திங்கள், 24 செப்டம்பர், 2012

கடவுள் செய்யும் அக்கிரமம்




மனிதன் பிறக்கும்போது எல்லோரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவன் பணக்காரனாகிறான், இன்னொருவன் பிச்சைக்காரனாக இருக்கிறான். கடவுள் ஏன் இந்த பட்சபாதம் காண்பிக்கிறார்? இது காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்வி.

ஆன்மீகவாதிகள் சொல்லும் வியாக்யானம் என்னவென்றால் அவரவர்கள் பூர்வஜன்ம கர்ம பலன்களின்படி இவ்வுலக வாழ்க்கை அமைகிறது என்கிறார்கள். அப்போது மறு ஜன்மம் உண்டு என்று ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் சொல்வதாவது. போன ஜன்மாவில் பாவகாரியங்கள் செய்ததால்தான் உனக்கு இந்த ஜன்மாவில் இவ்வாறு துன்பங்கள் வந்துள்ளன. இந்த ஜன்மாவில் நீ நல்ல காரியங்கள் செய்வாயாகில் அடுத்த ஜன்மாவில் நீ சுகப்படுவாய் என்று கூறுகிறார்கள்.

இந்த தத்துவத்தை ஏற்றுக்கொள்வதில் ஒரே ஒரு தயக்கம், இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை. அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்? என்று யாராவது கேட்டால், சாஸ்திரம் சொல்லுகிறது, ஆகையால் நீ நம்ப வேண்டும் என்கிறார்கள்

சாஸ்திரங்கள் ஆகாயத்திலிருந்தா விழுந்தது? அதுவும் நம்மைப்போன்ற மனிதன் எழுதியதுதானே? இப்படிக்கேட்டால் நீ நாத்திகன், நீ நாசமாய்ப்போவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள்.

நான் நினைக்கிறேன். மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்த அல்லது அவைகளை நினைத்து மனிதன் துவண்டு போகாமலிருக்க கொஞ்சம் புத்திசாலி மனிதன் கண்டுபிடித்த யுக்திதான் இது. காலம் காலமாய் சொல்லி வந்ததினால், பலர் அதை உண்மை என்றே நம்புகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். என்று ஒரு சித்தர் இருந்தார் என்றால் அன்றிருப்பவன் எல்லாம் நம்பினாலும் நம்புவார்கள்.

கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். ஒருவனுடைய நம்பிக்கைகள்தான் அவனை ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ அடையாளம் காட்டுகின்றன. உண்மை எது என்று யாரால் சொல்ல முடியும்?

40 கருத்துகள்:

  1. ஆழ்ந்த கருத்துக்கள் மறுக்கமுடியாத உண்மை.
    அழகாகச் சொன்னீர்கள் ஐயா.

    மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப் படுத்த அல்லது அவைகளை நினைத்து மனிதன் துவண்டு போகாமலிருக்க கொஞ்சம் புத்திசாலி மனிதன் கண்டுபிடித்த யுக்திதான் இது.

    முற்றிலும் உண்மை.

    கையில் ரேகை உள்ளவனுக்கு மட்டும்தான் வாழ்க்கையா..

    அப்போ கையே இல்லாதவன் வாழ்வதில்லையா?

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பார்வைக்காக..


    ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை ( சாவுக்கொட்டு மேளம்) ஒலிக்கிறது. ஒரு வீட்டில் திருமணத்துக்கு இசைக்கும் முழவோசை முழங்குகிறது. கணவரோடு கூடிய மகளிர் மலர் அணிந்து மகிழ்ச்சியோடு உள்ளனர். கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் வரக் கலங்குகின்றனர்.

    இந்த உலகைப் படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் அவன் நல்ல பண்பில்லாதவனாகவே இருப்பான். ஏனென்றால் தாங்கிக்கொள்ள இயலாத துன்பங்களை இன்பங்களுக்கிடையே வைத்தானே !


    http://www.gunathamizh.com/2009/12/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  3. //கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான்.//

    உண்மைதான். நம்பிக்கையே வாழ்க்கை!

    பதிலளிநீக்கு
  4. எம்ஜீயார் எப்பவுமே சித்தர் தான்; அவருக்கு தெரியாத சித்து வேலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் அண்ணே.
      அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்கும் மாய சித்தர்.

      நீக்கு
    2. சூப்பர் அண்ணே.
      அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்கும் மாய சித்தர்.

