திங்கள், 15 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 4

                                                 

                                                    

அய்யப்பன் புலி மீது வருகிறார். நாம் சிங்கத்தின் மீது ஏறி சவாரி செய்வோம்
உங்கள் டேஷ்போர்டு சென்று Template பட்டனை அழுத்தி கீழே தெரியும் ஸ்க்ரீன் வரை வந்து விட்டீர்களா? இது வரை செய்ததெல்லாம் ஜுஜுபி. இனிமேல் செய்யப் போவதுதான் உண்மையில் கம்ப்யூட்டர் மூளையில் கைவைப்பது. கொஞ்சம் கை நடுங்கினாலும் பேஷன்ட் குளோஸ்.



இதில் இருப்பவைகளை எல்லாம் கொஞ்சம் சாவதானமாகப் பார்த்து மனதில் இருத்திக்கொள்ளவும்.

இடது பக்கம் My Blogs என்று இருப்பவைகளுக்கு கீழே இருக்கும் பல பட்டன்களில் Template என்ற பட்டனை அழுத்தி நாம் இந்த ஸ்கிரீனுக்கு வந்திருக்கிறோம்.

இதில் உள்ள Backup/Restore பட்டனை அழுத்திக் கிடைத்த பைலை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

இப்போது Edit HTML என்ற பட்டனை அழுத்தவும். கீழே பார்க்கும் ஸ்கிரீன் வரும்.


கட்டத்திற்குள் இருப்பவைதான் நம் பிளாக்கின் புரொக்ராம். இந்தக் கட்டாத்திற்கு மேலே பல பட்டன்கள் இருப்பதை நன்றாகக் கவனிக்கவும். முதல் பட்டன்தான் "ஒன் ஸ்டெப் பேக்"  பட்டன். தொடைநடுங்கி வீரர்களுக்கானது. அவர்கள் இந்த பட்டனை அழுத்தினால் வீட்டிற்குப் போய் சுகமாகப் போர்த்திக்கொண்டு தூங்கலாம்.

அடுத்த பட்டன் நம்மைப்போன்ற சிங்கங்களுக்கானது. டெம்ப்ளேட்டுக்குள் நம் வேலை முடிந்ததும் இந்த Save Template  பட்டனை அழுத்தினால் கொஞ்ச நேரம் கழித்து எல்லாம் நார்மலுக்கு வந்து விடும். அவ்வளவுதான் ஆபரேஈன் சக்சஸ் பாடவேண்டியதுதான்.

ஆபரேஷனைப் பார்ப்போமா. இந்த கட்டத்திற்குள் உங்கள் கர்சரைக் கொண்டு போய் ஒரு லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் இந்த டெம்ப்ளேட் பெட்டிக்குள் இருக்கிறது. ஒரு சின்ன வேலை செய்து பார்ப்போமா?

இப்போது Ctrl + F  இரண்டு கீ களையும் ஒன்றாக அழுத்தவும். இப்போது இந்த செம்ப்ளேட்டின் வலது மேல் மூலையில் ஒரு சிறிய நீள் சதுரக் கட்டம் தெரிகிறதல்லவா? அதற்குள்   line-height என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். இப்போது டெம்ப்ளேடில் 398 வது லைன் தெரிகிறதா? அந்த லைனில்  line-height:   என்கிற வார்த்தை கொஞ்சம் மாறுபட்ட கலரில் தெரிகிறதா? அதற்கு வலது பக்கம்  1.2 என்று தெரிகிறதா? தெரிந்தால் நீங்கள் பாஸ். அதை ஒன்றும் செய்யவேண்டாம். இப்போது வலது மேல் மூலையில் உள்ள கட்டத்திற்கு கர்சரைக் கொண்டு போய் வைத்து அந்த  line-height என்கிற வார்த்தையை அழியுங்கள்.

அந்த இடத்தில் கீழ்க்கண்ட வரியைக் காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/>
பிறகு என்டரைத் தட்டவும். இப்போது இந்த வரி அதாவது 10 வது லைன் ஹைலைட் ஆகி உங்களுக்குத் தெரியும். அந்த லைனின் கடைசியில் கர்சரைக்கொண்டு போய் வைத்து லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் அந்த இடத்தில் கண்ண்டித்துக் (Blinking) கொண்டிருக்கும்.
இப்போது என்டரைத் தட்டவும். உடனே ஒரு புது லைன் உருவாகும். அதற்கு 11 என்ற எண் இருக்கும். கர்சர் இந்த லைனின் ஆரம்பத்தில் இருக்கும்.
இப்போது கீழே கொடுத்துள்ளதைக் காப்பி செய்யவும். (Ctrl +c)

<link expr:href="data:blog.canonicalUrl" rel="canonical"/>
<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>

பிறகு டெம்ப்ளேட்டுக்குள் சென்று பார்க்கவும். கர்சர் அதே இடத்தில் (அதாவது 11 ம் லைனின் ஆரம்பத்தில்) இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். இப்போது பேஸ்ட் செய்யவும். (Ctrl +v)
அவ்வளவுதான். ஆபரேஷன் முடிந்தது. கர்சரைக் கொண்டு போய் இந்த டெம்ப்ளேட் கட்டத்திற்கு மேலே ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும்
என்ற பட்டனை அழுத்தவும். கொஞ்ச நேரம் ஆகும். பொறுமையாக காத்திருக்கவும். சேவ் செய்யும்போது ஏதாவது மாற்றுச்செய்தி வந்தால் டெம்ப்ளேட் மேல் உள்ள 




