என் பாட்டி ஒரு கதை சொல்லும். ஒருத்தன் சாப்பிட்டுட்டு இருந்தானாம். அப்போது வீதியில் ஒருத்தன் "யானை வாங்கலியோ யானை, யானை கடனுக்கு விற்கிறோம்" அப்படீன்னு கூவிட்டுப் போனான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, வாயைத்திறந்து பேச முடியவில்லை. இடது கையினால் ஐந்து என்று ஜாடை காட்டினானாம். ஆகவே மக்கள் கடனில் கிடைக்கிறது என்றால் யானையைக்கூட ஐந்து வாங்க விரும்புகிறார்கள். கடனும் இலவசமும் ஒன்றுதான் என்று என்னுடைய போன பதிவைப் படித்தவர்களும்முத் தெரியும்.
ஏன் ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் இலவசங்களை அறிவிக்கிறார்கள் தெரியுமா? ரஷ்யப் புரட்சி பற்ற அறிந்தவர்களுக்குத் தெரியும். அந்தப் புரட்சி சமுதாயத்தின் அடித்தள மக்கள் பட்டினியினால் அவதிப்பட்டதால் வந்தது. இதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அடித்தள மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க தேவையான இலவசங்களைக் கொடுத்து அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களும் நாம் மயங்கிக்கிடக்கிறோம் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் காசிலிருந்தா இந்த இலவசங்களைத் தருகிறார்கள்? எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதானே நடக்கிறது. அப்படி வரிப்பணம் போதாவிட்டால் கடன் வாங்குகிறார்கள். எங்கிருந்து வாங்குகிறார்கள்? இதற்காகத்தானே உலக வங்கி போன்ற நிறுவனங்க்ள இருக்கின்றன.
சரி, கடன் வாங்கினால் எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்கிறீர்களா? சுத்த விவரங்கெட்ட ஆளா இருக்கிறீங்களே? என்னுடைய பதிவுகள்ப் படிப்பதில்லையா? இப்பத்தானே ஒரு பதிவு போட்டேன். கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்று. இந்தக் கொள்கைக்கு அரசுதான் வழிகாட்டி. இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.
இலவசங்களுக்கு வருவோம். சாப்பாட்டுக்கு இலவச அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க என்ன செய்வது? அதற்குத்தான் இலவச டி.வி. யும் இலவச மின்சாரமும். இதெல்லாம் சரி, அப்பப்ப "கிக்" வேண்டுமே, அதற்கென்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் வேலை வாய்ப்புத்திட்டம். ஒரு தாளைக்குப் போய் புளிய மரத்தடியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து கொண்டு ஒரு தூக்கம் போட்டால், தூங்கி எழுந்தவுடன் ஒரு குவார்ட்டருக்குத் தேவையான காசு கொடுக்கப்படும்.
வெயில் கடுமையாக இருக்கிறதா? இதோ ஃபேன். ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி கை வலிக்கிறதா? இதோ கிரைண்டர். குழம்புக்கு ஆட்டவேண்டுமா? இதோ மிக்சி. என்ன இல்லை நம் தாய்த்திரு நாட்டில்? சரி, நம்ம தோஸ்த் கூடப் பேசணுமே? என்ன பண்றதுன்னு யோசனையா? இதோ செல் போன் வந்து கொண்டே இருக்கிறது.
எல்லாம் சரி, தினசரி வெளிக்கி வருதே, அதுக்கு என்ன பண்றதுன்னு கேக்கப்படாது. இந்தியாவில பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் இதுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். ஊரு நாத்தமடிக்குதே? அதப்பத்தி நீ ஏனய்யா கவலைப் படறே? உன் காரியம் ஆச்சா? உன்வேலையைப் பார்த்தமான்னு இரு.
///ஊரு நாத்தமடிக்குதே? அதப்பத்தி நீ ஏனய்யா கவலைப் படறே? உன் காரியம் ஆச்சா? உன்வேலையைப் பார்த்தமான்னு இரு.///
பதிலளிநீக்குஇதை நிருத்தினாலே இந்தியா வல்லரசு ஆகிவிடும். உண்மை!
சும்மா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று படிச்சு விட்டு, கம்மாம் கரையோரம் சொம்டோட உக்காந்தா???
