ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்திற்கு நன்றி

                                     
தமிழ்மணம் திரட்டி என்பது தமிழ் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த திரட்டி எவ்வாறு செயல்படுகிறது என்பது பலருக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. எனக்குத் தெரியலைன்னா அது பலருக்கும் பொருந்துமல்லவா?

இது ஏதோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய கம்ப்யூட்டர் செய்யும் வேலை என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அந்த எண்ணம் சரியில்லை, தமிழ்மணம் திரட்டி நம்மைப் போன்ற சதையும், எலும்பும், நல்ல மனச்சாட்சியும் கொண்ட உயிருள்ள மனிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது  என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்டேன்.

காரணங்கள் இரண்டு.

முதல் காரணம்: திரு.தருமி அவர்கள் சில வாரங்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் பல ஆபாசப் பதிவுகள் இடம் பெறுவதைப் பற்றி தமிழ் மணத்திற்கு தெரியப்படுத்தினார். உடனடியாக அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டன.

இரண்டாவது காரணம்: நான் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் உள்ள பல பதிவுகளில் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பதிவை படிக்க முடியாமல் செய்கின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இரண்டு நாட்களிலேயே அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டு, தமிழ்மணம் இப்போது தூய்மையாக்கப்பட்டு விளங்குகிறது.

இத்தகைய உடனடி நடவடிக்கைகளுக்காக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சக பதிவர்கள் அனைவரும் இதை ஆமோதிப்பார்க்ள என்று நம்புகிறேன்.

2015 ம் புத்தாண்டில் தமிழ்மணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

                                         


பதிவுலக நண்பர்கள், நண்பிகள், அனானிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.21 கருத்துகள்:

 1. //இத்தகைய உடனடி நடவடிக்கைகளுக்காக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சக பதிவர்கள் அனைவரும் இதை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.//

  நிச்சயமாக, இந் நடவடிக்கைகளால் தற்போது தமிழ்மணத்தில் துர்நாற்றம் நீங்கி சுகந்தம் வீசுகின்றது.சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 3. தமிழ்மணத்திற்கு நன்றி.
  உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கும் நட்புகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் மணத்திற்கும்
  பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 6. பல புதிய பதிவர்களுக்கு தமிழ்மணம் இணைத்து கொடுத்து விட்டேன்... அவர்களிடமிருந்து இன்னும் தகவல் வரவில்லை... அதுவும் விரைவில் நடந்தால் நன்று...

  பதிலளிநீக்கு

 7. தங்களின் வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும், இந்த தொல்லையை தமிழ்மணத்தின் கவனத்திற்கு எடுத்து சென்ற உங்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக!

  தங்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. இன்னும் தமிழ்மணம் செய்யவேண்டியது ஒன்று உள்ளது .கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக 200க்கும் மேற்பட்டவர் இணைப்பிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கும் இணைப்புக்கான ஒப்புதல் கிடைக்கப் பெறவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது பற்றி தாங்களும் ஒரு தனிப்பதிவு எழுதிப் பாருங்களேன். அப்படி செய்தால் ஒருக்கால் பிரச்சினை தீரலாம் அல்லவா !

   நீக்கு
 9. தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்திற்கு நானும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான பணிதான்! தமிழ் மணத்தின் சேவை தொடரட்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. மணி கட்டிய உங்களுக்கும், அதைச் செயற்படுத்திய நிர்வாகத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 12. தமிழ்மணம் நிர்வாகத்திற்கு உங்களுடன் சேர்ந்து பாரட்டுகளை தெரிவிச்சுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு. இதனை எடுத்துச் சொல்லிய உங்களுக்கும் உடனடியாகச் செயல்பட்டு அத்தகைய அசிங்க பதிவுகளை நீக்கிய தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும்,தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் மிகவும் நன்றி.
  மேலும் 'நிசப்தம்' என்ற அருமையான வலைப்பதிவு தற்சமயம் தமிழ்மணத்தில்
  அதிகம் காணப்படவில்லை;என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. பாராட்டப்பட வேண்டிய விஷயம்...
  வானழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. Yes I express my congratulation to the governing body of the Tamilmanam for their speedy action.
  Hats off for you and others for their initiative in this mater.

  பதிலளிநீக்கு
 17. நமது பதிவுகளை இணையம் வழியே பிரபலப்படுத்தும் தமிழ்மணத்திற்கு உரிய முறையில் சிறப்பு செய்திருக்கிறீர்கள். தங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். த.ம.6

  பதிலளிநீக்கு