செவ்வாய், 23 டிசம்பர், 2014

தமிழர்கள் காதில் நன்றாகப் பூச்சுற்றுகிறார்கள்.                               

இன்றைய பத்திரிகைச் செய்தி:

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் 66 தமிழக மீனவர்கள் விடுதலை.

இந்த மாதிரி செய்திகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும் இங்குள்ள அரசியல்வாதிகள் அதைப்பற்றி அறிக்கைகள் விடுவதும் சில நாட்கள் கழித்து அவர்கள் விடுதலையாவதும்  தொடர் கதையாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நடப்பதைப் பார்த்தால் இவை எதேச்சையாக நடந்தவை போல் தெரியவில்லை.

ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. யார் இந்த நாடகத்திற்கு காட்சிகள் அமைத்து கதை வசனம் எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

10 கருத்துகள்:

 1. தவிர்க்க முடியாத நிகழ்வாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. ''இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நடப்பதைப் பார்த்தால் இவை எதேச்சையாக நடந்தவை போல் தெரியவில்லை'' என்று மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. கண்களில் கண்ணீர் சிந்த வைக்கும் உணர்ச்சிவசபட வைக்கும் சீரியல் நாடகம் மக்களுக்கு ரொம்பப் பிடிக்குமில்லையா, அதனாலே தமிழக அரசியல்வாதிகள் நாடகம் போடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு

 4. //ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது.//

  அப்படி இருக்காது ஐயா. கச்சத்தீவை இலங்கைக்கு ‘தாரை வார்த்ததால்’ வந்த வினை இது.

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் ஐயா
  நாடகம்தான் நடக்கிறதோ என்ற ஐயம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

  பதிலளிநீக்கு
 6. இயக்குனர் ராஜபக்ஷ கதை வசனம் சுப்ரமணிய சுவாமி.

  jayakumar

  பதிலளிநீக்கு
 7. appa tamil meenavargal ellai thaandi poai meen pidikavillaiyaa?

  Jim

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை வைத்து தானே இந்த நாடகம் தமிழக அரசியல்வாதிகளால் நாடகம் தயாரித்து அரங்கேற்றபடுகிறது.
   நாடகத்திற்க்கு நன்றி இடத்தில் இந்திய எல்லை தாண்டி மீன்பிடிப்போர் என்று போட வேண்டும்.

   நீக்கு
 8. //ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. யார் இந்த நாடகத்திற்கு காட்சிகள் அமைத்து கதை வசனம் எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.// valid point.

  பதிலளிநீக்கு