வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் விவசாயத்தின் எதிர்காலம்



இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


விவசாயப் பதிவுகளுக்கு வாசகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் சில பதிவுலக நண்பர்கள் என்னுடைய அனுபவத்தை ஏன் பதிவிடக்கூடாது என்று பின்னூட்டமிட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

மேலே கொடுத்துள்ள ஒரு பின்னூட்டத்தின் வாசகத்தைக் கொடுத்திருக்கிறேன். இதில் இயற்கை விவசாயத்தின் பெருமையை விளக்கியுள்ளார்கள்.

நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு  தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.  நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.

இன்றைய விவசாயத்தின் நிலை பற்றி சில முக்கியமான பிரச்சினைகளை மட்டும் கூறுகிறேன்.

1. விவசாயப் பொருள்களின் சந்தை விலைக்கும் விவசாயிக்கு கிடைக்கும் விலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. சாதாரண தேங்காய் கடையில் 15 ரூபாய் விற்கிறது. தென்னந்தோப்பில் நான்கு ரூபாய்க்கு மேல் கேட்பாரில்லை. இளனி ரோட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோப்புக்காரனுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. இதே போல்தான் அனைத்து விவசாயப் பொருள்களும் விற்கின்றன.

உழவர் சந்தை என்று ஒன்று இருக்கிறது. இங்கு வியாபாரிகள்தான் பெரும் அளவில் விவசாயிகள் என்ற போர்வையில் கடை போட்டு இருக்கிறார்கள். அரை ஏக்கர் பொட்டல் காடு இருந்தால் அவனுக்கு விவசாயி என்ற அடையாள அட்டை கிடைத்து விடும். நிஜ விவசாயி அவனுடன் போட்டி போட முடியாது.

இந்த நிலையை மாறினால் ஒழிய விவசாயம் வளராது.

2. விவசாயத்திற்கு நிலமும் நீரும்தான் பிரதானம். நிலம் இருக்கிறது. நீரைத்தான் காணவில்லை. பருவ மழைகள் பொய்த்துப்போகின்றன. அதனால் நிலத்தடி நீர் அருகிப் போய் விடுகிறது. ஆதே காரணத்தினால் ஆற்றுப் பாசனமும் குருகிப் போகிறது. என்னதான் விவசாயி கஷ்டப்பட்டாலும் அவனால் தன் குடும்பத்தையே காப்பாற்ற முடிவதில்லை.

3.விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இங்கு அவற்றை எல்லாம் ஆராய்ந்து தீர்வு காண முடியாது. இந்தப் பிரச்சினைக்கு அரசுதான் வழிவகை செய்யவேண்டும்.

4.விவசாயிகளுக்கு ஒரு ஆரோக்கியமான கூட்டு அமைப்பு கிடையாது. அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. அதனால் அவர்கள் அரசிடம் இருந்து எந்த சலுகையையும் பெற முடிவதில்லை. விவசாயத்திற்கு வேண்டிய எந்த கொள்கையையும் முன் வைக்க முடிவதில்லை.

5. விவசாயம் வளர ஆக்கபூர்வமான கொள்கைகள் எதையும் அரசினால் சரியாக நடைமுறைப் படுத்த முடிவதில்லை. அதிகாரிகள் சரியில்லை. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. நன்மைகள் விவசாயிக்கு போய்ச் சேருவதில்லை.

அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்னொரு நண்பரும் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.

24 கருத்துகள்:

  1. விவசாயம் இல்லாத நாடு உருப்பட்டதா சரித்திரம் இல்லை. காசு மட்டும் வச்சுக்கிட்டு தின்னும் பொருட்களுக்கு அடுத்த நாடுகளை நம்பியே எத்தனை நாள் இருக்கமுடியும்?

    இங்கே எங்க நாட்டில் விவசாயத்துக்கும் விவசாயிக்கும்தான் முன்னுரிமை. விவசாயிகளின் வீடுகள் எல்லாம் ப்ரமாண்டமா இருக்கும்.

    மெஷீனால் உழுதுண்டு வாழ்பவர்கள்!!!

