வியாழன், 25 டிசம்பர், 2014

டாட்டா, பிர்லா மாதிரி பணக்காரராக ஆகவேண்டுமா?



டாட்டா பிர்லா மாதிரி நீங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக ஆகவேண்டுமா? மேலே உள்ள மாதிரி பங்களாவில் வசிக்கவேண்டுமா? இதோ வெகு சுலபமான வழி.

ரிசர்வ் பேங்க் வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன செக்யூரிடி அம்சங்கள் இருக்கின்றன என்று அவர்க்ள வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் வந்த படங்களை ஒரு காணொளியாகக் கொடுத்துள்ளேன். இந்த செக்யூரிடி அம்சங்கள் இல்லாததால்தான் கள்ள நோட்டுகளை இனம் காண்கிறார்கள்.

அவைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Security Features of Bank Notes:


                     

நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களா? வழி காட்டி விட்டேன். இனி உங்கள் சமர்த்து.

களி சாப்பிடும்போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.

                                     

26 கருத்துகள்:


  1. ஐயா. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! ஆனால் இவைகளை வைத்துக்கொண்டு எப்படி டாட்டா, பிர்லா மாதிரி பணக்காரராக ஆகமுடியும் என சொல்லவில்லையே? தயை செய்து அதையும் விளக்குங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைக் களி சாப்பிட வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க! நண்பர்கள்னா இப்படித்தான் இருக்கோணும்?

      நீக்கு
    2. உங்கள் நண்பர் பின்னே எப்படி இருப்பார். உங்களை மாதிரி நல்லவராகத்தானே இருக்க முடியும். எனவே சொல்வதை தெளிவாக சொல்லிவிட்டால் நாங்கள் புரிந்து கொள்வோம். இன்னமும் எனக்கு கள்ள நோட்டு கண்டுபிடிப்பதற்கு உதவி புரியும் பாதுகாப்பு அம்சங்களுக்கும் ஜெயிலில் களி தின்பதற்கும் உள்ள தொடர்பு விளங்கவேயில்லை. தயவு செய்து இன்னொரு பதிவில் அதை விளக்கினால் நன்றாக இருக்கும்

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    3. நீங்க நோட்டு அடிக்கறப்போ இந்த பாதுகாப்பு அம்சங்களெல்லாம் இருக்கும்படியா பார்த்துக்கொண்டால் சீக்கிரம் டாட்டா, பிரலா ரேஞ்சுக்குப் போயிடலாம். அவ்வளவுதான் மேட்டர். ஆனா நம்ம போலீஸ் கில்லாடிக்கு கில்லாடி. எப்படியும் மோப்பம் புடிச்சு உங்கள உள்ள தள்ளீடுவாங்க. அங்க களி திங்கவேண்டியிருக்கும் என்பதற்காகச் சொன்னேன். ஆனால் இப்பல்லாம் ஜெயில்ல பிரியாணி போடறாங்களாமே? போய்ப் பார்த்துட்டு வரலாமென்று இருக்கிறேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தப்பு, தனபாலன். கோவைக் குசும்பு என்று சொல்லவேண்டும்.

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் : இதற்கு பெயர் தான் குசும்பு...! ஹா... ஹா...

      கந்தசாமி அவர்கள் : தப்பு, தனபாலன். கோவைக் குசும்பு என்று சொல்லவேண்டும்

      சேலம் குரு: அதுவும் தப்பு இதுவும் தப்பு

      திண்டுக்கல் தனபாலன் அவர்களும் கந்தசாமி அவர்களும் : பின்னே எது சரி. நீரே சொல்லுமையா.

      சேலம் குரு: இது கோவை கவுண்டனின் trademark குசும்பு

      திண்டுக்கல் தனபாலன் அவர்களும் கந்தசாமி அவர்களும் : சரியாக சொன்னீரைய்யா

      சேலம் குரு

      நீக்கு
    3. இது சரிதான். இதை நானே கூற நினைத்தேன். ஆனால் அது தற்பெருமையின் பால் படும் என்பதால் விலக்கினேன். (பார்க்க நன்னூல் இலக்கணம்)

      நீக்கு
  3. இந்தக் களி வேண்டாம். திருவாதிரை வரட்டும் அந்தக் களி சாப்பிடுவோம்!

    கள்ள நோட்டைக் கண்டு பிடிக்க 300 ரூபாய்க்கு ஒரு பொருள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நன் வாங்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முன்னூறு ரூபாயை கள்ள நோட்டாக கொடுத்திருந்தால் அந்த பொருள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்திருக்கலாமே
      (சீக்கிரமே களி தின்ன சரியான வழி)

      திருச்சி தாரு

      நீக்கு
  4. மிகவும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். கடைசியில் களியைக் கண்டதும் கொஞ்சம் பயம் வந்தது.

