புதன், 8 ஆகஸ்ட், 2012

எதிர்பார்த்தது நடக்கிறது


எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பார்த்தது நடப்பதில் என்ன அதிசயம் என்று கேட்கலாம். ஆனால் இதில் பல விவசாயிகளின் பணம் முழுகிப் போய் விட்டதே. அதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.

ஈமு கோழி பித்தலாட்டம்


என்ற தலைப்பில் 17-12-2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் சொல்லியுள்ள பித்தலாட்டம் இன்று அரங்கேறிவிட்டது. பெருந்துறை அருகில் உள்ள சுசி ஈமு பண்ணை இன்று முடக்கப்பட்டது (தினத்தந்தி செய்தி,  8-8-12). இதைத் தொடர்ந்து வரிசையாக மற்ற பண்ணைகளும் மூடும் செய்திகள் வெளியாகும். காத்திருங்கள்.

15 கருத்துகள்:

  1. நல்ல செய்தி தான். ஆனால் சில ஈமு பண்ணைகள் விவசாயிகளிடம் பணத்தை பெறாமல் தங்களிடம் உள்ள நிதியைக்கொண்டு வெற்றிகரமாக நடத்திவருவதாக அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நடனசபாபதி. என்னுடைய உறவினர் கூட 5 வருடங்களாக 30 ஈமு கோழிகளுடன் சொந்தமாக பண்ணை நடத்திக்கொண்டு வருகிறார். இது வரை லாபமும் ஈட்டியிருக்கிறார். முக்கியமாக கோழி முட்டைகளை ஒன்று 1200 ரூபாய் வீதம் விற்று லாபம் பெற்றிருக்கிறார்.

      முட்டை விலை 1200 ரூபாய், இறைச்சி விலை கிலோ 600 ரூபாய் என்பதெல்லாம் செயற்கையாக, இந்த ஈமு கோழி புரமோட்டர்கள் உருவாக்கிய சந்தை விலை. புதிது புதிதாகப் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் இந்த சந்தை உருவானது. இப்போது இந்தக் கம்பெனிகள் எல்லாம் திவாலான பின்பு முட்டைகளும் இறைச்சியும் இந்த விலைக்கு விற்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த இறைச்சிக்கு சரியான மார்க்கெட் உருவாகவே இல்லை. மக்கள் மத்தியில் இந்த இறைச்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை.

      இப்போது இருக்கும் ஈமு கோழிகளை வாங்குவதற்கு யார் முன் வருவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக எனக்குப் படுகிறது. அப்படி வாங்கினாலும் என்ன விலை கிடைக்கும் என்பதுவும் ஒரு கேள்விக்குறியே. பொறுத்திருந்து பார்ப்போம்.

      நீக்கு
  2. தமிழ்மணத்தில் என்னுடைய இடுகையை இணைத்துவிட்டு பார்த்த முதல் இடுகை இதுதான். உங்களைபோன்ற எத்தனையோ நல்லுள்ளங்கள் எச்சரித்தும், மக்கள் தங்களுடை அறிவிழந்து இதில் முதலீடு செய்தனர். இனி, விரைவில் பல தற்கொலை செய்திகள் வரும்.

    தமிழன் இன்னும் முட்டளாகவேதான் இருக்கிறான்.

    என்னுடைய இடுகை இங்கே:

    http://kalakalappu.blogspot.com/2012/08/15-5.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழன் இன்னும் முட்டளாகவேதான் இருக்கிறான். //

      என்றும் முட்டாளாகவே இருப்பான்.

      நீக்கு
  3. நம்ம மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்ட முடியாது...

    ம்ம்ம்.. வருத்தம் தான் மிஞ்சுகிறது அவர்களுக்கும் படிக்கும் நமக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஏன் இப்படி, நம் மக்கள் எத்தனை நாட்களுக்கு இப்படியே ஏமாந்து கொண்டிருப்பார்கள்?

      நீக்கு
  4. நேற்று சன் செய்தியில் தகவலைப் பார்த்ததும் நீங்க தான் நினைவுக்கு வந்தீர்கள்.
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்று காலையில்தான் தினத்தந்தியில் பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

      நீக்கு
  5. ...ம்... நெருங்கிய உறவினரை நினைத்தால், மனம் கஷ்டமாக உள்ளது...(TM 2)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் போட்ட முதலை எடுத்துவிட்டார். இனி வருவது லாபத்தில் நட்டமே.

      நீக்கு
  6. நல்லன நடக்கட்டும்! சிறப்பானவிழிப்புணர்வு பதிவு!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. நாம் சொன்னவை சொன்னதே போல நடக்கும் எல்லா விஷயங்களும் சந்தோஷத்தைத் தருவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் இல்லை?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை,ஸ்ரீராம். வருத்தமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு பேர்களுடைய பணம் வீணாகிப் போனது?

      நீக்கு