    பதிலளிநீக்கு
  2. நதிகள் இணைப்பு திட்டம் இந்த மாதிரிப் பிரச்னைகளுக்கு உதவலாம். அதிலும் ஏதோ மைனஸ் பாயிண்ட்ஸ் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கர்நாடகமும் ஆந்திராவும் சீனாவும் பாகிஸ்தானும் போல நடந்து கொள்ளும்போது தமிழக மக்கள் என்னதான் செய்வார்கள்? நம் நாட்டில் மட்டும்தான் அரசியல்வாதிகள் நாட்டின் முன்னேற்றத்தை தொலைநோக்குப் பார்வையில் பார்ப்பதைத் கவனமாகத் தவிர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா. தங்களுடைய பதிவுகளை கடந்த சில வாரங்களாக படித்து வருகிறேன்.

    இன்றைய பதிவில், என்னுடைய விவசாயம் பற்றிய பதிவுக்கு இணைப்பு கொடுத்ததிற்கு மிக்க நன்றி.

    - விருச்சிகன்

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. அரசு எப்போது விழித்தெழுந்து விவசாயத்தைக் கரை சேர்க்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

      நீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பின்னூட்டத்தை நீக்கவேண்டியதாகிவிட்டது. காரணம் ஜாதியைப் பற்றிய குறிப்பு இருந்தது.

      நீக்கு
  7. நல்ல கருத்துக்கள் ஐயா... நன்றி…

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் எண் : 1033)

    (த.ம. 4)

    பதிலளிநீக்கு
  8. என் தோழி ஒருவரின் அக்காதான் வீட்டு ஆம்பளையாட்டம் எல்லா விவசாய வேலைகளையும் வயலில் இறங்கி இழுத்துப்போட்டுச் செய்வாங்க.

    அவுங்க ப்ராமண சமுதாயம் சேர்ந்தவர்கள்தான். நூத்துலே ஒருத்தர்ன்னு சொல்லலாமா!!!!

    சின்ன ஊர். சின்ன அளவில் சொந்த நிலம்.

    பதிலளிநீக்கு
  9. சாமி சார்,

    இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவில்லை, இணையத்தில் விவசாயம் பற்றிப்பேசுவதால் பயனில்லை என்கிறீர்கள் ,அப்போ மற்றது பேசினால் மட்டும் பயன் கூறையை பிச்சிக்கிட்டு கொட்டுமா?

    விவசாயத்துக்கு உதவாத விவசாய பல்கலைகளும், விவசாய துறையும் எதுக்கு , தெண்ட சம்பளம் வாங்கவா, அவற்றையும் மூடி விடலாம். ஆண்டுக்கு பல கோடி மிச்சம் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் விவசாயம் பற்றிப் பேசினால் பயனில்லை என்று இந்தப் பதிவில் எங்கு சொல்லியிருக்கிறேன்? நான் சொல்லாததை வைத்து ஒரு பின்னூட்டம் போடுவது நாகரிகமல்ல.

      விவசாயத்துக்கு பல்கலைக்கழகங்கள் உதவுவதைப்பற்றியும் நான் எங்கும் குறிப்பிடவேயில்லையே. அவைகளை ஏன் என் பதிவில் பின்னூட்டம் மூலமாக வீண் வம்புக்கு இழுக்கிறீர்கள்?

      பின்னூட்டம் திசை மாறிப் பாய்கிறது, வவ்வால் அவர்களே.

      நீக்கு
  10. இணையத்தில் விவசாயத்தைப்பற்றி பேசினால்.. அதுவும் ஆரோக்கியமான விஷயங்களுள் ஓன்று
    இப்போது தேவை, விவசாயத்தில் உள்ள குறைகளை பேசுவது அல்ல. (அது ஏற்கனவே பேசியாகிவிட்டது.) அதன் குறைகளை போக்குவதற்கான ஆரோக்கியமான, எளிமையான வழிகளும், அதை செயல்படுத்துவதற்கு தயாரான உள்ளங்களும்தான். நன்றி!

    பதிலளிநீக்கு
  11. உண்மையான கருத்துக்கள்! கிராமங்களில் விவசாயம் படுத்துவிட்டது! விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருகிறது! எப்பொது அரசு விழித்துக் கொள்ளும்?

