ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அமேசான் கிண்டிலும் டேப்ளெட்டுகளும்

       

                          டேப்ளெட்                                   அமேசான் கிண்டில்

நான் ஒரு அமேஸான் கிண்டில் வாங்கினதைப் பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு எழுதியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் தெரியாதவர்கள் இங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.

அதில் தமிழ் இளங்கோ கிண்டிலுக்கும் டேப்ளெட்டுக்கும் பயன்பாட்டில் என்ன வித்தியாசம் என்று எழுதுங்களேன் என்று கேட்டிருந்தார். பதிவு எழுத டாபிக் கிடைக்காமல் காய்ந்து கொண்டிருப்பவனுக்கு இது போதாதா? அதனால்தான் இந்தப் பதிவு.

இரண்டும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவைகளின் பயன்பாடுகள் வெவ்வேறு. டேப்ளட் ஒரு மினி கம்ப்யூட்டர். கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இதில் செய்யலாம். இன்டெர்நெட் மேயலாம். கூடுதலாக போன் மாதிரியும் கேமரா மாதிரியும் பயன்படுத்தலாம். பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். இன்னும் எத்தனையோ ...லாம், ...லாம். ஆனால் கொள்ளளவு (Capacity) கம்மி. பேட்டரி லைஃப் கம்மி.

டேப்ளெட்டுகள் எத்தனையோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் கிண்டில் அமேசான் மட்டுமே தயாரிக்கிறது.

அமேசான் கிண்டில் என்பது அமேசான்காரனின் விளம்பரக் கருவி.முக்கியமாக புக் ரீடர் மட்டுமே. கண்களுக்கு சோர்வு வராமல் புத்தகங்களைப் படிக்கலாம். கேம்ஸ் விளையாடலாம். பாட்டுக் கேட்கலாம். வை-பை மூலம் மட்டுமே இன்டர்நெட் தொடர்பு கிடைக்கும். போன் இல்லை. கேமரா இல்லை. பேட்டரி லைஃப் நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தாங்கும்.

நான் இதை வாங்கியது புத்தகங்கள் படிக்க மட்டுமே.

 பத்திரிகைகளில் விளம்பரம் வருவது மாதிரி இதில் அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று விளம்பரங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும். இது அமேசான்காரனின் விளம்பர உத்தி.

மொத்தத்தில் டேப்ளெட் குடும்ப்பப் பெண். கிண்டில் விலைமாது.

18 கருத்துகள்:

  1. இவற்றிற்கான வேறுபாட்டினை நான் இதுவரை அறியவில்லை. விளம்பரங்களைப் பார்க்கும்போது குழப்பம் இருக்கும். தற்போது தங்களது பதிவு மூலம் தெளிவு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  2. கிண்டில் பார்த்திருக்கிறேன். கௌதமன் உட்பட நிறைய பேர் வைத்திருக்கிறார்கள். நான் வாங்கவில்லை. டேப்லட் வாங்கும் ஐடியா இல்லை!

    பதிலளிநீக்கு

  3. //மொத்தத்தில் டேப்ளெட் குடும்பப் பெண். கிண்டில் விலைமாது//

    முடிந்தால்...இது பற்றியும் விளக்கமாக ஒரு பதிவு போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கல்யாணம் ஆகியிடுச்சா? கல்யாணம் ஆகியிருந்தா இந்தக் கேள்விக்கு உங்களுக்கே விடை தெரியும். ஆகாவிட்டால் இந்தக் கேள்வி அவசியமேயில்லை.

      நீக்கு
    2. நானும் வயதானவன்தான். ‘குடும்பப் பெண்,.. விலைமாது’ பற்றி விளக்கம் தரச் சொல்லிக் கேட்பேனா?

      ’டேப்ளெட்’ குடும்பப் பெண் போல; ‘கிண்டில்’ விலைமாது போல என்று சொல்லியிருக்கிறீர்களே, அதற்குத்தான் விளக்கம் தரச் சொன்னேன் [உண்மையில் எனக்குப் புரியாததால்; இவற்றில் எதையும் நான் பயன்படுத்தியதில்லை].

      தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் கேள்வி கேட்டதற்குத் தயவுசெய்து மன்னியுங்கள்.

      நீக்கு
    3. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது, பரமசிவம். டேப்ளட்டில் முதலில் கொடுக்கும் விலையுடன் சரி. அப்புறம் எதற்கும் காசு கொடுக்கவேண்டியதில்லை. கிண்டிலில் எந்தப் பக்கம் எதற்காகப் போனாலும் காசு, காசு என்றே பறக்கும். இதை வைத்துத்தான் அந்த உவமையைக் கையாண்டேன்.

      நீக்கு
    4. அது சரிங்க, பரமசிவம், உங்க பிளாக்கில கருத்துப் பெட்டி இருக்கா?

      நீக்கு
    5. கருத்துப்பெட்டி இருக்குங்க. பூட்டி வைத்திருக்கிறேன்.

      என்னுடைய சில பதிவுகளுக்கு, mooderation வைத்தாலும், மிகவும் அசிங்கமான பின்னுட்டங்கள் வருது. சகித்துக்கொள்ளும் மனப் பக்குவம் எனக்கில்லை.

      ‘மூடர் உலகம்’[http://muudarulakam.blogspot.com] என்னும் என் வலைப்பதிவில் வெளியான சில பதிவுகளைக் கீழ்த்தரமாக விமர்சித்த சிலர் கூகிளுக்குப் புகார் அனுப்பியிருக்கக் கூடும். அதன் பேரில் அந்த வலைப்பதிவு [கருத்துச் சொல்லும் முறையில் நானும் தவறு செய்திருக்கலாம்] Remove செய்யப்பட்டது.

      பூட்டி வைப்பதால், நண்பர்களின் பயனுள்ள கருத்துகளையும், பதிவில் நான் செய்யும் பிழைகளையும் அறிய முடியாமல் போகிறது. எனக்கு இது பெரிய இழப்புதான்.

      வேறு வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை

      மற்றபடி, கருத்துச் சொல்பவர்களை அலட்சியப்படுத்தும் எண்ணம் எனக்குக் கொஞ்சமும் இல்லை.

      இதைச் சொல்வதற்கு வாய்ப்பளித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இரண்டிற்குமான வித்தியாசத்தைத் தங்கள் மூலம்தான் அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. கிண்டிலுக்கும் டேப்ளெட்டுக்கும் பயன்பாட்டில் என்ன வித்தியாசம் என்பதை உங்கள் பாணியில் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கிண்டில் பற்றி கிண்டி கிழங்கெடுத்து சொன்ன தகவலுக்கு நன்றி :)
    த ம +1

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு ... இந்த இரண்டுமே எனக்கு பயனில்லை பயனளிக்காது என்பதை உங்கள் பதிவின் மூலம் கண்டு கொண்டேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு