வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பேங்கில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை


சில மாதங்களுக்கு முன் ஸ்விஸ் வங்கிகளில் போட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை திரும்பக் கோண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பார்லிமென்ட்டில் போராட்டம் நடத்தியது ஞாபகம் இருக்கலாம்.

அவர்கள் அப்போது கூறியது, அந்தப் பணம் முழுவதும் கள்ளப் பணம், அதைப் பூராவும் இந்தாயவிற்குத் திரும்பக் கொண்டு வந்தால் இந்தியா வெளி நாடுகளிலுருந்து வாங்கியிருக்கும் கடன் முழுவதையும் அடைத்து விடலாம், கடன் சுமை இல்லாத இந்தியா வேகமாக முன்னேறி, வல்லரசாகிவிடும் என்றெல்லாம் கூறினார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் தோன்ற, இந்த ஸ்விஸ் சமாசாரம் கிடப்பில் போடப்பட்டது.

இன்று காலையில் தினத்தந்தியில் ஒரு செய்தி படித்தேன்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.23 லட்சம் கோடியைத் தாண்டியது, முதல் காலாண்டில் மட்டும் ரூ.11000 கோடி உயர்வு.

இதை சாதாரண மக்கள் பத்தோடு பதினொரு செய்தியாக வாசித்து விட்டுப் போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நான் தற்பொழுது சமூக மாற்றங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்ளைப் பதிவில் எழுதி வருகிறேன். பலர் பின்னூட்டத்தில் நல்ல செய்திகளே உங்கள் கண்ணில் படாதா என்று கேட்டதன் விளைவாக இந்தச் செய்தியை உங்கள் கவனத்திற்கு கோண்டு வருகிறேன்.

இந்தச் செய்தியின் சாரம் என்னவென்றால் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டவேண்டியதில்லை என்பதே. எவ்வளவு நல்ல செய்தி பார்த்தீர்களா? இனி மேல் என் மேல் "கெட்டதை மட்டும் பார்ப்பவன்" என்ற பழியைப் போடமாட்டீர்கள் என்று  நம்புகிறேன்.

25 கருத்துகள்:

  1. வங்கிகளின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிட ஆரம்பித்ததன் பலன் தான் இந்த வாராக்கடன்கள். கடன் வாங்கினால், திருப்பிக்கட்ட வேண்டியதில்லை என்று மக்களிடம் எண்ணம் வந்ததே இவர்கள் சொல்லித்தான். ஆனால் ஒன்றை மட்டும் கடன் வாங்குவோர் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் பெறும் பணம் வங்கிகளுடையதோ அல்லது அரசினுடையதோ அல்ல. அது பொது மக்களுடைய வைப்புத்தொகைகள் என்பதே அது.

    இது சிலருக்கு நல்ல செய்தியாக இருக்கலாம். ஆனால் வங்கியில் பணம் போட்டிருக்கும் மக்களுக்கு??

    பதிலளிநீக்கு
  2. அடா கதை இப்பிடியா போகுது.அப்பிடியே பக்கத்து நாட்ல தான்இருக்கிறம்.இங்கயும் சட்டத்தை பாஸ் பண்ணிட வேண்டியது தான்.சிறப்பாக தொடர்கிறது வாழ்த்துக்கள்.சந்திப்போம்.பழிக்கெல்லாம் பயப்பிடலாமா??


    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    பதிலளிநீக்கு
  3. ஆட்சி பீடத்தில் இருப்பவனை நாம் கேள்வி கேட்டால்,நீ என்ன யோக்கியமா? என்று எல்லோரையும் வாயடைக்க செய்ய, அல்லது நாம மட்டும் யோக்கியமா? அவனை கேட்க என்று நாமே எண்ணிக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை கொண்டுவருகிறார்கள்.நமக்கெல்லாம் கையில சுண்டல்.அவர்க்ளுக்கு வாளி,அண்டாவோட.

    பதிலளிநீக்கு
  4. ஆட்சி பீடத்தில் இருப்பவனை நாம் கேள்வி கேட்டால்,நீ என்ன யோக்கியமா? என்று எல்லோரையும் வாயடைக்க செய்ய, அல்லது நாம மட்டும் யோக்கியமா? அவனை கேட்க என்று நாமே எண்ணிக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை கொண்டுவருகிறார்கள்.நமக்கெல்லாம் கையில சுண்டல்.அவர்க்ளுக்கு வாளி,அண்டாவோட.

    பதிலளிநீக்கு
  5. வாங்கிய கடனை அடைக்காதவர்கள் பணம் படைத்தவர்களே .
    என்ன செய்வது அவர்கள் அரசியல்வாதிகள்.

    பதிலளிநீக்கு
  6. Ahaa! Without knowing this, i repaid the loan back! Vadai poche!!!

    பதிலளிநீக்கு
  7. எனக்கொரு 1.70ஆயிரம் கோடி கடன் வேண்டும்!

    ஐயா நீங்க வந்து சாட்சி கையெழுத்து போட்டு வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா...

