புதன், 25 ஜூலை, 2012

இந்திய தேசியக் கலாச்சாரம்



ஒவ்வொரு நாட்டிற்கும், ஏன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி கலாசாரங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். பொது இடங்களிலோ, பயண ஊர்திகளிலோ, மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் வலியப் போய் பேசுவதை அநாகரிகமாக கருதுவார்கள். எங்கு சென்றாலும் தன்னுடைய முறை வரும் வரையிலும் காத்திருப்பார்கள். அடுத்தவனை முந்திக்கொண்டு செல்லமாட்டார்கள்.

தமிழர்களின் குணமே வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான். கேரளாக்கரர்களை எடுத்துக்கொண்டால் உலகின் எந்த மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன் அங்கும் ஒரு பிழைக்கும் வழியைத் தேடிக்கொள்வான். பஞ்சாபியர்கள் எதையும் துணிந்து செய்வார்கள்.

ஜப்பான்காரர்கள் உழைப்பிற்குப் பேர் போனவர்கள். எந்த சங்கடம் வந்தாலும் அதை சகித்துக் கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யும் பண்புள்ளவர்கள். ஐரோப்பியர்கள் எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்குடன் செயல்படுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமாக எதையும் செய்யாதவர்கள்.

இந்த வகையில் இந்தியர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அவர்களை எந்தக் காரியத்திலும் முழுதாக நம்ப முடியாது. கையூட்டு கொடுத்தால் எந்த இந்தியனையும் விலைக்கு வாங்கி விடலாம். இத்தகைய எண்ணங்களே அயல் நாட்டில் இந்தியர்களைப் பற்றி பேசப்படுகிறது.

இதற்குக் காரணம் அவர்களுடைய நேரடி அனுபவங்களே ஆகும். மிளகாய்த்தூள் ஏற்றுமதிக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. சில நாட்கள் ஒழுங்காக அனுப்பினார்கள். பிறகு செங்கல்லை நன்கு பொடியாக்கி மிளகாய்த் தூளுடன் கலப்படம் செய்து அனுப்பினார்கள். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.

“வின்கா ரோசியா” என்று அழைக்கப்படும் சுடுகாட்டு மல்லி எனப்படும் செடி மருந்து தயாரிப்புக்காக ஏற்றுமதி ஆர்டர் கொடுத்தார்கள். சுடுகாட்டு மல்லியுடன் பல செடிகளையும் சேர்த்து அனுப்பி அந்த ஆர்டரைப் பாழாக்கினார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் பல மூடுவிழா நடத்தியதற்குக் காரணம் நம்பிக்கையின்மைதான்.

சமீபத்தில் மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் இந்தியர்களின் அதீத உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இது மாதிரி பல நிகழ்ச்சிகள் இந்தியத் தொழில் துறையில் தினமும் நடக்கின்றன. பீகார் சுரங்கத் தொழில் மாஃபியாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. வெளிநாட்டுக்காரன் எந்த நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்ய வருவான்.

அப்துல் கலாம் கண்ட வல்லரசுக் கனவு எப்பொழுது பலிக்கப்போகிறதோ?

21 கருத்துகள்:

  1. One of the best; short and crisp. While people are euphoric with Dr. Kalam's ideology, maybe because he is a Tamil, I question his integrity: when he said Koodankulam is safe. Similarly, Dr. Shantha of Adyar Cancer Institute said that radiation does not cause cancer. i.e., it is not a carcinogen. What a farce; and hypocrites to the core!

    அதைப் படித்து விட்டு, நான் எனது மூன்று நண்பர்களுடன், ஒரு நண்பன் வீட்டில் கூடி, எல்லோரும் வேட்டியை அவுத்துப் போட்டுட்டு "குலுங்கி குலுங்கி" சிரித்தோம்!