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  12. சாமி சார்,

    //நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//

    இது என்ன சார், இயற்கை விவசாயத்தினை பற்றிய விவாதத்தால் பலனில்லை என்பதுவும் விவசாயம் பற்றிய விவாதத்தால் பலனில்லை என்பதும் ஒன்று தான்.

    அப்போ இரசாயன உரவிவசாயம் பற்றி மட்டுமே பேசுவேன் என்கிறீர்களா? அது தேவையே இல்லை.

    அப்புறம் அரசாலும் அதிகாரிகளாலும் பலனில்லை என்கிறீர்கள், விவசாயத்துக்கு தேவையான அரசு எந்திரத்தின் பகுதிகளே விவசாய பல்கலை, மற்றும் விவசாய துறை, விவசாயத்துறையில் வேலை செய்பவர்கள் என்ன பல் மருத்துவர்களா?

    நீங்க செலெக்டிவ்வாக சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு அதை வைத்தே பேசுவேன் என்றால் ... ஒன்றும் சொல்வதற்கில்லை,வேற யாராவது கிளிப்பிள்ளைப்போல சொன்னதை திரும்ப சொல்லிப்பேசுவார்கள் அவர்களோடு பேசிக்கொள்ளுங்கள், நான் வருகிறேன்,நன்றி வணக்கம்!

    பதிலளிநீக்கு
  13. //பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை.//

    வவ்வால் சார், நான் எழுதியுள்ள வார்த்தைகளை சரியாகப் படியுங்கள்.

    //இயற்கை விவசாயத்தினை பற்றிய விவாதத்தால் பலனில்லை//

    இது நீங்கள் என்னுடைய கூற்றைத் திரித்துப் போட்டது. இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

    நான் மேலும் எழுதியதாவது. //நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.// பதிவுலத்தில் இந்த விவாதம் பயனற்றது என்றுதான் கூறியிருக்கிறேனே ஒழிய விவாதமே பயனற்றது என்று கூறவில்லை.

    கருத்தை சரியாகப் படித்து பின்னூட்டமிடுங்கள். திரிபு வேலைகள் வேண்டாம். அது ஆரோக்கியமான விவாதம் அல்ல.

    உங்களுக்கு என் எழுத்து பிடிக்கவில்லையானால், அல்லது உங்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருக்குமானால், அதற்காக வீணான விவாதங்களும் திரிபு விவாதங்களும் செய்யக் கூடாது.

    பதிலளிநீக்கு
  14. வவ்வால் சொல்லியது:

    சாமி சார்,

    //நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து. இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை//

    இதனை ஒரு வரியில் சொல்வதானால் இயற்கை விவசாயம் பற்றி இணையத்தில்/பதிவுலகில் பேசினால் பயனில்லை என்று பொருள் வருகிறது, எனது தமிழ் அறிவு அவ்வளவு தான்.

    மேற்கொண்டு யாரேனும் அதன் பொருளை விளக்கினால் தன்யன் ஆவேன்.

    உங்கள் எழுத்து பிடிக்காமல் திரிபு என்று ஏதேதோ பெரிசா சொல்லுறிங்க, இதுல என்ன திரிபு கண்டிங்களோ? உங்கள் துறை சார்ந்த அறிவு அனைவருக்கும் பயன்ப்பட வேண்டும் என நினைத்தேன், உங்களுக்கு இணையத்தில் கருத்தினை முன் வைப்பதிலேயே உடன் பாடு இல்லை என்பது போல நினைக்கிறீங்க(நான் தப்பா திரித்துவிட்டேன்னு இதையும் சொல்லுங்க)

    நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று சொல்கிறீர்கள் ரைட்டு,பான்கி மூன் கிட்டே சொல்லி UNOமூலம் FAO வில் ஒரு மேடை தயார் செய்துவிடலாம்.

    நீங்க என்ன நினைத்து என்ன சொல்றிங்கன்னு எனக்கு புரியாத அளவுக்கு இருக்கு , எனவே மேற்கொண்டு நான் எதுவும் சொல்லவில்லை.

    அப்புறம் பதிவுலகில நல்ல கருத்துமிக்க பதிவுகள் வர வேண்டும்னு ஊருக்கு அறிவுரை சொல்வது மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொண்டேன்.