      நீக்கு
  5. அய்யா, வணக்கம்.
    உங்களின் கருத்துக்களில் மெய்யறிவியல் பற்றிய விளக்கங்கள் தவறாக இருக்கின்றன என நினைக்கிறேன். கிழக்கின் அறிவியல் சார்ந்த ஆன்மீக விஷயங்களை பலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதால் தாங்கள் இந்த முடிவிற்கு வந்து இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

    மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்கிறார் திருமூலர். மனிதனே கடவுள் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள தங்கவேல் காணிக்கத்தேவர் அவர்களுக்கு,
      தங்கள் கருத்துக்கு நன்றி.

      கிழக்கின் ஆன்மீகத்தில் அறிவியல் எங்கே இருக்குறது? எல்லாம் நம்பிக்கை என்ற தத்துவத்தில்தான் செயல்படுகின்றன. கடவுள் என்ற ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கடவுள் என்றால் என்ன அல்லது யார்?

      வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றையும் மனிதன்தான் படைத்தான். கடவுளையும் மனிதன்தான் படைத்தான். ஒவ்வொருவரும் ( திருமூலர் உட்பட) அவரவர்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர தெளிவான கருத்துக்களைக் கூறுவார் யாரையும் காணேன். மக்கள் தாங்கள் விரும்பும் மத குருமார்களின் கருத்தை நம்புகிறார்கள். இதற்கு மாற்றுக் கருத்துகளை ஏற்பதில்லை.

      ஆனால் இந்த கடவுள் நம்பிக்கையில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை நம்புவதற்கு பூரண சுதந்திரம் உண்டு.

      நீக்கு
    2. அவ்வளவு ஏன், கடவுள் படத்தையே இவன் தான் இஷ்டபடி வரைந்து செதுக்கி வைத்தான்.
      தானாக உண்டான கடவுள் உண்டா?
      மனிதன் இல்லாவிட்டால் கடவுளுக்கு என்ன வேலை?

      நீக்கு
  6. // எம்.ஜி.ஆர். என்று ஒரு சித்தர் இருந்தார் என்றால் அன்றிருப்பவன் எல்லாம் நம்பினாலும் நம்புவார்கள்.// உண்மை தான் அய்யா

    பதிலளிநீக்கு
  7. //கையில் ரேகை உள்ளவனுக்கு மட்டும்தான் வாழ்க்கையா..

    அப்போ கையே இல்லாதவன் வாழ்வதில்லையா?//
    அப்படியில்லை. கை இருப்பவன் வாழ்வில் நடக்கப்போவதை இப்போதிருக்கும் ரேகைகளின் பேட்டர்னை வைத்து ஓரளவு கணிக்க முடியும். இல்லாதவரின் ரேகையை வைத்து கணிக்க முடியாது.

    பதிலளிநீக்கு

  8. ஏற்ற தாழ்வு பற்றி சிந்திக்க வைக்கும் பதிவு. நான் இது பற்றி அவ்வப்போது எழுதி வருகிறேன். என் சிந்தனைக்கு வலுவூட்ட இன்னும் ஒரு பெரியவர். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கண்ணாடியில் பார்த்தால் கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம், கடவுள், இன்னும் எல்லாமே தெரியும்...! - (முகக் கண்ணாடியில்...)

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி பூர்வ ஜென்மம், மறு பிறவி, கடவுள் அப்படி பல விஷயங்களை சொல்லி பயப்படுத்தியுமே, நம்ம மக்கா இத்தன தப்பு, குற்றம், கொலை கொள்ளை பண்ணறாங்க. இதெல்லாம் எதுவுமே இல்லன்னு நிரூபிச்சுட்டா, உலகத்தையே அழிச்சுடுவாங்க. இதனால, நாலு பேரு நல்லவனா இருக்கான்னா, இந்த நம்பிக்கை இருந்திட்டுத்தான் போகட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்ய வைப்பது, பணம் கொடுத்து கடவுளுக்கு செய்யும் பரிகாரம்; மேலே சொன்ன பூச்சாண்டிகளெல்லாம், உலகத்தை மக்களை ஏய்த்து சிலர் உண்டி வளர்க்கவே!

      நீக்கு
  11. நல்ல சத்தம் போட்டு படியுங்கள் சகாக்களே!!!


    நன்றி அய்யா,,!!

    பதிலளிநீக்கு
  12. பல முன்ஜென்ம சம்பவங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது .
    சமீபத்தில் இலங்கையில் ஒரு சிறுவன் தனது முற்பிறப்பு
    பற்றி மிகவும் தெளிவாக ஆதாரங்களுடன் சொல்லியுள்ளான் .
    தன்னுடைய முற்பிறப்பு நண்பர்களையும் தான் முன்னர் அதிகம்
    போய் வந்த இடங்களையும் மிகவும் துல்லியமாக சொல்லியுள்ளார் .

