வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 3


                                   

இந்த தொடர் பதிவு, பதிவுலகில் உள்ள தைரியசாலிகளுக்கு மட்டுமே.

தெரு நாயைக் கண்டு ஓட்டம் பிடிப்பவர்களும்,  கரப்பான் பூச்சியைக் கொல்ல முடியாதவர்களும், பெண்டாட்டிக்குப் பயப்படுகிறவர்களும் (தாய்க்குலம் என்னை மன்னிக்கவும். ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது) வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கவும்.

சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் "ஒன் ஸ்டெப் பேக்".

ஆனால் நான் சொல்லிக் கொடுப்பதை பொறுமையுடன் ஒழுங்காகப் படிப்பவர்கள் கண்டிப்பாக சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யலாம்.

முதலில் நம் பிளாக்கர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். பிளாக்கருக்குள் நுழைந்தவுடன் நாம் பார்ப்பதுஇதைத்தான் பிளாக்கர்  "டேஷ்போர்டு" என்று சொல்கிறார்கள். இதில் என்னுடைய மன அலைகள் என்பதற்கு வலது புறமாக ஒரு ஆரஞ்சு வர்ணப் பட்டை தெரிகிறதா. அதற்கு வலப்புறம் சின்னதாக ஒரு பட்டன்   தெரிகிறதல்லவா?   

இதைச் சொடுக்கினால் கீழ்க்கண்ட ஸ்க்ரீன் தெரியும்.


இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே, இதைச்சொல்லி எதற்கு போர் அடிக்கிறீர்கள் என்று சொல்லுவது காது கேட்கிறது. எனக்கு அது நன்றாகத் தெரியும். கணக்கு சொல்லிக்கொடுக்கும்போது கணக்கு வாத்தியார் ஸ்டெப் ஸ்டெப்பாகப் போவார். அதில் பல ஸ்டெப்கள் நமக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் அந்த ஸ்டெப்களைப் போடுகிறார் என்றால் நம் மரமண்டையில் நன்றாகப் பதிவதற்காகவே. இப்போது புரிந்ததா, நான் ஏன் இந்த விவரங்களை எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன் என்று? 

இந்த நம் பதிவுகளின் லிஸ்ட் கொண்ட ஸ்கிரீனை தினமும் பார்த்தாலும் அதில் உள்ள சில நுட்பமான விஷயங்களை நாம் கவனிப்பதில்லை.
இடது பக்கம் உள்ள இந்த மெனுவை நீங்கள் கவனிப்பதுண்டா? அதில் Template என்று ஒன்று இருப்பதைக் கவனித்ததுண்டா? இந்த விவரங்களை ஒரு முறை உங்கள் பிளாக்கிற்கு சென்று கவனித்து விட்டுப் பிறகு தொடர்ந்து படியுங்கள். இந்த  Template  ஐ சொடுக்கினால் உங்களுக்கு கீழ்க்கண்ட ஸ்கிரீன் கிடைக்கும்.இதில் வலது மேல் மூலையில் Backup/Restore  என்று ஒரு இடம் இருக்கிறது பாருங்கள். அதைச்சுட்டுங்கள். கீழ்க்கண்ட ஸ்கிரீன் வரும்.

இதில் ஆரஞ்சு கலரில் உள்ள Download Full Template என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுடைய டெம்ப்ளேட் டவுன்லோடு ஆகி வழக்கமாக நீங்கள் டவுன்லோடுகளை எங்கே சேமிப்பீர்களோ அங்கு சேமித்து விடும். நான் வழக்கமாக டெஸ்க்டாப்பில் சேமிப்பேன். அந்த சேமித்த பைலைக் காணுங்கள்.


உங்கள் டெம்ப்ளேட் சேமிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.


தைரியமாக இந்தப் பைலை கிளிக் செய்து திறந்து பாருங்கள். கொசகொசவென்று என்னென்னமோ நமக்குப் புரியாத சமாச்சாரங்கள் இருக்கும். கொஞ்சநேரம் பார்த்து விட்டு பைலை மூடி விடுங்கள்.இது வரை நான் சொல்லியவற்றை நீங்கள் செய்து பார்க்கவும். நீங்கள் இவற்றில் என்ன தவறு செய்தாலும் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தினருக்கோ, உங்கள் கம்ப்யூட்டருக்கோ, உங்கள் பதிவுகளுக்கோ எந்த வித ஆபத்தும் நேராது என்று நான் உறுதியளிக்கிறேன். 

