சனி, 20 டிசம்பர், 2014

ஐரோப்பாவின் சில கோட்டைகளும் பூந்தோட்டங்களும்

Picasa என்ற மென்பொருளை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். உங்கள் கணிணியில் நிறுவியும் இருப்பீர்கள். ஆனால் அதிலுள்ள சில வசதிகளை முழுமையாக உபயோகித்திருப்பீர்களா என்பது சந்தேகமே.

அதில் create என்கிற மெனுவில்  video என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இதை உபயோகித்து ஒரு ஸ்லைடு ஷோ உருவாக்க முடியும். பவர் பாய்ன்ட் ஸ்லைடு ஷோ வேறுமாதிரியானது. பிகாசாவின் ஸ்லைடு ஷோவை நாம் யூட்யூபில் பதிவேற்றலாம். பவர்பாய்ன்ட் ஸ்லைடு ஷோவை யூட்யூபில் பதவேற்ற முடியாது.

நமக்குப் பிடித்த படங்களையும் நமக்குப் பிடித்த பாடலையும் கொண்டு நாம் இந்த ஸ்லைடு ஷோவை உருவாக்கலாம். அப்படி நான் உருவாக்கி யூட்யூப்பில் பதிவேற்றிய ஒரு ஷோவை இங்கே கொடுத்துள்ளேன். கண்டு ரசியுங்கள்.


                          

உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.


15 கருத்துகள்:

  1. அழகாக இருக்கிறது ஐயா...

    ஒவ்வொரு படம் மாறும் விதத்தையும் மாற்றலாம்... படத்திற்கு விளக்கத்தையும் தரலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ...லாம். ...லாம். ...லாம். உடலுக்கும் மனதிற்கும் வயதாகி விட்டதே, தனபாலன். அவை நான் சொன்னபடி கேட்கமாட்டேன் என்றால் நான் என்ன செய்யமுடியும்?

      நீக்கு
  2. Picasa வில் இந்த வசதி இருப்பது தெரியாது ஐயா. தகவலுக்கு நன்றி! தாங்கள் வெளியிட்டுள்ள காணொளியை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நீங்கள் ஒருவர்தான் முயற்சித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பிகாசாவில் மேல் வரிசையில் File Edit View Folder Picture Create என்று இருக்கிறதல்லவா, அதில் Create ஐ அழுத்தினால் வரும் Dropdown Msnu வில் Video இருக்கிறது.

      நீக்கு
  4. முன்பு பயன்படுத்தியதுண்டு. இப்போது பிகாசா பயன்படுத்துவதில்லை!

    காணொளி கண்டு ரசித்தேன்.....

    பதிலளிநீக்கு
  5. உங்கள் ஆர்வம் பல சமயம் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  6. இதில் 38-54 செக்கன் வரை வருவது பிரான்சின் நோர்மண்டி கடலோரம் இருக்கும் ஒரு சிறு மலை. Mont Saint Michel என்பர். நான் 2 தடவை சென்றுள்ளேன். பிரபல சுற்றுலாத் தலம்.
    அங்குள்ள தேவாலயத்தில் இப்போதும் வழிபாடு நடைபெறுகிறது.http://www.ot-montsaintmichel.com/index.htm இதில் மேலதிக விபரத்தை ஆங்கிலத்திலும் படிக்கலாம்.
    3.45 லிருந்து கனடா போலுள்ளது. மலைகள் ,மரங்கள், விலங்குகள் எனக்கு அமெரிக்க நிலமாகத் தெரிகிறது.
    என் கணிப்பில் தவறிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோட்டைகளும் தோட்டங்களும் எங்கு உள்ளன என்று நான் அறியேன். ஒரு டெக்னாலஜிக்காக இந்த படங்களை உபயோகித்தேன். அவ்வளவுதான்.

      நீக்கு
  7. பிகாசா பற்றி இதுவரை நான் அறியவில்லை. தங்கள் பதிவு, காணொளி மூலமாக அது பற்றி அறிந்தேன்.

    பதிலளிநீக்கு