கரை இருந்தா தானே சொம்பை தூக்கிட்டு போறதுக்கு? இலவசத்தை நிறுத்தியே ஆகனும்
பதிலளிநீக்குஇலவசமாகக் கொடுத்தால் நம் மக்கள் விஷத்தைக் கூட வாங்கிக்கொள்வார்கள் என்கிற ‘உண்மையை’ புரிந்துகொண்ட நம் அரசியல்வாதிகள் இந்த மாதிரி இலவசங்களை, நம்முடைய வரிப்பணத்தை உபயோகப்படுத்தி வாக்குகளை பொறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள்தான் காப்பாற்றவேண்டும் இந்த நாட்டை!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு\\ இலவசம்னு சொல்லக்கூடாதாம், "விலையில்லா" என்று சொல்லணுமாம். \\ எங்க நிறுவனத்தில் ஒரு வெளிநாட்டு இயந்திரத்தை வாங்கினோம், அதை செட் செய்ய ஒரு வெள்ளைக்கார துறை வந்தார், கொஞ்ச நாள் கழித்து வந்த வேலை முடிந்து நாடு திரும்பும் முன்னர் எங்க எல்லோருக்கும் பார்டி கொடுக்க நினைத்தார், எல்லோரும் நாளை வந்திடுங்க, "Dinner for All absolutely Free" என்று தன் அறையின் கதவில் எழுதி வைத்தார். உடனே நம்மாளுங்க எல்லோருக்கும் வந்துது பாருங்க கோபம், எங்களை இனாமா வாங்கித் தின்றவனுங்கன்னு நினைசிட்டானா...... ஆய்..ஊய் ..... நாங்க யாரும் வர்ப்போவதில்லைன்னு எல்லோரும் குதிக்க ஆரம்பிச்சானுங்க. அப்புறம் அவரு ஜனகராஜ் மாதிரி எங்க ஊர்ல நாங்க இப்படித்தான் சொல்லுவோம்னு விளக்கிய பின்னர் எல்லா பயல்களும் போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்தானுங்க. உடல் ஊனமுற்றோர்-மாற்று திறனாளிகள், முதியவர்கள்-மூத்த குடிமக்கள், ஒம்போதுகள்-திருநங்கையர்........... இதே மாதிரி இலவசம்-விலையில்லா இதில ஏதோ சூட்சுமம் இருக்கு ஆனா என்னன்னு தான் புரியலை.
\\ஏன் ஒவ்வொரு அரசும் பதவி ஏற்றவுடன் இலவசங்களை அறிவிக்கிறார்கள் தெரியுமா? \\ தெனாலிராமன் குதிரையை வளர்க்கச் சொல்லி குடுத்தா, ஒரு ரூமில் அதை அடைச்சு ஒரு ஜன்னல் வழியே தினமும் கைப்பிடி புல்லு மட்டும் குடுத்து வளர்த்தாராமே, அது மாதிரி நம்மை வைத்திருக்கிறார்கள் சார், இதை தாத்தா ரொம்ப அருமையா செய்து கிட்டு வந்தார், அது தொடருது போல. உசிரும் போகக் கூடாது, சம்பாதித்து கவுரவமாக வாழ்வும் முடியாது.
பதிலளிநீக்கு\\அரசியல்வாதிகள் தங்கள் சொந்தக் காசிலிருந்தா இந்த இலவசங்களைத் தருகிறார்கள்? எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்துதானே நடக்கிறது. \\ வரியெல்லாம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே பத்தாது. சாராயத்தை வித்து குடிக்கிறவனை சாகடித்து, அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி அந்த காசிலிருந்து குடுக்கிறார்கள்.
பதிலளிநீக்கு\\இலவச டி.வி. யும் இலவச மின்சாரமும்.\\
பதிலளிநீக்கு\\இதோ ஃபேன். \\
\\இதோ கிரைண்டர். \\
\\ இதோ மிக்சி.\\
எல்லாம் சரி, இதையெல்லாம் குடுத்துட்டே கரண்டை புடுங்கி வச்சுட்டாங்களே, இதை வச்சுகிட்டு என்ன பண்றது? அட்டுக் கல்தான் பெஸ்ட்.
\\கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.\\அதுதான் நமகில்லைன்னு சொல்லிட்டீங்களே சார், நூறுகோடிக்கு மேல போனாதானே அது பொருந்தும்!!
பதிலளிநீக்குஇலவசமாக அள்ளிக் கொடுத்துவிட்டு, அதற்கான செலவுகளை ஈடுகட்ட டாஸ்மாக்கையும் வைத்திருக்கிறார்கள். கொடுமை.
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் yaarukku ?
பதிலளிநீக்குபோட்டுத் தாக்குங்க.... அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் காதில் விழுந்து நல்லது நடந்தா சரி.
பதிலளிநீக்குஇலவசங்களால் மக்கள் தங்கள் சுயத்தை இழந்துவிட்டார்கள்.
பதிலளிநீக்குநல்ல அலசல் சார்... நன்றி... (TM 3)
பதிலளிநீக்குவேகமான அலைகள்! இலவசங்களை இனி யாராவது நிறுத்த முடியுமா?
பதிலளிநீக்குஇலவசங்கள் தப்புத்தான் ஏழைகளுக்கு கொடுத்தால்!
பதிலளிநீக்குவேதாந்தா என்று பெயர் வைத்துக்கொண்டால் இலவசம் டபுள் ஓகே!
இலவசத்தை நிறுத்துனா ஓட்டு வங்கி திவால்!!!!
பதிலளிநீக்குஇப்படியே சென்னை குடிசை வாழ் மக்கள் தங்கள் காலத்தை வேலை வெட்டி எதுவும் செய்யாமல் இலவசங்களைக் கொண்டு கழித்துக் கொண்டிருக்கையில் ஏன் சிவகாசியில் மக்கள் பட்டாசு தொழிற்சாலையில் உயிர்விடுகிறார்கள் என்பது எனக்குள்
பதிலளிநீக்குஆறாத கேள்வியாக இருக்கிறது
இப்படி ஏமாற்றும் அரசை உடனடியாக நீக்கவேண்டும்.
நீக்கு