இந்த விபரங்கள் உங்கள் உடலுக்குள் சென்று ஜீரணமாவதற்கு ஒரு வாரம் ஆகலாம். அது வரை நீங்களும் வேறு வேலை பாருங்கள். நானும் வேறு வேலை பார்க்கிறேன். 

அடுத்த வாரம் இந்தத் தொடரின் 4 வது பாகம் வெளி வரும்போது அநேகமாக இந்தத் தொடரைப் படிக்க ஒருவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் இந்தத் தொடரை என் நினைவுக்காக கட்டாயம் பதிவு செய்வேன். 

இந்த ஸ்டெப்களை தினந்தோறும் ஒரு முறை செய்து பார்க்கவும்.

13 கருத்துகள்:

 1. இனிமேல் தான் தொடர்ந்து பலபேர்கள் வருவார்கள்...!

  தொடர் முடிந்த பின் இவ்வாறு படங்களை எவ்வாறு எடுப்பது...? + நமக்கு நாமே விளங்கிக் கொள்வதை என பதிவுகள் தொடரலாம் ஐயா... அந்த தொடர் இதை விட ரசிக்க வைக்கும் என்பதில் 100% கியாரண்டி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து விடலாம், தனபாலன். அதை விட எனக்கு வேறென்ன வெட்டி முறிக்கிற வேலை?

   நீக்கு
 2. பயனுள்ள பதிவு ஐயா
  அடுத்தத் தொடரைப் படிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. //அடுத்த வாரம் இந்தத் தொடரின் 4 வது பாகம் வெளி வரும்போது அநேகமாக இந்தத் தொடரைப் படிக்க ஒருவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்.//

  ஐயா. நிச்சயம் நான் தொடரை படிக்க வருவேன்.பேராசிரியர் அல்லவா? படிப்படியாக ஒவ்வொரு நிலையையும் என்னைப்போன்றோர் புரியும் வண்ணம் விளக்கியுள்ளேர்கள். நீங்கள் சொன்னது இப்போதே ஜீரணமாகிவிட்டது. எனவே பசியுடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு!

  பதிலளிநீக்கு
 4. தெரிந்தவர்களுக்குக் கூட நீங்கள் சுவாரசியமாக சொல்லும் விதம் படிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 5. கடைசி பத்தி தான் சற்று புரியாத அளவு உள்ளது. அடுத்த பதிவினைத் தொடரும்போது சரியாகிவிடும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. டெம்ப்லேட்டை டௌன்லோட் செய்து சேமித்து விட்டேன். அடுத்து .....நான் சுமார் இரண்டு வாரங்களுக்கு கணினிப் பக்கம் வரமுடியாது. வந்தபின் தொடர்கிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. // அடுத்த வாரம் இந்தத் தொடரின் 4 வது பாகம் வெளி வரும்போது அநேகமாக இந்தத் தொடரைப் படிக்க ஒருவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் இந்தத் தொடரை என் நினைவுக்காக கட்டாயம் பதிவு செய்வேன். // உங்களின் நகைச்சுவை உணர்வு ரசிக்க வைக்கிறது! கட்டாயம் நானிந்த நகைச்சுவையை ரசிக்கவாவது வருவேன்! எளிமையாக சொல்வது சிறப்பு! தொடருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவினில் நீங்கள் போடும் ஸ்டெப்ஸ், ” தாய்க்குப் பின் தாரம் “ படத்தில் சிலம்புச் சண்டையில், வாத்தியார் எம்ஜிஆர் போடும் ஸ்டெப்ஸைப் போல பிரமாதம்.
  த.ம.6

  பதிலளிநீக்கு
 9. அதெல்லாம் வந்து பார்த்துட்டுத்தான் போவோமாக்கும்:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படைச்சவனுக்கு இல்லாத பாவக்காயா? உங்களுக்கு இல்லாத உரிமையா?

   நீக்கு