திங்கள், 29 டிசம்பர், 2014

நான் மீண்டும் கையைச் சுட்டுக் கொண்டேன்.

                                   

                                   

மீண்டும் மீண்டும் கையைச் சுட்டுக்கொளவதே என் வழக்கமாகப் போய் விட்டது. பலமுறை பதிவுலக நண்பர்களுக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன். சொல்வார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள் என்று எல்லாருக்கும் நான் சொல்வேன். ஆனால் "எல்லோருக்கும் கௌளி சொல்லுமாம் பல்லி, அது விழுந்ததாம் கழுநீர்ப் பானையில்" என்ற மாதிரி நானும் நேற்று கழுநீர்ப்பானையில் விழுந்தேன்.

பதிவுலகில் தொழில் நுட்பப் பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் எங்காவது ஒரு புது கம்பெனி ஏதாவது ஒரு புரொக்ராமைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அதை மோப்பம் பிடித்து தங்கள் பதிவில் போட்டு விடுவார்கள். அதன் சாதக பாதகத் தன்மைகளைப் பற்றி ஒன்றும் ஆராய மாட்டார்கள். அதை நம்பி அந்த புரொக்ராமை நிறுவும் பயனாளிகளான நாம்தான் இளிச்சவாயர்கள்.

எந்த கம்ப்யூட்டர் புரொக்ராம்காரனும் பொது சேவை செய்வதற்காக கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புரொக்ராமை இலவசமாகக் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் மறைமுகமான லாபம் இருக்கும்.

சில பெரிய கம்பெனிகள் தங்களுக்கு வரும் விளம்பரங்களுக்காக இத்தகைய புரொக்ராம்களை இலவசமாகத் தருகின்றன. ஆனால் பெரும்பாலான அடையாளம் தெரியாத கம்பெனிகள் வைரஸ்களை இனாமாகத் தருகின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நாம் ஏமாந்து விடுவோம்.

ஆகவே நம் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்கள் 100 சதம் பத்திரமானவை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை உடனடியாக விட்டொழியுங்கள். நான் நேற்று இப்படி ஒரு புரொக்ராமை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பிறகு பார்த்தால் கூடவே ஒரு மோசமான வைரஸும் இறக்குமதி ஆகி கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டது.

எப்படி முயன்றாலும் அன்இன்ஸ்டால் ஆகமாட்டேன் என்றது. வேறு வழியில்லாமல் சிஸ்டம் ரெஸ்டோர் போய்த்தான் சரி செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. என்னுடைய கம்ப்யூட்டரின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒரிஜினலாய் இருந்ததால் அதிகம் பிரச்சினை இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் டாக்டரிடம் போகவேண்டியதாய் இருந்திருக்கும்.

ஆகவே நண்பர்களே ஜாக்கிரதையாய் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

46 கருத்துகள்:

 1. //எந்த கம்ப்யூட்டர் புரொக்ராம்காரனும் பொது சேவை செய்வதற்காக கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புரொக்ராமை இலவசமாகக் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் மறைமுகமான லாபம் இருக்கும்.//அதே,
  பல தடவை நம் பதிவர்கள் பரிந்துரையை நம்பி, இப்போ உசாராகி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா இரவு தூங்கினீர்களா இல்லையா. பதிவில் நேரம் அதிகாலை 5 என் இருக்கவே கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய நாள் காலையில் 3 மணிக்கு ஆரம்பிக்கிறது. பகல் 1 மணி முதல் 4 மணி வரை மதியத் தூக்கம். இரவு 9 மணிக்கு தூங்கப் போய் விடுவேன். ஆக மொத்தம் ஒரு நாளில் ஏறக்குறைய 8 முதல் 9 மணி நேரம் தூங்குகிறேன்.

   சரிதானே !

   நீக்கு
  2. //என்னுடைய நாள் காலையில் 3 மணிக்கு ஆரம்பிக்கிறது.//

   இந்தக் குளிர் காலத்திலுமா ...? !1-12 மணிக்குப் படுத்து, 7- 8 மணி வரை தூங்குபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   நீக்கு
  3. இந்த பழக்கங்கள் அவரவர் தொழில் முறையைப் பின்பற்றி அமைகிறது. வியாபாரிகள் கடையை முடித்து வீட்டிற்கு வர 10 மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்க்ள மதியம் தூங்க முடியாது.