    நன்றி,வணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பின்னூட்டத்தை போடவேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பதிவுலகில் எப்படிப்பட்ட பிரஹஸ்பதிகளும் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்றுதான் இதை கூகுள் மெயிலிலிருந்து எடுத்துப் போட்டேன்.

      வவ்வால் அவர்களே, உங்களுடைய கருத்துகளுக்கு என்னுடைய கருத்துக்கள் ஒத்துப்போவதில்லை என்பது தெளிவாகத்தெரிகிறது.

      //நீங்கள் நிஜ உலகில் மேடையில் தான் பேசுவேன் என்று சொல்கிறீர்கள் ரைட்டு,பான்கி மூன் கிட்டே சொல்லி UNOமூலம் FAO வில் ஒரு மேடை தயார் செய்துவிடலாம்.//

      நீங்கள் அவ்வளவு சிரமப்பட்டு FAO வில் மேடை ஏற்பாடு பண்ண வேண்டாம்.

      இந்த நக்கல் வரிகள் உங்கள் கீழ்த்தரமான மன நிலையைக் காட்டுகிறது. உங்கள் பின்னூட்டத்திலிருந்து உங்களுடைய மன நிலையில் ஏதோ கோளாறு இருக்கிறதென்று எனக்குப் படுகிறது. இல்லையென்றால் ஒரு ஆரோக்யமான விவாதத்தை குழாயடி சண்டை அளவிற்கு கொண்டு சென்றிருக்க மாட்டீர்கள்.

      நீக்கு
    2. உங்களுடைய பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்ப்டும் என்று தெரிவிக்கிறேன்.

      நீக்கு
  15. //நான் இயற்கை விவசாயத்திற்கு எதிரி அல்ல. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பது என் கருத்து.//

    அப்படியெனில் நடைமுறைக்கு ஒத்து வருவது எது என்று தாங்கள் தெரியப்படுத்தவில்லையே..

    //இதைப் பற்றி பலர் விவாதத்திற்கு தயாராக இருப்பார்கள். பதிவுலகில் அந்த விவாதத்தினால் யாருக்கும் பயனில்லை. நிஜ உலகில் அத்தகைய விவாத மேடைகள் அமையுமானால் அவசியம் பங்கேற்பேன்.//

    பதிவுலகை தாண்டிய உலகம்தான் நிஜம் என்றும், பதிவுலகம் பொய்யென்றும் தாங்கள் கூறுகிறீர்கள். அப்படியெனில் பொய்யான இந்த பதிவுலகில், ஏன் ஆரோக்கியமான விஷயத்தை பதிவிட்டு வீனடித்தீர்கள்? பதிவுலகம் பொய்யான உலகமாக தெரியவில்லையே அய்யா. அப்படி பொய்யானதாக இல்லாததால்தான் இந்த பதிவையே நீங்கள் இட்டுள்ளீர்கள்.

    தங்கள் கூற்றுப்படி, பதிவுலகில் விவாதம் பயனில்லையென்றால்.. அதே பதிவுலகில் இட்ட இந்த பதிவும் பயனில்லாத ஒன்றாகத்தானே இருக்கும்.

    என்னைப்பொறுத்தவரை, பதிவுலகில் இட்டுள்ள இந்த பதிவும் பயனுள்ள ஒன்றாகத்தான் பார்க்கிறேன். மேலும் அதை ஒட்டிய பதிவுலக விவாதங்களும் பயனுள்ள ஒன்றாகத்தான் இருக்கும்.

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, வே.சுப்பிரமணியம் அவர்களே.

      உங்கள் கருத்துகள் முக்கியமானவை. ஒரு பதிவின் ஆரோக்யமான விவாதத்திற்கு வழி வகுக்கும் பாணியில் இருக்கின்றன. இதற்கான பதில்களை ஒரு புது பதிவில் போடுகிறேன். விவாதத்தை ( விவாதம் என்றால் சண்டை என்று பலர் கருதுகிறார்கள் - நாம் தொடரப்போவது அது அல்ல) தொடருவோம். புதிய கருத்துக்கள் உருவானால் நாட்டுக்கு நல்லதுதானே.

      நீக்கு