புதன், 10 டிசம்பர், 2014

ஒரு சின்ன சின்னவீட்டுப் பிரச்சினை

டிஸ்கி - இந்தப் பதிவை பெண்களும் 60 வயதுக்குக் குறைந்தவர்களும் படிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு என் மேல் வீண் பழி சுமத்தக்கூடாது.


தி.தமிழ் இளங்கோபுதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:45:00 முற்பகல் IST  அவர்கள் என் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

வலைப்பதிவில் தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டை நிறுவுவது என்பது ஒரு பெரிய வித்தையாகத்தான் இருக்கிறது. இதற்காக நான் முதன் முதல் தொடங்கிய ஒரு வலைத்தளத்தையே பலி கொடுக்க வேண்டி இருந்தது. பேசாமல் அவர்கள் FACEBOOK இல் உள்ளது போல LIKE முறையைக் கொண்டு வரலாம். எல்லோரும் எளிமையாக ஓட்டளிப்பார்கள்.

என்னுடைய பதில்

எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான வழியை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டு மூன்று நாட்கள் பொறுக்கவும். அதற்குள் ஒரு சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை. முடித்து விட்டு வருகிறேன்.

அந்தச் சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை என்னவென்றால்:

தஞ்சாவூர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் நன்றாகத் தெரியும். அந்த ஊரில் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது இருந்தால்தால் ஊருக்குள் அவருக்கு மரியாதை. அதற்கு மேல் இருந்தால் எண்ணிக்கைக்கு தக்க மாதிரி மதிப்பு கூடும். மற்ற ஊர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் சிறியதாக ஒரு சொந்த வீடு என்றுதான் புரியும்.

நான் ஏற்கெனவே இரண்டு சின்ன வீடுகள் வைத்திருக்கிறேன். மூன்றாவது  மூன்று நாளைக்கு முன்பாகத் தான் அமைந்தது.

என்னுடைய கம்ப்யூட்டர் மானிட்டர் மண்டையைப் போட்ட விவரம் எல்லோருக்கும் தெரியும். புது மானிட்டர் வாங்கப் போனபோதுதான் இந்த மூன்றாவது சின்ன வீட்டை செட் செய்தேன். 

"கிண்டில் புக் ரீடர்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அமேசான்காரன் அடிக்கடி விளம்பரம் போடுகிறான். எனக்கு அதன் பேரில் ஒரு சபலம். அந்தக் கம்ப்யூட்டர் கடையில் "கிண்டில் ரீடர்" இருக்கான்னு சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.

அவன் உடனே ஒரு பெட்டியைத் திறந்து இங்கே பாருங்கள், இது அமேசான்- காரன் டெமோவிற்காக அனுப்பியது. இதன் ஒரிஜினல் விலை 21000 ரூபாய். இதை நாங்கள் இப்போது 8999 ரூபாய்க்கு கொடுக்கிறோம். ஏறக்குறைய புதுசேதான் சார், என்று சொல்லி அதனுடைய வீரதீரப் பிரதாபங்களை- யெல்லாம் டெமோ பண்ணிக் காட்டினான்.

எனக்கு அதன் பேரில் "கண்டவுடன் காதல்" என்பார்களே அது போல் காதல் பிறந்து விட்டது. சரி பேஃக் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதை வாங்கி வந்தவுடன் மூன்று நாளாக அதனுடன் xxxxxx* நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நான் மூன்றாவது சின்னவீடு செட்அப் பண்ணின கதை.

முதல் இரண்டு சின்ன வீடுகளும் என்னவென்று சொல்லாவிட்டால் கதை முற்றுப் பெறாதல்லவா. முதல் சின்ன வீடு - கம்ப்யூட்டர். இரண்டாவது சின்ன வீடு - ஸ்மார்ட் போன். 

ஆகவே புதுப்பெண்டாட்டி மோகம் குறைய இன்னும் இரண்டொரு நாள் ஆகும். அதற்கப்புறம் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையைப் பட்டை கிளப்புகிறேன்.

*  இங்கே உங்களுக்குப் பிடித்த வார்த்தையைப் போட்டுக் கொண்டு படியுங்கள்.

