இந்த வசவை பலரும் தங்கள் இளம் வயதில் கேட்டு வருந்தியிருக்கலாம். நீங்கள் அப்படி வருந்தியிருக்கத் தேவையில்லை. ஏனென்றால் களிமண்ணும் மூளையும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.
மூளை என்ன செய்கிறது? தான் கேட்கும் விஷயங்களை எல்லாம் தன்னுள் வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது கொடுக்கிறது. அவ்வளவுதானே. களிமண் எவ்வாறு இந்த வேலையைச் செய்கிறது என்று பார்க்கலாமா?
மண் என்பது பாறைகள் சிதைந்து உருவானதாகும். இதில் பல அளவிலான துகள்கள் இருக்கின்றன. அளவில் 0.002 மி.மீ. க்கு குறைவான துகள்களையே களிமண் துகள்கள் என்கிறோம். இதன் நுண்ணிய அளவினால் இது சில சிறப்பான குணங்களைக் கொண்டிருக்கிறது.
இதன் மேற்பரப்பில் மிக நுண்ணிய மின் காந்த சக்தி அணுக்கள் இருக்கின்றன. அந்த மின் அணுக்கள், பல வித கனிம அணுக்களை ஈர்த்து தன்னிடம் வைத்துக் கொள்கிறது. பயிர்கள் மண்ணில் வளரும்போது அவைகளுக்குத் தேவையான சத்துக்களை களிமண் தன்னிடமிருந்து கொடுக்கிறது. இந்த தன்மை களிமண்ணிடம் இல்லாதிருந்தால் நாம் விவசாயமே செய்ய முடியாது.
இயற்கை உரங்களை நிலத்தில் போடும்போது, அதிலுள்ள அங்ககப் பொருள் இந்தக் களிமண்ணுடன் சேர்ந்து ஒரு கூட்டுப் பொருளாக மாறுகிறது. இந்தக் கூட்டணி விவசாயத்திற்கு பல விதங்களில் உதவுகின்றது. விவசாயப் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து ஊட்டங்களும் இந்தக் கூட்டணியில் இருந்துதான் கிடைக்கின்றன.
இப்போது புரிகிறதா, களிமண்ணின் மகிமை. மூளை என்ன செய்கிறது? எல்லா செய்திகளையும் தன்னிடம் சேர்த்து வைத்துக்கொண்டு நாம் வேண்டும்போது கொடுக்கிறது. ஆகவே, யாராவது உங்கள் தலையில் என்ன களிமண்ணா இருக்கிறது என்று கேட்டால் பெருமையுடன் "ஆமாம்" என்று சொல்லுங்கள்.
களிமண் இல்லையென்றால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையென்றால் மனிதன் இல்லை. மனிதன் இல்லையென்றால் இந்த வலைத்தளமும் இல்லை. ஆகவே களிமண்ணின் மகத்துவத்தை மனதில் நன்றாகப் பதிந்து கொள்ளுங்கள்.
இப்படிச் சொல்கிறீர்களே, உங்கள் தலையில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்ச நாள் பொறுங்கள். மண்டையை உடைத்துப் பார்த்து விடுவோம்! நிச்சயம் களிமண்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை!

களிமண் இருந்தால் எவ்வளோ நல்லது. அது வேண்டாததையெல்லாம் சிந்திக்காமல் சும்மாக் கிடக்குமே!
பதிலளிநீக்குஆமாங்க, கண்டதைச் சிந்தித்துதான் வீணாய்ப் போகிறோம்.
நீக்கு-புன்னகை- (என்ன ஒரு ஆறுதலான செய்தி!)
பதிலளிநீக்குஆஹா, நமக்கு ஒரு தோஸ்த்!
நீக்குஅறிந்தேன்...ரசித்தேன்...
பதிலளிநீக்குவித்தியாசமாக சிந்திப்பதிலும், அதை அழகாக ஒப்பிடுவதும்... அதன் மூலம், பயன் தரும் பல தகவல்களை அப்படியே சொல்வதும்... உங்கள் விட்டால் யாரும் இல்லை...
களிமண்ணோ... வேறு மண்ணோ... பயன் தரும் மண் இருந்தால் சரி...
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி ஐயா... (TM 4)
தலையில் களிமண்ணா இருக்கிறது என்ற வசவுச்சொல் எதற்காக சொல்லப்பட்டது எனத்தெரியவில்லை. ஆனால் நேர்மறையான கருத்தைத்தரும், தங்கள் பதிவைப் படித்ததும் ஏன் அந்த சொற்றொடர் வழக்கில் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டியுள்ளது.பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குகளிமண் போட்ட இடத்தில் அது பாட்டுக்கு கிடக்கும். அது மாதிரி சில ஆசாமிகள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பார்கள். அவர்களைக் குறிக்க உபயோகப்படுத்தின வசவு அது. ஆனால் களிமண்ணில் எவ்வளவு விஷயம் இருக்கு என்பது மண்ணியல் படித்தவர்களுக்குத்தான் தெரியும்.
நீக்குபதிவு "மூளை"யில் நன்றாக பதிந்தது ஐயா..!
பதிலளிநீக்குபகிர்வினுக்கு நன்றி..!
மூளைக்குப் பதிலாக "களிமண்" இருந்திருந்தால் இன்னும் நன்றாகப் பதிந்திருக்கும், தங்கம் பழனி.(ஜோக்குக்காக)
நீக்குநீங்கள் சொன்னது என களிமண் மண்டையில் கொஞ்சம் ஏறுச்சு!
பதிலளிநீக்குநல்ல களிமண்ணாயிருந்தா பூராவும் ஏறியிருக்குமே? களிமண்ணில் ஏதோ கலப்படம் பண்ணியிருக்காங்க.