   நான் விவசாயக் கல்லூரியில் படிக்கும்போது பிராக்டிகல் வகுப்புகள் காலை 6.30 க்கு ஆரம்பிக்கும். என்ன குளிர், என்ன பனியானாலும் கண்டிப்பாக அந்த நேரத்தில் வகுப்பு ஆரம்பித்து விடும். கல்லூரி முடித்து பணியில் (பண்ணை மேலாளர்) சேர்ந்தபோதும் பண்ணை நேரம் காலை 7 மணி. இப்படி பழகியதால் கலையில் நேரத்தோடு எழுந்திருப்பது என்பது பழக்கமாக மாறி விட்டது. இரவில் படுக்கப்போவது விவசாயக் குடும்பங்களில் இரவு 8 மணியைத் தாண்டாது. தவிர பகலில் சிறிது ஓய்வெடுப்பது விவசாய வேலையில் சகஜம். கல்லூரியிலும் பணிக்காலத்திலும் மதியம் 3 மணி நேரம் இடைவேளை உண்டு. அதனால் விவசாயக் கல்லூரியில் பெரும்பலானோர் மதியத் தூக்கத்திற்கு பழகியவர்களாய் இருப்பார்கள்.

   அவரவர் சௌகரியம் போல்தான் தினசரி பழக்கங்கள் அமையும்.

   நீக்கு
 3. தகவலுக்கு நன்றி! எப்போதுமே இலவசங்கள் என்றால் அதன் பின்னே ஏதேனும் ஒரு அபாயம் இருப்பது தெரிந்ததுதானே! நாம் தான் அதை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோமே!

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. போன பதிவில்தான் பின்னூட்டத்தில் "எதுவும் சுலபமாக் கிடைச்சா கடைசில வில்லங்கம் வரும்.". என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.
   இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கும் நீங்கள் இலவசமாகக்கிடைக்கும் ப்ரோக்ராம்களில் வைரஸ் இருக்காது என்று எப்படி நம்பினீர்கள். உங்களையே ஏமாற்றும் அளவு அந்த ப்ரோக்ராம் என்னென்ன செய்வதாக அந்த தொழில் நுட்பப் பதிவர்கள் கூறியிருந்தார்கள் என்று சொல்லவே இல்லையே. ஒருவேளை அதை அடுத்த பதிவில் போடுவதாக இருக்கிறீர்களோ?
   போட்டால் நாங்களும் அதில் மாட்டாமல் இருப்போம்.

   திருச்சி காயத்ரி மணாளன்

   நீக்கு
  2. அப்படி செய்தால் அது தனிநபர் தாக்குதலாக ஆகும். அது பதிவுலக சட்ட விரோதம்.

   நீக்கு
  3. தனி நபர் தாக்குதல் என்று சொல்லி நீங்கள் தப்பித்து விட்டீர்கள். ஆனால் அந்த பதிவிறக்கம் எத்தனை பேரை தாக்கப்போகிறதோ என்று தெரியவில்லையே.
   பதிவிட்ட அந்த தனி நபரை கை காட்டுவது மேலா இல்லை அந்த பதிவை பதிவிறக்கம் செய்து அவஸ்தை படப்போகிற எத்தனையோ பேரை காப்பாற்றுவது மேலா என்று கோவை கவுண்டரே முடிவு செய்து கொள்ளட்டும்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  4. கோவை கவுண்டர் : நான் நேற்று இப்படி ஒரு புரொக்ராமை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பிறகு பார்த்தால் கூடவே ஒரு மோசமான வைரஸும் இறக்குமதி ஆகி கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டது.

   திண்டுக்கல் தனபாலன் : எதை டவுன்லோட் செய்து இப்படி ஆனது ?

   கோ.க. : எல்லாம் பதிவிறக்கம் செய்த ப்ரோக்ராம்தான்

   தி.த. . : அதுதான் எந்த ப்ரோக்ராம்

   கோ.க. : அந்த பதிவிறக்கம் செய்த ப்ரோக்ராம்தான்.

   தி.த.: எந்த ப்ரோக்ராமை பதிவிறக்கம் செய்தீர்கள்?

   கோ.க.: வைரசை கூட்டிகொண்டே வந்து விட்டதே அந்த ப்ரோக்ராம்தான்.

   தி,த.: (மனதுக்குள் 'சரியான அழுத்தம் போல இருக்கிரது. சொல்லவே மாட்டேன் என்கிறாரே' என்று நினைத்துக்கொண்டு): வைரசை எந்த ப்ரோக்ராம் கொண்டு வந்தது?

   கோ.க.: பதிவிறக்கம் செய்து நான் இன்ஸ்டால் செய்த அதே ப்ரோக்ராம்தான்

   தி.த. : (ஒத்துக்கொண்டாலாவது விஷயம் வெளியே வரும் என்ற நப்பாசையில்) ஹோ ஹோ அந்த ப்ரோக்ராம்தானா?