14 கருத்துகள்:

  1. //எனக்கு அதன் பேரில் "கண்டவுடன் காதல்" என்பார்களே அது போல் காதல் பிறந்து விட்டது. சரி பேஃக் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதை வாங்கி வந்தவுடன் மூன்று நாளாக அதனுடன் xxxxxx* நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நான் மூன்றாவது சின்னவீடு செட்அப் பண்ணின கதை.//

    அன்பான வாழ்த்துகள். பொறாமையாக உள்ளது. மேலும் மேலும் தங்க்களுக்குச் சின்ன வீடுகள் அமையட்டும். வாழ்க ! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாங்க, இருக்கிறதே போதுங்க, இதுகள சமாளிக்கிறதே பெரும்பாடா இருக்குதுங்க.

      நீக்கு
  2. * xxxxxx = 'ஜிஞ்சாமிர்தம்'
    என நான் போட்டுக்கொண்டேன்.
    :)))))))))))

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவின் தலைப்பையும், தமிழ்மணத்தில் மேலெழுந்த வாரியாகத் தெரியும் வரிகளில் எனது பெயரையும் பார்த்தவுடன் பயந்து விட்டேன். நல்லவேளை நீங்கள் “சின்ன வீடும் ...... இளங்கோவும்” என்று தலைப்பை வைக்கவில்லை. ( இங்கு எனது பெயரில் முன் தமிழ் போட்டுக் கொள்ளவில்லை அப்புறம் கூகிளில் வந்து கொண்டே இருக்கும்)

    வலைப் பதிவினில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தினை அறிந்திட மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அமேசான் கிண்டில் (AMAZON KINDLE) பற்றிய தங்கள் அனுபவங்களையும், அதை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். டேப்ளட் பிசி (TABLET PC ) யைவிட இது சிறப்பானதா என்றும் சொன்னால் நல்லது.
    த.ம 2.

    பதிலளிநீக்கு
  4. நல்ல உத்தி சார். பெண்களும் இளைஞர்களும் படிக்க வேண்டாம் என்று சொல்லி ஒரு அழகிய மங்கையின் படமும் போட்டால் படிக்காதவர்களையும் வலை போட்டு இழுக்கும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  5. உங்கள் வாய்க்கும் மெல்ல ஏதேனும் அவல் கிடைத்துவிடுகிறது! நான் சொல்வது இந்த ‘கிண்டில் புக் ரீடரை’. திரு தமிழ் இளங்கோ அவர்கள் விடுத்த வேண்டுகோளையே நானும் வைக்கிறேன். விரைவில் அது பற்றி ஒரு பதிவு
    வெளியிடுங்களேன்.

    சின்ன வீடு பற்றி படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. “Minor Irrigation” என்பதை முதலில் சிறு நீர்ப்பாசனம் என்று மொழி பெயர்த்துவிட்டு பின்பு அது வேறு பொருள் தருகிறதே என்று சிறிய நீர்ப்பாசனம் என்று மாற்றினார்களாம்.

    பதிலளிநீக்கு
  6. அய்யா, மூன்றாவது சின்ன வீடு Amazon Kindle செட் அப் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பதற்கு tablet PC சரி வராது. கண்களை சோர்வடய செய்யும்.

    புத்தகங்களை தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் படிக்க Kindle சரியான தேர்வு.

    வெறுமனே வலையில் மேய்வதற்கும் போட்டோ, வீடியோ பார்ப்பதற்கும் Tablet உகந்தது.

    பதிலளிநீக்கு
  7. ஐயா

    I am using this kindle for the last two years. Kindle books and Kindle audio books can be purchased from Amazon only(AZW, Azw3 etc.). But PDF and mobi books can also be read in it.

    Gudenberg.org is a free book site which has a stock of about 45000 free e-books.

    For tamil books some useful sites are www.projectmadurai.org/, tamilvu.org, freetamilbooks.com. azhiyachudargal.blogspot.com, jeyamohan.in, etc.


    One small advice. Please put on the wireless sparingly. Lot of advertisements will creep in and sometimes virus also, which will be very difficult to find and eliminate.

    We can not change the battery as we change battery in mobile phones. If the battery is over buy a new kindle.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள். வாங்கும் எண்ணம் அவ்வப்போது வரும்.... ஆனால் வாங்கவில்லை இதுவரை! :)

    பதிலளிநீக்கு