என்ற பட்டனை அழுத்தி  "எஸ்" ஆகிவிடலாம். நான் சொல்லியவற்றை மாற்றமில்லாமல் செய்திருந்தால் அந்த இக்கட்டு வராது.
அவ்வளவுதான். உங்கள் பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை ஜோராக வேலை செய்யும். ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
உங்களை கடவுளும் பழனி. கந்தசாமியும் கட்டாயம் காப்பாற்றுவார்கள். வெற்றி நமதே.
                                             

23 கருத்துகள்:

  1. இது தமிழ் மணம் ஓட்டுப்படையைப் பெற மட்டுமா, டெம்ப்ளேட்டும் மாறுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழ்மணம் ஓட்டுப் பட்டையைப் பெற மட்டுமே. டெம்ப்ளேட் மாற்றுவது ஒரு தனி டெக்னிக்.

      நீக்கு
  2. விரைவில் செய்து பார்க்கின்றேன் ஐயா ! ஐய்யப்பனும் கந்தசாமி ஐயாவும் வழிகாட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இனி சிங்கங்களுக்கு உங்களின் இந்த தொடரின் இணைப்பை அவர்களுக்கு தெரிவிப்பேன்... நன்றி ஐயா...

    // அந்த இடத்தில் கீழ்க்கண்ட வரியைக் காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள். // என்பதில் அந்த வரி வரவில்லை... இதோ :

    <b:include data='blog' name='all-head-content'/>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள தனபாலன்,
      இந்த நிரல் என்னுடைய கணினியில் தெரிகிறதே. ஏன் உங்கள் கணினியில் தெரியவில்லை? என்னவென்று பார்க்கவேண்டும்.

      இந்த மேட்டர் எல்லாம் உங்கள் பதிவுகளிலிருந்து எடுத்ததுதான். என்ன, நான் வாத்தியார் ஆனதால் மற்றவர்களுக்குப் புரிகிறமாதிரி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறேன். எப்படி இருந்தாலும் நான் வாத்தியார் மட்டுமே. உங்கள் மாதிரி தொழில் நுட்ப வல்லுநர் இல்லை. ஆகவும் முடியாது. ஏதாவது சிக்கல் வந்தால் உங்களைத்தான் கை காட்டுவேன். அதுதான் என்னால் முடியும்.

      ஆகவே நீங்க்ள இருக்கிறீர்கள் என்ற தைரியத்தினால்தான் இந்த மாதிரி பதிவுகள் போடுகிறேன். கைவிட்டு விடாதீர்க்ள.

      பழனி. கந்தசாமி.

      நீக்கு
    2. இப்போது தெரிகிறது...

      அப்புறம் நன்றி நன்றி நன்றி ஐயா...

      நீக்கு
  4. விளக்கமாக சொல்லிவிட்டீர்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  5. அருமையான செயல் முறை விளக்கம். விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. உங்களின் அடுத்த பதிவில் இதையும் தெரிவித்தால் அனைவருக்கும் உதவும் ... அது என்னவென்றால் : மேலே உள்ள எனது கருத்துரையில் சொன்ன அந்த வரி "script"-யை எவ்வாறு கருத்துரையில் இட்டால் வரும்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்னவென்று எனக்குப் புரியவில்லையே, தனபாலன்.

      நீக்கு
    2. அதாவது ஏதேனும் விடுபட்ட வரியை (script) கருத்துரைப் பெட்டியில் நீங்கள் இட்டு பாருங்கள்... கருத்துரையில் வருகிறதா...?

      நீக்கு
  7. பயனுள்ள பகிர்வு. அண்மையில்தான் தமிழ் மணத்தில் இணைந்துள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் எளிமையாக புரியும்படி இருந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. #உங்களை கடவுளும் பழனி. கந்தசாமியும் கட்டாயம் காப்பாற்றுவார்கள். # ரெண்டு பேரும் கைவிட்டாலும் கவலை இல்லை ...நம்ம DD இருக்காரே :)
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ரெண்டு பேருமே DD யைத்தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

      நீக்கு
  10. தமிழ் மணம் ஓட்டுப்பட்டை பற்றி, பொறுமையாக குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு, பொறுமையாக யாவருக்கும் அவற்றை விளக்கி, பொறுமையாக யாவரையும் உங்களைத் தொடரச் செய்த அய்யா அவர்களுக்கு நன்றி.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  11. சும்மா இப்படிக்கா வந்தேன்,. இப்படியெல்லாம் எழுதுவீங்கன்னு இப்பதான் தெரியும் ..

    பதிலளிநீக்கு
  12. நல்லதோர் விளக்கம்
    உள்ளன்போடு உரைத்தீர்!
    நன்றி அய்யா!
    புதுவை வேலு
    எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)18/12/2014

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல் சகோ ......

    மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

    பதிலளிநீக்கு