   கோ.க.: அப்பாடா இப்போதுதான் புரிந்ததா? அதே ப்ரோக்ராம்தான்.

   தி.தா. சரியான கொடாக்கண்டனாக இருப்பீர்கள் போலிருக்கிறதே

   கோ.க.: நீங்கள் சரியான விடாக்கண்டனாக இருப்பீர்கள் போலிருக்கிறதே

   திருச்சி தாரு: அப்பாடா ஆளை விடுங்கள் நீங்கள் சொல்லவே வேண்டாம். அவர் "கொடாகண்டனும்" இல்லை "கோவை கவுண்டனும்" இல்லை. அவர் இனிமேல் "கொடாக்கவுண்டன்".

   கோ.க.: அடாடா நமக்கு இன்னொரு பட்டமா. கொடுத்த திருச்சி தாருவுக்கு நன்றி

   திருச்சி தாரு

   நீக்கு
  5. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் அந்த புரொக்ராமை மறந்து விட்டேன். காரணம் அதன் மேல் வந்த எரிச்சலால். நீங்கள் கேட்பதற்காக நான் ஏதாவது ஒரு பதிவைச் சொல்ல விரும்பவில்லை.

   எனக்குப் பதிவுலகில் பல பட்டங்கள் கிடைத்துள்ளன. ஆனால் திருச்சி தாரு கொடுத்த பட்டத்திற்குள் அனைத்தும் அடங்கி விட்டன. மிக்க நன்றி, தாரு.

   நீக்கு
 5. எந்த ப்ரோக்ராம் என்று சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே.பொதுவாக ஹோம் பேஜாக கூகிள் தேடுதல் பக்கத்தை வைத்திருப்பது வழக்கம். எதையாவது டவுன்லோட் செய்யும்போது கூடவே ஒட்டிக்கொண்டு வரும் சர்ச் இஞ்சின்கள் முதல் பக்கத்தை தன பக்கமாக மாற்றிக் கொள்கின்றன. இதை பழைய நிலைக்கு கொண்டுவர பல வழிமுறைகளை கையாள வேண்டும். இதுவும் ஆட்வேர்களின் ஆட்டம்தான்
  புதிய முயற்சிகள் செய்யும் உங்கள் ஆர்வக் கோளாறு ஆச்சர்யப் படவைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி செய்தால் அது தனிநபர் தாக்குதலாக ஆகும். அது பதிவுலக சட்ட விரோதம்.

   நீக்கு
 6. ஐயா

  தாங்களுடைய கணினியில் விண்டோஸ் கூட லினக்ஸ் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். லினக்ஸ் இல் வைரஸ் தொந்தரவு கிடையாது. தவிர எல்லாமும் இலவசம் தான்.

  --
  Jayakuma

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவசங்களில் உள்ள தீமைகளைப் பற்றித்தானே இவ்வளவும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்கிறீர்களே?

   நீக்கு
  2. It seems that you don't know about Linux. Linux is an Operating system which is open source and is supported by community of persons who do it as a competition for windows for which you have to pay. There are no viruses in any Linux operating system supplied by any body.

   Jayakumar

   நீக்கு
  3. லினக்சில் வைரஸ் தொல்லை மிகவும் குறைவு என்றே பலரும் கூறுகின்றனர் காரணம் அதை பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. அதனால் அதன் மீதான வைரஸ் ப்ரோக்ராம் எழுத ஆர்வம் காட்டுவதில்லை.

   நீக்கு
  4. லினக்ஸ் நல்ல புரொக்ராம்தான். உண்மைதான். ஆனால் இவ்வளவு நாள் விண்டோசில் பழகிவிட்டு அதற்குப் போனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும். தவிர தெரியாத தேவதையை விட தெரிந்த சைத்தானே மேல் என்றுதான் பெரும்பலானோர் பழகியிருக்கிறோம்.

   நீக்கு
  5. I am sorry to intervene again. Both Linux and Windows can be installed in a single computer by making another partition for Linux. You can use both and also transfer files between. I use Linux for internet purpose including browsing and mail and use windows for other purpose like Word documents spread sheets etc. Firefox in Linux is good and fast and sometimes forewarns about the peril.

   And also I use Linux for reading other's CD and USB and other such standalone inputs so that no virus can come in.

   I am sure once you start using Linux you will love it.

   Thanking you for the patience.

   Jayakumar

   நீக்கு
  6. நன்றி, ஜெயகுமார். லினக்ஸ் நிறுவ முயற்சிக்கிறேன்.

