல்லுகின்றன.

நேற்று ஒரு வழி பார்த்தோம். இன்று இன்னொரு வழி பார்ப்போம். பிரபஞ்சம் கொஞ்சம் பெரிய சமாசாரம். அதை நெனச்சா தலை சுத்துதுன்னு ரெண்டு மூணு பேர் சொல்லீட்டாங்க. அதனால அதை உட்டுடுவோம். நம்மளுக்கு சௌகரியமா, நம்மளை எடுத்துக் கொள்வோம். நண்பர் GMB சொல்லியிருக்காரு. பிரபஞ்சத்தை உட்டுடுங்கோ, சாமி, நான் யாருன்னு பாருங்கோ, அப்படீன்னு சொல்லீட்டாரு. அதைப் பார்க்கலாமா?

ரொம்ப எளிமையா சொல்லிக்கொடுக்கிறேனுங்க. ஏன்னா, இது ரொம்ப, ரொம்ப பெரிய விசயம். பகவத்கீதை முழுவதும் இதைப் பத்தித்தான் பேசியிருக்காரு, நம்ம கிருஷ்ணன். ரமண மகரிஷி "நான் யார்" அப்டீன்னு கேட்டே அவர் போதனைகளை எல்லாம் முடிச்சிட்டாரு. இதையெல்லாம் நம்ம ஆன்மீகவாதிகள் வருடக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் யார்? ரொம்ப சாதாரணமான கேள்வி. நான் "கந்தசாமி" அப்படீன்னு சொன்னா, உடனே, அது உன் பெயர், நீ யார்னு சொல்லு, அப்படீம்பாங்க.

உங்களுக்குத் தெரிகின்ற இந்த உடல் மற்றும் உள்ளே இருக்கின்ற சதை, ரத்தம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, இதெல்லாம் சேர்ந்தவன்தான் நான்.

இப்படி சொன்னா உடனே, நீ எப்பொழுது "என் உடம்பு" என்று சொல்கிறாயோ, அப்போதே நீ வேறு, உன் உடம்பு வேறு என்றாகிறதல்லவா, அகையால் நீ யாரென்று சொல்லு, என்பார்கள்.

ஐயா, இந்த உடம்பில்தான் என் உயிர், மனசு, மண்ணாங்கட்டி (நான் களிமண்ணைப் பற்றி எழுதியதை மறந்து விடாதீர்கள்) எல்லாம் இருக்கிறது, இது எல்லாம் மொத்தமா சேர்ந்ததுதான் நான், அப்படீன்னு சொன்னீங்கன்னு வச்சுக்கோங்க. அதுக்கு என்ன பதில் வரும் தெரியுமா, உனக்கு இன்னும் ஆன்மீக ஞானம் பத்தாது, நல்லா ஒரு குருகிட்ட உபதேசம் வாங்கிட்டு வா, அப்புறம் இதைப் பற்றிப் பேசலாம் என்பார்கள்.

எல்லாம் முடிஞ்சு கடைசீல "ஆத்மா"தான் "நான்" என்று முடிப்பார்கள். சரீங்க, ஆத்மான்னா என்னங்கன்னு கேட்டுட்டாப்போச்சு. பகவத்கீதை முழுவதையும் விளக்கிவிட்டுத்தான் ஓய்வாங்க. அதுக்குள்ள நம்ம ஆயுசும் முடிஞ்சு போகும்.

ஆகவே மக்களே, 'நான் யார்" அப்படீன்னு அலையறதை உட்டுட்டு அவங்கவங்க தொழில், பொண்டாட்டி, புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சீங்கன்னா போதும். கீதை அதைத்தான் கடைசியா சொல்லுது. மடையா, அர்ஜுனா, போயி சண்டை போடற வேலையைக் கவனி, மிச்சத்தை எல்லாம் நான் பாத்துக்கறேன், அப்படீன்னுதான் கிருஷணன் கடைசியா சொல்லி முடிக்கிறான்.

களிமண்ணுல ஏறுச்சுங்களா? ஆகவே கீழ்ப்பாக்கம் போகாதீங்க, ஊட்லயே இருங்க.

16 கருத்துகள்:

 1. "ரொம்பக் கன்ஃபியூஸ் ஆயடாம உன் வேலையைப் பார்த்துக்கினே இரு" என்பதைத்தான் சுருக்கமாகக் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" ன்னு சொல்லியிருக்காருங்கறீங்களா ...! :)))

  பதிலளிநீக்கு
 2. இத்தனை எளிய நடையில், மனதில் ஆழப்பதியும் வகையில் எழுதுவது எளிதல்ல. அது தங்களால் முடிகிறது.

  கீதையை மேற்கோள் காட்டாமலே, ‘குடும்பத்தைக் கவனி’ என்று தாங்கள் சொல்லியிருந்தாலும் அது ஏற்கத்தக்கதே.

  பாராட்டுகள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கீழ்ப்பாக்கம் போகாதீங்க, ஊட்லயே இருங்க.

  எளிய கீதை ! அளித்தவர் கந்தசாமி ஐயா..