    பதிலளிநீக்கு
  8. ///பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்புக் கட்டவேண்டியதில்லை என்பதே. எவ்வளவு நல்ல செய்தி பார்த்தீர்களா?///

    நீங்கள் எழுதியதிலே இது தான் உங்களின் "மகுடப் பதிவு!" எந்த எந்த வங்கியில் வாங்கினால் அப்படி வசதி என்று எழுதினால் மிக மிக நல்லது!

    இப்போது, பீள மேடு ஏர்போர்ட்டில் இருந்து பாம்பே (சென்னை வராமல்) வழியாக அமெரிக்க செல்லலாம் என்று கேள்விப் பட்டேன்! ஏன் என்றால் நான் கடைசியாக கோவை வந்தது சூலூர் ஏர்போர்ட் வழியாகத் தான்; என் நைனா கிராமத்திற்கு சென்றேன் சூலூர்- உடுமலை-எங்க ஊர்.

    என் மகன் படிக்கிறான்; படித்து திருமணம் முடித்தபின் அங்கண, கொங்கு நாட்டுக்கு, வந்து செட்டில் ஆகாலாம் என்று இருக்கிறேன்.

    இதுமாதிரி நல்ல விஷயங்களை எழுதுங்கள்; அதவாது எந்த வங்கியில் கடன் வாங்கினால் கட்டத் தேவையில்லை என்று!

    டாக்டர் கந்தாசாமியின் சேவை நாட்டுக்கு தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சமா கடன் வாங்கினா, இந்த டெக்னிக் சொல்லுபடியாகாது. கொறஞ்சது 100 கோடிக்கு மேல் வாங்கினவிகளுக்குத்தான் இந்த சலுகை. கூடவே ஒரு நல்ல ஆளும் கட்சி மந்திரி சிபாரிசு வேண்டும்.

      ப.சிதம்பரம் தெரியுமா உங்களுக்கு? அவர் சொன்னாப் போதும்.வாங்க, என் மாப்பிள்ளை இந்த மாதிரி புராஜெக்ட் போடும் வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறார். சாயிபாபா காலனியில் இல்லாத பேங்க் கிளைகளே வேறு எங்கும் இருக்காது. என்ன முதலில் கொஞ்சம் முதல் போடவேண்டும். ஒரு பத்து கோடி இருந்தால் போதும். ஆயிரம் கோடி வரைக்கும் கடன் வாங்கி விடலாம். வாங்கின பிறகு அதை டீல் செய்வதற்கு ஸ்பெஷலிஸ்ட்டுகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் கோடி என்பது ஜுஜுபி.

      நீக்கு
  9. ///ப.சிதம்பரம் தெரியுமா உங்களுக்கு? ///

    நன்னா தெரியும்! சௌந்தரா கைலாசமும் தெரியும்; நளினி அம்மாவும் தெரியும்; பசி உங்க சமூக மாப்பிள்ளை தானே!

    பதிலளிநீக்கு
  10. மன்னிக்க வேண்டும்; உங்கள் சமூகம் அல்ல! உங்க கூட்டம்! சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகம் = Society or people in a culture.
      இந்த அர்த்தத்தில்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

      நீக்கு
  11. ஒரு சுவிஸ் வங்கியில் மட்டுமே என்பது லட்சம்கொடி ரூபாய்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள், இதுவே தலையை சுத்துது, அப்புறம் அங்கேயுள்ள மற்ற வங்கிகள், மற்றும் உலகில் உள்ள எல்லா இடங்களிலும் கறுப்புப் பணம் வைக்கும் இடங்களையும் சேர்த்தால்........ கற்பனை செய்யக் கூட முடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்த பிசாத்து ஒன்னேகால் லட்சம் கோடி ஏதோ சாதாரண பிரைஜைகள் சாப்பிட்டார்கள், போகட்டும் சார். தங்கள் பதிவுகள் சுருக்கமாக தெரிவாக, நச் என்று இருக்கின்றன. நானும் என் பின்னூட்டங்களை இந்த மாதிரி சுருக்கி எழுத எவ்வளவோ முயற்சி பண்றேன் வரமாட்டேன்கிறது. அந்த இரகசியத்தை எனக்கும் கத்து குடுங்க சார்!!!

    அப்படியே நம்ம கடைப் பக்கமும் வாங்க!!

    http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

    பதிலளிநீக்கு
  12. அது அரசியல் வாதிகளுக்கும் பெரிய நிறுவனங்கலுக்கும்தான் .அவர்களிடம் வங்கிகள் கடனை திரும்ப கொடுக்கல் என்று கேட்பதற்கே பயப்படும். அவர்கள் வீட்டு வாசலில் கைகட்டி நின்று கொண்டிருப்பார்கள்.ஆனால் , நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் கழுத்தில் துண்டை போட்டு தெருவில் இழுத்து செல்வார்கள் . முதலில் நமக்கு கடன் கொடுக்கவே மாட்டார்கள். அதையும் மீறி கொடுத்து விட்டால் நாயை விட கேவலமாக நடத்துவார்கள்.
    இதைப் போன்ற அவலங்களை தொடர்ந்து எழுதுங்கள் கெட்டது மட்டும்தான் கண்ணில் படுமா என்ற கேள்வியை நீங்களாகவே எழுப்பிக் கொண்டு எழுதுவதை நிறுத்தாதிர்கள்.
    karthik+amma