   நீக்கு
  7. லினக்ஸ் தங்களுக்கு எத்தனையாவது பொண்டாட்டி என்று சொல்ல முடியுமா?

   சேலம் குரு

   நீக்கு
  8. லினக்ஸ் உபயோகிப்பவர்கள் விண்டோஸ் உபயோகிப்பாளர்களை ஒப்பிடுகையில் மிக குறைவு. காய்ந்த மரத்தில்தானே கல்லடி படும். விண்டோஸ் மரம் காய்த்து விட்டது. இன்னமும் லினக்ஸ் செடியாகத்தான் இருக்கிறது காரணம் விளம்பரம் என்ற உரம் போடாததுதான்.

   திருச்சி காயத்ரி மணாளன்

   நீக்கு
  9. தமிழ்நாட்டில் இலவசம் என்றாலே டாஸ்மாக்தான் நினைவுக்கு வருகிறது. டாஸ்மாக்கில் முக்காவாசி பேரை கெடுத்துவிட்டு கொஞ்சம் பேருக்கு இலவசம் வழங்குகிறார்கள்.
   அது போல கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும் ப்ரோக்ராம்கள் இலவசம்தான்.ஆனால் அது கொடுத்துவிடும் வைரஸ் டாஸ்மாக் மாதிரி.

   இலவசம் என்றாலே எனக்கு ஒண்ணு எங்கப்பாக்கு ஒண்ணு என்று கேட்கும் நமது நாட்டில் இதை ஒழிக்கவே முடியாது போலிருக்கிறது.

   திருச்சி தாரு

   நீக்கு
  10. புதுப்பொண்டாட்டி இப்படி வலுக்கட்டாயமாக வந்து என்னை கட்டிக்கோ கட்டிக்கோ என்று சொன்னால் யாருக்குத்தான் கட்டிக்க மனசு வராது. அநேகமாக அடுத்த பதிவில் கோவைகவுண்டர் இந்த பதிவு லினக்ஸ் வழியாக போட்டதாக்கும் என்ற கமெண்டுடன் வரும் என்று நினைக்கிறேன்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  11. //லினக்ஸ் தங்களுக்கு எத்தனையாவது பொண்டாட்டி என்று சொல்ல முடியுமா?//

   இதெல்லாம் இனிமேல் கணக்கு வைத்து கட்டுப்படியாகாது, சேலம் குரு.

   நீக்கு
 7. அது எந்த மென்பொருள் ,எந்த வலைத்தளத்தில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.கணிணியில் anti virus தரமான இருந்தால் மென்பொருளை நிறுவும் போது எச்சரித்து , அழித்து விடுமே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த மென் பொருளாக இருந்தாலும் அது நமக்குத்தேவையா என்று முதலில் பார்க்கவும். பிறகு யாரேனும் அதை உபயோகித்து பலனடைந்திருக்கிறார்களா என்று விசாரிக்கவும். பதிவில் எழுதினால் பலரும் பதில் கூறுவார்களே. அதன் பிறகு அதை தரவிறக்கி உபயோகிக்கவும். இதுதான் சிறந்த வழி.

   நீக்கு
  2. அய்யா அவர்களே அதற்காத்தான் அந்த மென்பொருள் பெயரை கேட்கிறோம். நீங்கள் சொன்னால்தானே அதைப்பற்றி விசாரிக்கமுடியும். அதனால் தயவு செய்து எங்கள் கணினியும் பழுது அடைவதற்கு முன்பு அப்த சிதம்பர ரகசியத்தை சொல்லுங்களேன்

   சேலம் குரு

   நீக்கு
 8. எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். மென்பொருள் அவசியத்தேவையா என்று யோசித்து கணிணியில் நிறுவுவது சாலச்சிறந்தது.

  பதிலளிநீக்கு
 9. நல்லவேளையாக நான் இப்படிப்பட்ட வழிகளுக்குப் போவதில்லை!

  //"எல்லோருக்கும் கௌளி சொல்லுமாம் பல்லி, அது விழுந்ததாம் கழுநீர்ப் பானையில்"//

  மறந்துபோன ஒரு சொலவடை! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க கவுண்டராங்காட்டியும் இப்படிப்பட்ட சொலவடைகள் சொல்கிறார். இன்றைய எழுத்தாளர்கள் நமது தமிழ் மரபு வந்த சொலவடைகளை எல்லாம் மறந்தே போய்விட்டார்கள். அடுத்த தலிமுறைக்கு சரியாக போய் சேரவேண்டுமே என்ற கவலை எனக்கு கொஞ்சம் உண்டு. அதற்கு என்ன செய்யலாம் என்று நமது கோவை கவுண்டர் அடுத்த பதிவில் போட்டால் நன்றாக இருக்கும்.