    பதிலளிநீக்கு
  2. வல்லரசு கனவெல்லாம் வேலைத்த வேலை சார். நல்லரசு இருந்தால் போதும். எதற்கு வல்லரசாக வேண்டும்? குடிமக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து இவையெல்லாம் என்று தடையில்லாமல் அரசால் கொடுக்க முயன்றால் போதும்.
    மற்றபடி, இங்கும் (அமெரிக்காவில்) சுற்றுலா செல்லும் முன் ஒரு டிஜிட்டல் கமெரா வாங்கிவிட்டு திரும்பியவுடன் அந்த கமெராவை திருப்பி தந்து பணத்தை வாங்கிக்கொள்வது (இது மற்ற பொருட்களுக்கும் பொருந்தும்), ஆம்வே போன்ற மல்டி லெவல் மோசடி கம்பெனிகளில் இருந்து மற்றவர்களை மூளை சலவை செய்வது, அலுவலகத்தில் நீண்ட நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு , ஏழரை மணிக்கு மேல் இருந்தால் இரவு உணவு கம்பெனி கொடுக்கும் என்றால், அதுவரை நெட்டில் பொழுது போக்கிவிட்டு, இரவு உணவு அலுவலக செலவில் சாப்பிட்டுவிட்டு நடையை கட்டுவது, என்று நம் புகழை இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி செயல்களில் இந்திய ஒருமைப்பாடு அதிகம்! எல்லா மாநிலத்தவரும் இப்படி செய்பவர்களுள் அடக்கம்!

    பதிலளிநீக்கு
  3. வசீகரிக்கும் பதிவு. நமது மக்கள் தானாக முனைந்து சில பொதுக் கட்டுப் பாடுகளுக்குள் தன்னை நுழைத்து நம்மை நாமே மாற்றிக் கொள்ளா விட்டால் விபரீதம்தான்.

    பதிலளிநீக்கு
  4. அப்துல்கலாம் காணும் கனவு வேறு நம் மக்களும் தலைவர்களும் காணும் கனவு வேறு அதனால் வல்லரசு ஆகும் என்ற நினைப்பு இந்தியனுக்கு வேண்டாம்

    பதிலளிநீக்கு
  5. குறைகள் உண்டு ஏராளம். இதைப்போலவே தராளமாய் ஆச்சரியப்பட்டு பாராட்டக்கூடிய பல விசயங்களும் இங்குண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டினால் நானும் அறிந்து கொள்வேன்.

      நீக்கு
  6. இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாட்டில் இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசிகள், ஆப்பிரிக்கர்கள், முஸ்லிம்கள் என குடியேறிய மக்கள் பலரும் நேர்மையற்றவர்களாக இருக்கின்றார்கள் ... அதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் இப்படி மோசமானவர்கள் என்று தான் வெள்ளையர்கள் எண்ணுகின்றார்கள் !!!

    பதிலளிநீக்கு
  7. அனைவரிடமு உள்ள ஆதங்கத்தை
    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அடுத்தவர்களை ஒப்பிடாமல் இருந்தாலே போதும்...
    நம் நாடு வல்லரசு ஆகுதோ, நல்லரசு ஆகுதோ... அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... பகிர்வுக்கு நன்றி சார் !
    (த.ம. 5)

    பதிலளிநீக்கு
  9. இந்தியர்களைப் பற்றி எழுதும்போது உங்கள் ஆதங்கம் தெரிகிறது. ஆனால் மேலை நாட்டவர் எல்லாம் சிறந்தவர்கள் என்கிறார்போல் எழுதியிருப்பது நிரடுகிறது. எல்லோரிடமும் நிறை, குறை குணங்கள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நம்பிக்கையின்மை -- இந்திய தேசியக் கலாச்சாரம் !!!

    பதிலளிநீக்கு
  11. தமிழர்களின் குணமே வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான். மிக சரியாகச் சொன்னீர்கள் ஐயா .சிறப்பான இவ் ஆக்கத்திற்கு பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  12. குறைகளை களைந்து விட்டால் இந்தியா நலம் பெறும்.