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மள மாதிரி ஆளுங்க ரெண்டு மாசம் கிரெடிட் கார்டு பாக்கியையே கட்டுலன்னா ஊட்டுக்கு அடியாள் வந்துடுது. இதெல்லாம் நமக்கில்லைங்க. நம்ம மாதிரி ஆளுங்க ஒரு லட்சம் ரெண்டு லட்சம் வாங்கியா இப்படி லட்சம் கோடி வராக்கடன் ஆயிடும்? இதெல்லாம் பெரிய திமிங்கலங்கள். ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடின்னு வாங்கின கடன்களுங்க. அவங்கதான் கவர்ன்மென்ட நடத்துறாங்க. அவங்களுக்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது. நாம வாயைப்பொளந்துட்டு வேடிக்கை பார்க்கத்தான் லாயக்கு.

      யார் என்ன சொன்னாலும் நம்ம ஸ்டைல மாத்த மாட்டனுங்க.

      நீக்கு
  13. நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க ஐயா.. நானும் வீட்டு லோன் ஒரு 15 லட்சத்திற்கு வாங்கி இருக்கிறேன்.. ஆனா நீங்க அதுக்கெல்லாம் திருப்பிக் கட்டாம இருக்க முடியாது, குறைந்தது 100 கோடியாவது கடன் இருக்கனும்னு சொல்றீங்க.. அதான் கவலையா இருக்கு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் வாங்கி கவலைப்பட்டது எல்லாம் கம்பன் காலத்தோட போச்சு. இப்ப கடன் சொடுத்தவன்தான் கவலைப்படணும். சும்மா வாங்குங்க ஒரு ஆயிரம் கோடி கடன். அப்புறம் பாருங்க உங்களுக்கு கிடைக்கற மரியாதையை?

      நீக்கு
  14. ஹா ஹா ஹா.. கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல், கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் சொன்னதை (கம்பர்தானே?) இப்படி குறிப்பால் உணர்த்தறீங்க.. கலக்குங்க!!

    இந்த ஈமு கோழி பத்தி ஒரு ஃபாலோ-அப் அப்டேட் பதிவு கொடுங்களேன், உங்க உறவினர் ஒருத்தர் பண்ணை வச்சிருந்ததா ஒரு பதிவில எழுதி இருந்தீங்களே, தற்போதைய நிலவரம் என்ன?

    பின்.குறிப்பு: உங்களுக்கு இன்னொரு பதிவுக்கு மேட்டர் ஐடியா தந்ததற்கு எனக்கு பாராட்டு, மாலைகளெல்லாம் வேண்டாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே. சும்மா, சும்மா, ஃபாலோ-அப் பதிவுகளே போட்டுக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்? என்னுடைய இன்றைய (31-8-12) பதிவைப் பாருங்கள். ஒரு அட்டகாசமான திட்டம் தீட்டியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். தொழில் ரீதியாக கூட்டு சேர விருப்பமிருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். என் தொலைபேசி எண் தெரியுமல்லவா?

      என் உறவினர் ஐந்து வருடங்களாக ஈமு பண்ணை நடத்தியதில் பொட்ட முதலை எடுத்துவிட்டார். அவருடைய தற்போதைய கவலை அந்த ஈமு கோழிகளை என்ன செய்வது என்பதுதான். உங்கள் ஊரில் ஏதாவது கிராக்கி இருந்தால் சொல்லவும். நல்ல கமிஷன் வாங்கிக் கொடுக்கிறேன்.

      நீக்கு
  15. எனது அப்பா இந்தியன் வங்கியல் வாங்கிய ட்ராக்டர் லோனை கட்டாமல் இறுக்க என்ன வலி சொல்லுங்க எனது அப்பா கஷ்டபடுகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனது அப்பா இந்தியன் வங்கியில் வாங்கிய ட்ராக்டர் லோனை கட்டாமல் இருக்க என்ன வழி சொல்லுங்க, எனது அப்பா கஷ்டப்படுகிறார்//

      1. முதலில் தமிழில் தவறு இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.

      2. உங்கள் அப்பா எத்தனை டிராக்டருக்கு லோன் வாங்கினார்? நூறு டிராக்டருக்கு மேல் லோன் வாங்கியவர்களின் கடனைத்தான் கட்டவேண்டியதில்லை.

      3. ஒரு டிராக்டருக்கு மட்டும் லோன் வாங்கியிருந்தால் அந்த லோனைத் திருப்பிக் கட்டத்தான் வேண்டும்.

      4. இந்த லோன் வாங்குவதற்கு முன்பே என்னைக் கேட்டிருக்கப்படாதா? அருமையான திட்டங்கள் கைவசம் இருக்கின்றனவே. இப்படி ஏமாந்து விட்டீர்களே.

      நீக்கு