    பதிலளிநீக்கு
  5. சும்மா ரூபாயை திருப்பி வெள்ளி சரிகையை தடவி பார்த்தாலே நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள் . இத்தனை குறியீடுகளை எப்படி சரி பார்ப்பது 😈😈😈

    பதிலளிநீக்கு
  6. இப்போதெல்லாம் ஜெயிலில் களி போடுவதில்லையாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயில் என்றாலே களி தின்பது மட்டும்தான் என்று நினைத்துகொண்டிருக்கிறோம்.
      இங்கே வெளியே மட்டும் என்ன வாழுதாம்?

      ஜெயிலில் முக்காவாசி நேரம் 8"x10" அறையில் இருக்கிறோம்.
      அலுவலகத்திலும் அப்படித்தானே

      ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு (களி என்று சொல்லப்பட்டது அப்போது. ஆனால் இப்போதோ அசைவமும் உண்டு)
      அலுவலகத்தில் மதிய சாப்பாடு மட்டும் மலிவாகக்கிடைக்கும். (அதுவும் எல்லா அலுவலகங்களிலும் கிடையாது)
      காலையும் மாலையும் சாப்பிட (வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ) காசு கொடுத்தாக வேண்டும்.

      ஜெயிலில் நன்னடத்தைக்காக முன்னாடியே வெளியே விட்டு விடுவார்கள்
      அலுவலகத்திலோ நன்றாக உழைத்தால் வேலை பளு அதிகமாகி தாமதமாகத்தான் வெளியே வரமுடியும்.

      ஜெயிலில் உங்கள் அறையை பூட்ட ஒரு காவலாளி இருப்பார்.
      அலுவலகத்திலோ உங்கள் அறையை நீங்கள்தான் திறக்க வேண்டும். இன்னும் சில நேரங்களில் லாக்கர் அரை சாவிகளையும் நீங்கள் வைத்துகொண்டு நீங்கள்தான் திறந்து விட வேண்டும்.

      ஜெயிலில் டிவி பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யலாம்.
      அலுவலகத்தில் வேலையைத்தவிர ஒன்றுமேயில்லை.

      ஜெயிலில் உங்களுகென்று தனி கழிவறை உண்டு.
      அலுவலகத்திலோ ஒரே கழிவறையைத்தான் அனைவரும் உபயோகப்படுத்தவேண்டும்.

      ஜெயிலில் வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டுக்காரர்களும் சொந்தக்காரர்களும் நண்பர்களும் உங்களை வந்து பார்க்க பேச அனுமதி உண்டு.
      அலுவலகத்தில் இதையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியுமா?

      ஜெயிலில் உங்கள் செலவுகள் எல்லாம் அரசாங்கமே செய்யும் (வெளியே இருக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான்)
      அலுவலகம் செல்வதற்கே நீங்கள் செலவு செய்ய வேண்டும். பின்னர் ஜெயிலில் இருப்பவர்களுக்கு செலவு செய்ய உங்களிடம் இருந்து வரியையும் பிடித்துகொள்வார்கள்.

      உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஜெயிலில் போடுவதற்கு முன்பு உங்கள் படம் பத்திரிகளிலும் டிவியிலும் வரலாம். எல்லோரும் பார்ப்பார்கள்.
      அலுவலகத்தில் கழிவறை கண்ணாடியில் உங்களை நீங்கள் மட்டுமே பார்த்துகொள்ளமுடியும். இல்லையென்றால் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு பார்த்துகொண்டிருக்கலாம்.

      இப்போது சொல்லுங்கள்
      களி பெருசா இல்லை கள்ள நோட்டு பெருசா என்று.

      உடனடியாக பிரிண்டிங் மெசின் ஆர்டர் செய்ய சிவகாசிக்கு ஓடாதீர்கள். சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்.

      ஜெயில் ஜெயில்தான், அவமானம்தான், கேவலம்தான் மற்றும் ஊர் உலகத்தில் உள்ள எல்லா "தான்"களும் உண்டு. .

      எனவே சற்று நேரம் சிரித்து விட்டு நம்மிடம் வரும் நோட்டுகள் கள்ள நோட்டுகளா இல்லையா என்று அறிந்து கொள்வதற்கு மட்டும் அய்யா அவர்களின் பதிவை பயன்படுத்தலாம்.

      குருச்சந்திரன்

      நீக்கு
  7. கடைசி பஞ்ச் எப்பவுமே கலக்கலா அமையுது உங்களுக்கு! ஹாஹாஹா! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  8. ஹா.... ஹா... களி சாப்பிட வழி காண்பிக்கிறீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. தங்கள் நகைச்சுவை உணர்வே அலாதிதான்

    கள்ள நோட்டைக் கண்டறியும் வழிமுறைகள் அறிய இதோ ஓரு பதிவு
    கள்ள நோட்டைக் கண்டறிவது எப்படி?
    இது சீரியஸ் பதிவுதாங்கோ

    பதிலளிநீக்கு


  10. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!



    பதிலளிநீக்கு