நீக்குSinthikkatha seithi, arumaiaga ezhuthiulleergal...
பதிலளிநீக்குPathivu vazalkam pool arumai
பதிலளிநீக்குஅநேகமாக காய்ந்த களிமண் கருதிச் சொல்லியிருக்கலாம்..காய்ந்த களிமண்ணில் எதையும் நட்டு வளர்க்க முடியாது..
பதிலளிநீக்குஅல்லது கரடு இல்லாத வெறும் களிமண்ணில் விதை வளர்ந்து நிற்காது என்பதால் சொல்ல இருக்கலாம்...
:))
பழனி.கந்தசாமி said...
பதிலளிநீக்குஎன் மண்ணாங்கட்டி மண்டைக்கு ஒண்ணும் புரியல.
August 15, 2012 4:52 AM
அண்ணே இந்த மண்ணாங்கட்டியப்பத்தி ஒரு பதிவு போடுங்கண்ணே.. ஜோதிஜி வலைப்பதிவிலே பார்த்தேன் :))))
சத்தியமா எனக்கு மண்டையில களிமண்ணு தான் இருக்குன்னு அடிக்கடி என் சின்ன வயசு வாத்தியார் சொல்வார்.. இப்போ மட்டும் அவர் உயிரோட இருந்த இந்த பதிவை கொண்டு போய் அவர் கிட்ட காட்டுவேன் ., அதுக்கு வாய்ப்பு குடுக்காம அவசர பட்டு அவர் புட்டாரு! :)
பதிலளிநீக்குபாருங்க, விதி எப்படி விளையாடுதுன்னு.
நீக்குகளிமண் இல்லையென்றால் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையென்றால் மனிதன் இல்லை. மனிதன் இல்லையென்றால் இந்த வலைத்தளமும் இல்லை. ஆகவே களிமண்ணின் மகத்துவத்தை மனதில் நன்றாகப் பதிந்து கொள்ளுங்கள்.//
பதிலளிநீக்குமனதில் நன்றாக பதித்து கொண்டோம்.
நன்றி.
களிமண்ணின் மகத்துவத்தை மனதில் நன்றாகப் பதிந்து கொள்ள வைத்த ஆராய்ச்சிப்பதிவுக்குப் பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஐயா!
பதிலளிநீக்குநீங்கள் மண்பற்றிப் படித்தவர் அதனால் உங்கள் ஆய்வு சரியாக இருக்கும், ஆனால் என் பாட்டா "அது களிமண் தறை கொஞ்சம் மழை கூடினாலும் பயிர் அழுகிவிடும்,எவ்வளவு கனிமம் இருந்த போதும், நீரை வடியவிடுவதில் உள்ள சிரமத்தால்,பயிர் அழுக ஏதுவாகிறது. இருவாட்டித் தறையானால் பயிருக்கு எந்தக் காலத்திலும் நலம் என்பார்" ,இருவாட்டித் தறையென்பது முக்கால் பங்கு களி கால்பங்கு குருகு மணலால் ஆனதெனக் கூறுவர்.
மண்டைக்க களி மண்ணா? என்பது எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் தேக்க நிலையில் முன்னேற்றமில்லாமல் இருப்பதால், களிமண்ணில் தாவரம் வளர சிரமப்படுவதை , கருத்தில் கொண்டு கூறினார்களோ?
ஆனாலும் உங்கள் விளக்கம் பார்த்து மகிழ்வே!!! எனக்கு தலை சற்றுப் பெரிது, அதுக்குக் குறைவேயில்லை.
யோகன்-பாரிஸ், உங்கள் கூற்று மிகவும் சரியே. முழுதும் களியாயிருக்கும் பூமியில் விவசாயம் செய்ய முடியாதுதான். கூட மணலும் வண்டலும் கலந்து இருந்தால்தான் பயிர் வளர்க்கமுடியும். இந்த பதிவு ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டதால் கொஞ்சம் லாஜிக் புறந்தள்ளப்பட்டது.
நீக்குமண்ணில் மேற்பரப்பில் மிக நுண்ணிய மின் காந்த சக்தி அணுக்கள் இருக்கின்றன என்று இப்போதான் அறிந்தேன்.
பதிலளிநீக்குஆனால் அந்த துகளோடு சிறுவயதில் விளையாடி உள்ளேன். காந்தத்தை மண்ணில் போட்டு புரட்டினால் கருமையான மண் துகள் அதில் ஒட்டிக்கொள்ளும், அதை ஒரு காகிதத்தின் மேற்பரப்பில் வைத்துகொண்டு காந்தத்தை அடிப்பகுதியில் வைத்தால் அந்த துகள் ஊசி ஊசியாக எழுந்து நிற்கும்.
அதை பேய் என்ற சொல்லிக்கொள்வோம். இப்போதுதான் உண்மையறிந்தேன். நன்றி ஐயா..
இந்த விளையாட்டை அநேகமாக நிறைய சிறுவர்கள் விளையாடியிருப்பார்கள். ஆனால் அப்போது இதன் தத்துவம் தெரிந்திருக்காது.
நீக்குஅந்த விளையாட்டை இப்போது நினைவு கூர்ந்தது உங்கள் ஞாபக சக்தியையும் சம்பவங்களை இணைத்துப் பார்க்கும் புத்திக் கூர்மையையும் காட்டுகிறது. மிகவும் பாராட்டுகிறேன்.
சிறப்பான தகவல் பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
ஆகவே என் தலையிலிருக்கும் களிமண்ணைப் பற்றி நான் இனிக் கவலை கொள்ளவேண்டாம் என்று சொல்லுங்கள்!ஹை, ஜாலி!
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு மிக்க நன்றி, அம்மா.
நீக்குநல்ல அலசல்.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்கு