   சொலவடைக்கவலையுடன்

   காயத்ரி மணாளன்

   நீக்கு
 10. பயனுள்ள தகவல் நன்றி. இப்படிதான் நான் இலவச ப்ரோக்ராம் என்று ஒன்றை இன்ஸ்டால் செய்ய கூடவே ஒரு ஹோம் பேஜ் (http://www.alnaddy.com/?aid=1004-3d) வந்து ஒக்கார்ந்து கொண்டு விட்டது நானும் அதை எப்படியெல்லாமோ எடுத்து பார்கிறேன் முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

  M. செய்யது
  Dubai

  பதிலளிநீக்கு
 11. உண்மைதான்! தொழில்நுட்ப பதிவர்கள் சொல்லும் சாப்ட் வேர் நமக்குத்தேவையா என்று ஆராய்ந்து தரவிறக்க வேண்டியது அவசியம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் நமக்கு என்ன தேவை என்று தெரிந்து கொண்டால் பிறகு அது ஏதாவது பதிவுகளில் உள்ளதா என்று பார்க்கலாம். அதை விடுத்து தொழில்நுட்ப பதிவர்கள் சொல்லும் சாப்ட் வேர் நமக்குத்தேவையா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் அது தேவை இல்லை என்ற முடிவுக்கு வரவே முடியாது. இலவசம் வேறு இல்லையா? மனம் ஊஞ்சலாடத்தான் செய்யும். எனவே நமக்கு என்ன தேவையோ அதை தேடினால், நல்லது கேட்டது அதில் உள்ளதா என்று ஆராய்வோம். இல்லையென்றால் கிடக்கட்டும் கழுதை என்று பதிவிறக்கம் செய்து விட்டு பிறகு லோல் பட வேண்டியதுதான்.

   சேலம் குரு

   நீக்கு
 12. மிகவும் பயனுள்ள எச்சரிக்கையுடன் கூடிய ஆலோசனைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. தகவலுக்கு நன்றி ஐயா!நானும் சூடு கண்ட பூனைதான்!

  பதிலளிநீக்கு
 14. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்பது போல எத்தனை தடவி கையை சுட்டுக்கொண்டாலும் பதிவிறக்கம் செய்வதை விடவே முடியாது. இதாவது வைரஸ் இல்லாமல் இருக்காதா என்ற நப்பாசைதான் காரணம். அடிபட்டவுடன் "நாளை முதல் குடிக்க மாட்டேன்"என்று சபதம் ஏற்போம். ஆனால் "விடாது கருப்பு" என்கிற மாதிரி அந்த நப்பாசை நம்மை விடாது. இதுதான் வாழ்க்கை. பதிவிறக்கங்களும் கணினியை வைரஸ் அட்டாக் செய்வதும் நாம் கணினி டாக்டரை அணுகுவதும் என்றும் நடக்கும் தொடர்கதைதான். இதெல்லாம் பிரசவ வைராக்கியம் போலத்தான்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 15. சில சமயம் நமக்கு graphics editor,videoplayer,dvdshrink pdf to doc coverter போன்ற மென்பொருட்கள் தேவைப்படலாம். அப்போது download.com,tucom போன்ற நம்பகமான தளங்களிருந்து தரவிறக்கம் செய்யலாம். DD போன்ற நண்பர்கள் அத்தகு நம்பத்தக்க தளங்களின் பெயர்களை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
  அய்யா குறைந்த பட்சம் எந்த தளத்திலிருந்து download செய்தாரோ அந்த பதிவாளற்கு நேரடியாக தமது அனுபவத்தை சொல்லிவிட்டால் அனைவருக்கும் ஏதுவாக இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு பாபு,
   என்னுடைய இந்தப் பதிவை அவரும் படித்திருப்பார் என்று நம்புகிறேன். ஒரு விஷயம் கவனித்தீர்களா? தமிழ்மணம் திரட்டியில் இன்று தொழில் நுட்பப் பதிவுகள் ஒன்றையும் மாணவில்லை.

   நான் ஒன்று செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த தொழில் நுட்பப் பதிவுகளை மாதம் ஒரு முறை ஆய்வு செய்து ஒரு தணிக்கைப் பதிவு போடலாம் என்று இருக்கிறேன். பதிவுலக நண்பர்களுக்கு ஒரு சேவையாக இது அமையும். அதே சமயம் தொழில் நுட்பப் பதிவர்களும் பொறுப்பான வகையில் மக்களுக்குப் பிரயோஜனமான தொழில் நுட்பங்களையே வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

   நீக்கு