    பதிலளிநீக்கு
  13. பல முன்ஜென்ம சம்பவங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது .
    சமீபத்தில் இலங்கையில் ஒரு சிறுவன் தனது முற்பிறப்பு
    பற்றி மிகவும் தெளிவாக ஆதாரங்களுடன் சொல்லியுள்ளான் .
    தன்னுடைய முற்பிறப்பு நண்பர்களையும் தான் முன்னர் அதிகம்
    போய் வந்த இடங்களையும் மிகவும் துல்லியமாக சொல்லியுள்ளார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் தோப்பாகாது. எங்கோ எப்போழுதோ நடக்கும் ஒரு சில சம்பவங்கள் சாதாரண மனிதர்களுக்கு பொருந்தாது. என்னைப் பொருத்தவரை இந்த முன் ஜன்மம், மறுபிறவி என்பவை கற்பனைகளே.

      நீக்கு
  14. ஐயா இந்த கடவுள் யாருன்னு மட்டும் சொல்லுங்கோ - உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும்

    பதிலளிநீக்கு
  15. அனுபவங்கள் பழமொழியாவது போல, நல்ல நடைமுறைகளை சாஸ்திரமாக்கி விடுகின்றனர்! மறுஜென்ம தத்துவத்தையே ஒரு மதம் நம்பும்போது, இன்னொரு மதம் நம்புவதில்லை. செய்கைகளுக்கான பலன் இந்த ஜென்மத்திலேயே சிலருக்குக் கிடைப்பதில்லை, அடுத்த ஜென்மத்திலா கிடைக்கப் போகிறது? அப்படிக் கிடைத்தாலும்தான் நாம் பார்க்கப் போகிறோமா?! கிடைத்தால் என்ன, கிடைக்கா விட்டால் என்ன?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்,ஸ்ரீராம். அப்படியே பலன் கிடைத்தாலும், எதனால் அந்தப்பலன் கிடைத்தது என்று நாம் அறியப்போவதில்லை. என்ன, இந்தப் பயத்தை மக்களின் மனதில் பதித்தாலாவது அவர்கள் நல்வழியில் செல்ல மாட்டார்களா என்று பழங்காலப் பெரியவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இந்தக்காலத்து மக்கள் "உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே" என்று தங்கள் இஷ்டம்போல் காரியங்களை நடத்திக்கொண்டு போகிறார்கள்.

      நீக்கு
  16. GOD IS A FEELING WHICH CAN NOT BE SHARED!

    அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு!

    பசியால் தவிப்பவனுக்கு ஒரு சாதாரண

    ரொட்டித் துண்டு கூட கடவுளாகத் தெரியும் !

    நம் நிறைவேறக் கூடிய தேவைகளுக்கு

    நம் அந்தரங்க பாதுகாவலுக்கு

    ஒரு உருவம்/வடிவம் கொடுத்து

    அதை இறைவனாய் காண்கிறோம் !

    அதுவும் ஒரு காலக் கட்டத்தில் நிறுத்தி

    விட்டோம் !

    அதனால் தான் அருவாள்,கத்தி, சூலம்

    ஆகியவற்றுடன் காட்சி அளிக்கும் நம் தெய்வங்கள்

    ஏ கே 47 மற்றும் அணுகுண்டுகள, கெமிக்கல்

    WEAPON களோடு தரிசனம் தருவதில்லை !!

    பதிலளிநீக்கு
  17. \\கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான்.\\ அப்படின்னா இப்போ நாம் செய்யும் செயல்கள் எதற்கும் பாவமோ புண்ணியமோ இருக்காது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கொலைகாரன் கொலை செய்தாலும் தப்பேயில்லை, பெண்களை மானபங்கப் படுத்தினாலும் தப்பேயில்லை, வீட்டில் புகுந்து திருடுபவர்கள் செய்வதும் தப்பேயில்லை.......... ஆனா எங்கோ இடிக்குதே...........!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயும் இடிக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் மெய்ஞானம் அடைந்தவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்கள் எப்போதும் போல் இருக்கக் கடவது.

      நீக்கு
  18. \\இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை.\\ ஒரு நிஜக் கதை. ஒரு பெண், பகலில் இப்பிறப்பு ஞாபகமும், இரவில் பூர்வ ஜென்ம ஞாபகமும் அவளுக்கு மாறி மாறி வருகிறது. பகலில் அன்பாக புருஷன்கிட்டே இருப்பவன் இரவானால், "என் புருஷன் வேறொருத்தர்டா, நீ யாரு? மகனே கிட்ட வந்தே செத்தேடா" என்று விரட்டி விரட்டியடிக்கிறாள். ஒரு பிறவி ஞாபகத்துக்கே இந்த கதி என்றால் எல்லா பிறவி ஞாபகமும் வந்தால் என்ன கதியாகும்?