    பதிலளிநீக்கு
  13. அடுத்த தலைமுறையாவது மாறும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  14. வல்லரசுதானே ....நல்லா வரும்....இப்படி இருந்தா உருப்படுவோம்?http://tamilmanam.net/forward_urll.php?url=http://feedproxy.google.com/~r/blogspot/aDIUX/~3/3Mk9MxQ4-lM/blog-post_25.html&id=1176607

    பதிலளிநீக்கு
  15. அன்பின் அய்யா - இந்தியர்களை - நம்மைப் பற்றி ஏன் இப்படி ஒரு எண்ணம் - நம்மிடம் இருக்கும் குறைகள் நமக்குத் தெரியும் - ஆனால் நம்மிடம் இருக்கும் நிறைகளைப் பற்றியும் பேசலாமே ! குறைகள் நிறைகளை விட அதிகமாக இருப்பதாகத் தோன்றியதால் எழுந்த சிந்தனையின் விளைவா இப்பதிவு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டை முன்னேற்றும் நிறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.

      நீக்கு
  16. அருமையான பதில் கந்தசாமி அய்யா. நிறைகளை மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதே பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் செயல்தான். வாய் கிழிய தத்துவ விசாரம் பேசிக் கொண்டு ஏமாற்றுதலை தொழிலாகக் கொண்டிருந்தால் என்ன செய்வது? அமெரிக்காவில் 10 வருடங்களுக்கும் முன்னர் ஒரு பொருளை வால்-மார்ட்டில் வாங்க் விட்டு ஏதோ ஒரு காரணத்துக்காக அந்தப் பொருள் பிடிக்கவில்லையென்றால் அதை திருப்புத் தரலாம். கேள்வி கேட்காமல் வாங்கிக் கொண்டு பணத்தைத் திருப்பித் தருவார்கள். தற்போதெல்லாம் நேரம் எடுத்துக் கொண்டு பேக்கிங்கைப் பிரித்து சோதனை செய்து விட்டு, பல கேள்விகளைக் கேட்டு விட்டே திரும்ப எடுக்கிறார்கள்.


    நான் ஒரு ஏர் ப்யூரிபையரை வாங்கினேன். வீட்டுக்குக் கொண்டு சென்று அதை இயக்கிய போது தான் தெரிந்தது, அதில் உள்ள பில்டர் பழையது, உபயோகித்தது, ஏகப்பட்ட அழுக்குடன். அதாவது ஒரு சிகாமனி புது ப்யூரிபையரை வாங்கிச் சென்று விட்டு அதில் உள்ள பில்டரை மட்டும் கழட்டி விட்டு பழைய பில்டரப் போட்டு திருப்பித் தந்து விட்டது. இதை நிரூபிப்படற்குள் சிரமப் பட்டுப் போனோம். அதனால் எதை வாங்கினாலும் கேஷியர் முன்னிலையில் திறந்து பார்த்து விட்டே வாங்குவது என்று வைத்துள்ளோம்.

    மேலும் பல வழிகளில் நம்மாட்கள் எமாற்றுகிறார்கள். பாஸ்போர்ட் போட்டோ காபி எடுக்க ஒரு பக்கத்துக்கு 10 சென்ட் செலவு செய்யாமல், ஒரு பிரின்டரையும் ஸ்கேனரியும் வாங்கி ஸ்கேன் மற்றும் பிரின்ட் செய்து இரண்டையும் திருப்பிக் கொடுத்த ஒரு நபர் இருக்கிறார்.

    அது போலவே ஒரு வட இந்தியப் பெண் பரீட்சைக்காக புத்தகம் வாங்கி விட்டு (60 டாலர் இருக்கலாம்) அதில் உள்ள சி.டி. யைக் காப்பி எடுத்துக் கொண்டு, பரீட்சை முடிந்தவுடன் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

    ஒரு ரெயின் கோட்டை வாங்கி சில நாட்கள் உபயோகித்திய பின் அதைத் திருப்பிக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்கள் பார்வையில் புத்தி சாலித்தனம். சிறு அளவில் இருந்து பெரிய அளவு வரை எங்கும் ஏமாற்றுதல் எதிலும் ஏமாற்றுதல், என்ன செய்வது. அரசாங்கமே பொய் சொல்கிறது, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டு வேலை பார்க்கிறது.

    பதிலளிநீக்கு