  பதிலளிநீக்கு
 4. புரியாமல் இருந்ததை புரியவைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

 5. /ஆகவே மக்களே, 'நான் யார்" அப்படீன்னு அலையறதை உட்டுட்டு அவங்கவங்க தொழில், பொண்டாட்டி, புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சீங்கன்னா போதும். கீதை அதைத்தான் கடைசியா சொல்லுது. மடையா, அர்ஜுனா, போயி சண்டை போடற வேலையைக் கவனி, மிச்சத்தை எல்லாம் நான் பாத்துக்கறேன், அப்படீன்னுதான் கிருஷணன் கடைசியா சொல்லி முடிக்கிறான்./
  நான் யார்ன்னு நல்லாவே தெரிஞ்சுகிட்டேன் சாமி ! ஆளை விடுங்க.!

  பதிலளிநீக்கு
 6. கலக்குறீங்க சார்... உங்கள் பாணியில் கருத்து அருமை... நன்றி... (TM 3)

  பதிலளிநீக்கு
 7. Puriyaamal irunthathai puriyaamal kuzhaipi vittathirkku nandri.

  பதிலளிநீக்கு
 8. எளிமையானவிளக்கம்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
  http://thalirssb.blogspot.in/2012/08/180.html
  பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 9. ஆன்மிகம் என்ற ஒரு வார்த்தையே அர்த்தமற்ற ஒன்று என்று சொன்னால், நிறைய பேர்கள் வழித்துக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். ஆனால் எவரும் அதனை என்ன வென்று சொல்ல திராணி அற்றவர்களாகவே இருப்பார்.மிக எளிதாக அனைவருக்கும் விளக்கிய தங்களின் பெரும் தன்மை மிக்க நன்று.

  பதிலளிநீக்கு
 10. ஐயா, என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையை கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டீர்கள்!! தன்னுடைய மதிநுட்பத்தால் இந்த உலகையே மிரள வைத்தவர் ஐன்ஸ்டீன், ஆனால் அவரையே மிரள வைத்த ஒன்று ஸ்ரீமத் பகவத் கீதை.

  \\உங்களுக்குத் தெரிகின்ற இந்த உடல் மற்றும் உள்ளே இருக்கின்ற சதை, ரத்தம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, இதெல்லாம் சேர்ந்தவன்தான் நான்.\\

  இங்கதான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க. இப்போ நான் சொல்வதை நானாகச் சொல்லவில்லை, விஞ்ஞானம் சொல்கிறது. நமது உடல் பிறந்ததிலிருந்து சாகும் வரை ஒன்றேதானா? மாற்றமேயில்லையா? நாம் உடலுக்கு தினமும் உணவு, நீர்,காற்று உள்ளே போகிறது [Input] , அவற்றிலிருந்து, தினமும் பல புதிய இரசாயனங்கள் நம் உடலில் கிரகிக்கப் படுகின்றன, நம் உடலில் உள்ள இரசாயனங்கள் சில கழிவுகளாக [மலம் சிறுநீர் வியர்வை ], இந்த வகையில் நமது உடலில் உள்ள தாதுக்கள் சிறிது சிறிதாக மாற்றப் படுகின்றன, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நூறு சதம் மாறிப் போயிருக்கும், அது எவ்வளவு காலாம்? ஏழு வருடங்கள். அப்படியானால் உங்கள் உடலில் உள்ள தாதுக்கள் பத்து முறை இதுவரை 100% மாற்றப் பட்டிருக்கிறது, இன்னமும் மாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல \\சதை, ரத்தம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி\\ எபதுதான் டாக்டர் கந்தசாமி என்றால் பத்து முறை நீங்கள் வேறு யாரோவாக ஆகியிருக்க வேண்டும், ஆனாலும் நீங்கள் நீங்களாகத்தானே இருக்கிறீர்கள்? இன்றைக்கும் உங்கள் உறவினர்கள் உங்களை டாக்டர் கந்தசாமியாகத்தானே பார்க்கிறார்கள்? நீங்கள் இருபது வருடமாக போட்ட இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்குத் தானே வந்தது? இத்தனை முறையும் உடல் மாறிய பின்னரும், மாறாத அந்த டாக்டர் கந்தசாமி என்று அழைக்கப் பட்டவர் யார்? அவர் வெறும் இரத்தமும், சதையும், வீதிப் புழுதியும், மூத்திரமும், மலமும் தானா?

  பதிலளிநீக்கு
 11. நான் யார்" அப்படீன்னு அலையறதை உட்டுட்டு அவங்கவங்க தொழில், பொண்டாட்டி, புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சீங்கன்னா போதும். கீதை அதைத்தான் கடைசியா சொல்லுது. மடையா, அர்ஜுனா, போயி சண்டை போடற வேலையைக் கவனி, மிச்சத்தை எல்லாம் நான் பாத்துக்கறேன், அப்படீன்னுதான் கிருஷணன் கடைசியா சொல்லி முடிக்கிறான்.good words from expireance we accept your words

  பதிலளிநீக்கு