    பதிலளிநீக்கு
  19. \\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்?\\ ஜோதிடர்கள், [தெரியாதவர்களாகவே கூட இருக்கட்டும்] உங்கள் ஜாதகத்தின் கட்டங்களை மட்டுமே பார்த்து உங்கள் வாழ்க்கையை கூடவே இருந்தது போல விவரிக்க முடிகிறதே அதெப்படி? அவர்கள் உங்கள் வாழ்க்கையை almost ஒரு கார்ட்டன் அளவுக்காவது ஸ்கெட்ச் பண்ணி காமிக்க முடிகிறதே அதெப்படி? ஜாதகத்தை தீர்மானிப்பது பிறந்த நேரம், அப்படியென்றால் எதை வைத்து தாங்கள் பிறந்த நேரம் முடிவு செய்யப் படுகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் pseudo science எனப்படுகிறது. என் அடுத்த பதிவைப் பாருங்கள்.

      இறந்த காலத்தை அப்படியே புட்டுப்புட்டு வைக்கும் எந்த ஜோதிடனாவது எதிர்காலத்தைப் பற்றி சொல்லியது அப்படியே நடக்கிறதா?

      நீக்கு
    2. 60% முதல் 90% சதம் வரை சொல்ல முடியும் சார். அதற்கும் மேல போனா கடவுளை யாரும் மதிக்க மாட்டாங்க சார்.

      நீக்கு
  20. \\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்?\\ ஜோதிடர்கள், [தெரியாதவர்களாகவே கூட இருக்கட்டும்] உங்கள் ஜாதகத்தின் கட்டங்களை மட்டுமே பார்த்து உங்கள் வாழ்க்கையை கூடவே இருந்தது போல விவரிக்க முடிகிறதே அதெப்படி? அவர்கள் உங்கள் வாழ்க்கையை almost ஒரு கார்ட்டன் அளவுக்காவது ஸ்கெட்ச் பண்ணி காமிக்க முடிகிறதே அதெப்படி? ஜாதகத்தை தீர்மானிப்பது பிறந்த நேரம், இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவை எதுவும் இல்லையென்றால் வேறு எதை வைத்து தாங்கள் பிறந்த நேரம் முடிவு செய்யப் படுகிறது? நேரம் எதுவாகவோ இருக்கட்டும், அதை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடிவது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காகவே ஒரு ஜோதிடப்பதிவு ரெடியாக தயார் செய்து வைத்திருக்கிறேன். நளை வெளியிடப்படும்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. The problem is theist claim karma can be proved but we do not have faculties to sense it..
      With this one argument they always, make me back off.

      நீக்கு
    2. என்னால் பறக்க முடியும், ஆனால் உன் கண்ணுக்குத் தெரியாது!

      இதெல்லாம் வெட்டி விவாதங்கள். நமக்குத் தெரிவதை வைத்துக்கொண்டு வாழ்ந்தால் போதும். தெரியாததை நம்பிக்கொண்டு தெரிந்ததை இழக்கவேண்டாம்.

      நீக்கு
  22. நம்பிகை சரியாக சொன்னீர்கள்
    ஆத்திகனுக்கு மூட நம்பிக்கை அதிகம்

    நாத்திகன் ஏன் என்று கேள்வி கேட்டுதான் நம்புவான் இல்லையெனில் மறுப்பான்

    பதிலளிநீக்கு
  23. அடுத்த ஜென்மத்துக்கு பயந்து இந்த ஜென்மத்தில் தவறு செய்யாமலிருப்பர்,
    என்ற நம்பிக்கையில் கூட இவ்வாறு சொல்லியிருக்கலாமல்லவா,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  24. Hi,

    As i read through your blog, the first thought that occurs to my mind is that the issue lies in how we have been taught to think and argue. There is a fundamental flaw in the way we decide what is correct and what is incorrect by trying to process using our logical mind by making argument and counter arguments..

    We all are grown up and have seen that people are not born equal. Infact no two individuals are alike and equal in this world. That being said, there is no question of trying to compare two different individuals.

    One can say that injustice done by God (Socialist's view)whereas the other can say that it is because of their Karma(Hindu Dharma's teaching).

    If one assumes that it is because of God's indifference, then it is very diffcult to understand why on the earth people go to the temple all pray to God despite the injustices meted out to them by the god? It simply doesn't make sense. In that case, the concept of God would have long vanished by now.....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you for sharing your thoughts. It is still a question of our background beliefs and our logical mind. I feel that we cannot explain all that happens in this world simply by our concept of logics. Probably there are many things which we cannot understand.

      நீக்கு